search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை வான்கடே மைதானம்"

    • கடந்த ஏப்ரல் மாதம் டெண்டுல்கர் தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினாா்.
    • வான்கடே ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டுல்கர் சிலை இன்று திறந்து வைக்கப்படுகிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் அதிக ரன் குவித்தவர் உள்பட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமைக்குரிய டெண்டுல்கர் மும்பையை சேர்ந்தவர் ஆவார். மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி முடிவடைந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக தனது 200-வது டெஸ்ட் போட்டியில் ஆடிய டெண்டுல்கர் அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.


    அவர் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 51 சதங்களுடன் 15, 921 ரன்னும், 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 சதங்களுடன் 18,426 ரன்களும் குவித்துள்ளார். 'சாதனை நாயகன்', 'கிரிக்கெட் கடவுள்' என்று வர்ணிக்கப்படும் டெண்டுல்கரை பெருமைப்படுத்தும் வகையில் மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள கேலரியின் ஒரு பகுதிக்கு டெண்டுல்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதம் டெண்டுல்கர் தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினாா். டெண்டுல்கரின் பொன்விழாவை கொண்டாடும் வகையில் வான்கடே மைதானத்தில் அவர் பெயர் சூட்டப்பட்ட பார்வையாளர் கேலரி அமைந்து உள்ள பகுதியில் அவருக்கு சிலை வைக்க மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. இதையடுத்து அங்கு டெண்டுல்கரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.

    மராட்டிய மாநிலம் அகமதுநகரை சேர்ந்த பிரபல சிற்ப கலைஞர் பிரமோத் காம்ளே அந்த சிலையை வடிவமைத்துள்ளார்.

    வான்கடே ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டுல்கர் சிலை இன்று திறந்து வைக்கப்படுகிறது.

    சிலை திறப்பு விழாவில் டெண்டுல்கர், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி அஜித்பவார் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

    • ஜூன் 7-ம் தேதி தொடங்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்கும்.
    • இந்திய அணியின் புதிய பிரம்மாண்ட ஜெர்சி மும்பை வான்கடே மைதானத்தில் தொங்க விடப்பட்டுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணிக்கான கிட் ஸ்பான்சராக நைக் நிறுவனம் கடந்த 2016-ல் இருந்து 2020 வரை இருந்தது. அதைத்தொடர்ந்து 2020-ல் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சராக எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இருந்து வந்த நிலையில் அதன் ஒப்பந்தம் முடிந்தது. இந்திய அணியின் மெயின் ஸ்பான்சராக பைஜூஸ் நிறுவனம் இருந்து வந்தது.

    அதனை தொடர்ந்து புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. வரும் ஜூன் 7-ம் தேதி தொடங்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்கும்.

    இந்நிலையில் இந்திய அணியின் புதிய பிரம்மாண்ட ஜெர்சி மும்பை வான்கடே மைதானத்தில் தொங்க விடப்பட்டுள்ளது. இதனை பலரும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன நடக்கிறது அங்கே என ஆச்சர்யமாக கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

    • வான்கடே மைதானத்தில் தான் சச்சின் தனது கடைசி போட்டியில் விளையாடினார்.
    • ஏப்ரல் 24-ம் தேதிக்குள் ஏற்பாடுகள் முடிந்துவிட்டால் ஐபிஎல் தொடரின் போது சிலை திறப்பு விழா நடைபெறும்.

    மும்பை:

    2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி முதல் தொடங்கி மே 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. லீக் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டிருந்தது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தலால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடைபெற்ற சூழலில், இந்த முறை அனைத்து அணிகளும் தங்களது ஹோம் மைதானத்தில் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து ரசிகர்களும் உற்சாகத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு மிகப்பெரிய சிலை ஒன்றை வான்கடே மைதானத்தில் நிறுவ உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    சச்சின் டெண்டுல்கர் வரும் ஏப்ரல் 24-ம் தேதியன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். எனவே அவருக்கு நினைவுப்பரிசாக இருக்கும் வகையில் இந்த சிலையை திறக்கவுள்ளனர். வான்கடே மைதானத்தில் தான் சச்சின் தனது கடைசி போட்டியில் விளையாடினார். இதற்காக அங்கு ஏற்கனவே சச்சின் டெண்டுல்கரின் பெயரில் பெவிலியன் இருக்கும் சூழலில் தற்போது கூடுதல் சிறப்பை சேர்க்கவுள்ளனர்.

    ஏப்ரல் 24-ம் தேதிக்குள் ஏற்பாடுகள் முடிந்துவிட்டால் ஐபிஎல் தொடரின் போது சிலை திறப்பு விழா நடைபெறும். இல்லையென்றால் அக்டோபரில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் போது இந்த விழாவை நடத்துவார்கள் எனக்கூறப்பட்டுள்ளது.

    கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் பாராட்டப்படும் சச்சின் தனது கிரிக்கெட் பயணத்தில் 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒருநாள் போட்டிகள், மற்றும் ஒரே ஒரு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அனைத்து வடிவ கிரிக்கெட்டையும் சேர்த்து மொத்தமாக 34,357 ரன்களை விளாசியுள்ளார். இதில் 100 சதங்கள் என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

    ×