search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஜன்செல்லப்பா எம்எல்ஏ"

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தினகரன் பார்முலா எடுபடாது என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தெரிவித்தார். #dinakaran

    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நீதிபதி எம்.எல்.ஏ., மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் நிலையூர் முருகன், அம்பலம், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் சிறப்பான திட்டங்களை தந்து வருகிறது. ஆனால் இந்த அரசு செயல்படாத அரசு என எதிர்க்கட்சிகள் பொய்யான பிரசாரத்தை கூறி வருகின்றன. இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    தமிழகத்தில் இனி அ.தி. மு.க. ஆட்சிக்குவராது என சிலர் கற்பனை உலகில் மிதக்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதல்- அமைச்சராகிவிட வேண்டும் என துடிக்கிறார். அவரது கனவு ஒருபோதும் பலிக்காது.

    மதுரை எப்போதுமே அ.தி.மு.க.வின் கோட்டை. திருப்பரங்குன்றத்தில் எதிர்பாராதவிதமாக ஒரு இடைத்தேர்தல் மீண்டும் வந்து இருக்கிறது. அங்கு கழகத்தின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். மற்ற அனைத் வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

    ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நாங்கள் அமைத்துக் கொடுத்த முன்னுரை காரணமாக அங்கே ஒருவர் வெற்றி பெற்றுவிட்டார்.


    அதேபோல் திருப்பரங்குன்றத்திலும் வெற்றி பெற்றுவிடலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவின் செல்லப்பிள்ளைகள் நிறைந்த திருப்பங்குன்றம் தொகுதி என்றும் இரட்டை இலை பக்கம்தான் இருக்கும்.

    ஆர்.கே.நகரில் வகுக்கப்பட்ட பார்முலா நிச்சயம் திருப்பரங்குன்றத்தில் எடுபடாது.

    இவ்வாறு அவர் பேசினார். #dinakaran

    ×