மும்பை மைதானத்தில் தொங்கும் பிரம்மாண்ட ஜெர்சி.. ஷாக்கான ரசிகர்கள்.. வீடியோ வைரல்

ஜூன் 7-ம் தேதி தொடங்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்கும்.இந்திய அணியின் புதிய பிரம்மாண்ட ஜெர்சி மும்பை வான்கடே மைதானத்தில் தொங்க விடப்பட்டுள்ளது.
மும்பை மைதானத்தில் தொங்கும் பிரம்மாண்ட ஜெர்சி.. ஷாக்கான ரசிகர்கள்.. வீடியோ வைரல்
Published on

இந்திய கிரிக்கெட் அணிக்கான கிட் ஸ்பான்சராக நைக் நிறுவனம் கடந்த 2016-ல் இருந்து 2020 வரை இருந்தது. அதைத்தொடர்ந்து 2020-ல் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சராக எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இருந்து வந்த நிலையில் அதன் ஒப்பந்தம் முடிந்தது. இந்திய அணியின் மெயின் ஸ்பான்சராக பைஜூஸ் நிறுவனம் இருந்து வந்தது.

அதனை தொடர்ந்து புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. வரும் ஜூன் 7-ம் தேதி தொடங்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்கும்.

இந்நிலையில் இந்திய அணியின் புதிய பிரம்மாண்ட ஜெர்சி மும்பை வான்கடே மைதானத்தில் தொங்க விடப்பட்டுள்ளது. இதனை பலரும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன நடக்கிறது அங்கே என ஆச்சர்யமாக கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com