search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்கம்பங்கள் சேதம்"

    • அடையாளம் தெரியாத லாரி ஒன்று சாலையோரத்தில் இருந்த கேபிள் மற்றும் 2 கம்பங்களும் உடைந்து வேப்பனப்பள்ளி பேரிகை சாலையில் முறிந்து விழுந்தது.
    • கம்பங்கள் அகற்றபடமால் சாலையில் கிடந்ததால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே கடவரப்பள்ளி கிராமத்தின் சாலையோரங்களில் தனியார் நிறுவனத்தின் கேபிள்கள் கம்பங்கள் அமைக்கப்பட்டுருந்தது.

    இந்த நிலையில் அப்பகுதி வழியாக சென்ற அடையாளம் தெரியாத லாரி ஒன்று சாலையோரத்தில் இருந்த கேபிள் மற்றும் 2 கம்பங்களும் உடைந்து வேப்பனப்பள்ளி பேரிகை சாலையில் முறிந்து விழுந்தது.

    இதனால் இரவு முதல் ஆபத்தான முறையில் சாலையில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தும் நாள் முழுவதும் கம்பங்கள் அகற்றபடமால் சாலையில் கிடந்ததால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.

    மேலும் கேபிள் நாள் முழுவதும் சாலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சப்பட்டு பயணம் செய்து வருகின்றனர்.

    உடனடியாக தனியார் நிறுவன ஊழியர்கள் உடைந்த கம்பங்களை சாலையில் இருந்து அகற்றி கம்பங்களையும் கேபி ள்களையும் பாதுகப்பாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் சாலையில் உடைந்த விழுந்த கேபிள் கம்பங்த்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • போக்குவரத்து பாதிப்பு

    சோளிங்கர்:

    சோளிங்கர் வாலாஜா நெடுஞ்சாலையில் புத்தேரி அருகே நெடுஞ்சாலை ஓரமாக இருந்த பழமை வாய்ந்த புளியமரம் கிளை ஒன்று திடீரென முறிந்து அப்பகுதியில் நின்ற மின்கம்பம் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 மின்கம்பம் தேசமடைந்து நெடுஞ்சாலை குறுக்கே விழுந்தது.

    இதனால் சோளிங்கர் வாலாஜா போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மின்துறை ஊழியர்கள் மின் இணைப்பு துண்டித்தனர். நெடுஞ்சாலை ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையிலான பணியாளர்கள் விபத்துக்குள்ளான புளியமரக்கிளையை அகற்றினார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×