search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மினிலாரி"

    • புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக மினிலாரியில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
    • விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிசல்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார் சாலையோரத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த மினி லாரியை சோதனை செய்தனர்.

    அப்போது வாகனத்தின் வெளிப்புற நீளத்தை விட உட்புறத்தின் நீளம் சற்று குறைவாக இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தின் உள்ளே சென்று பார்த்ததில் வாகனத்தின் உட்புறம் ரகசிய அறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதனுள் இறங்கி சோதனையிட்டதில், விளாத்திகுளத்தை சேர்ந்த ஜெயராஜ் (வயது 47) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக மினிலாரியில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து உடனடியாக தனிப்படை போலீசார் ஜெயராஜை கைது செய்து அவரிடமிருந்த புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் மினிலாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட ஜெயராஜ் மீது ஏற்கனவே விளாத்தி குளம் போலீஸ் நிலையத்தில் மட்டும் புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் என 10 வழக்குகளும், எட்டையபுரம் போலீஸ் நிலையத்தில் 1 வழக்கும், புதூர் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், பசுவந்தனை போலீஸ் நிலையத்தில் 1 வழக்கும், மதுரை மாவட்டம் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் 1 வழக்கும், அண்ணாநகர் காவல் போலீஸ் நிலையத்தில் 1 வழக்கும், விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் 1 வழக்கும், சாத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் 1 வழக்கும், சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் 1 வழக்கும் என 19 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பல முறை கைது செய்த பின்னரும் ஜெயராஜ், பெங்களூர் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகளவில் தென்மாவட் டங்களுக்கு கடத்தி வந்து விளாத்திகுளம் மட்டுமின்றி பல பகுதிகளில் உள்ள பெட்டிக்கடை களுக்கு மொத்தமாகவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் போன்ற சிறார்களுக்கு சில்லறையாகவும் விற்பனை செய்து வருவதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

    • வாழைதார் லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி நள்ளிரவு 12 மணிக்கு சேலம் மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்தது.
    • தொப்பூர்-வெள்ளாறு செல்லும் வழியில் உள்ள சின்னம்கம்மம்பட்டியில் மினிலாரி சென்றபோது மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    மேட்டூர்:

    ஈேராடு மாவட்டம் அந்தியூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வாழைதார் லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி நள்ளிரவு 12 மணிக்கு சேலம் மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்தது.

    அப்போது சேலம் மாவட்டம் தாரமஙகலம் அருகே உள்ள செலவடை பகுதிைய சேர்ந்த வல்லரசு (23), கார்த்திக் (26) ஆகிய 2 பேரும் கிருஷ்ணகிரியில் இருந்து ஊருக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிந்தனர்.

    தொப்பூர்-வெள்ளாறு செல்லும் வழியில் உள்ள சின்னம்கம்மம்பட்டியில் மினிலாரி சென்றபோது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான வல்லரசு, கார்த்திக் ஆகியோர் உடல்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் முத்துசாமி (46) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீரசோழபுரம் சுங்கச்சாவடி அலுவலக பகுதியில் சாலையில் வெள்ளை கோடுகள் போடும் பணி நடைபெற்று வருகிறது
    • அப்போது கொதிகலன் திடீரென வெடித்து சிதறி தீ பற்றி எறிந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரம் சுங்கச்சாவடி அலுவலக பகுதியில் சாலையில் வெள்ளை கோடுகள் போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை மினி லாரியில் வெள்ளை கோடு போடுவதற்கான பவுடர்களை கொதிகலன் மூலம் சூடேற்றும் பணி நடந்தது.  அப்போது கொதிகலன் திடீரென வெடித்து சிதறி தீ பற்றி எறிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மினி லாரியில் தீ பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் போராடி அணைத்தனர். மேலும் இந்த விபத்தில் கொதிகலன் சூடேற்றும் பணியில் ஈடுபட்டு இருந்து படுகாயமடைந்த கும்பகோணம் மாவட்டம் சோழபுரம் அருகே மானப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 48), பாண்டியன் மகன் சுந்தர் (22) ஆகியோரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலையில் வெள்ளை கோடு போடும் பணியில் ஈடுபட்டபோது லாரியில் இருந்த கொதிகலன் வெடித்து தொழிலாளர்கள் 2- பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சுங்கச்சாவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மோட்டார் சைக்கிளில் சங்க ராபுரம்-பூட்டை சாலையில் உள்ள செல்போன் கடைக்கு சென்றார்.
    • மினிலாரி அண்ணாமலை மீது எதிர்பாராதவிதமாக மோதியது

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 34). மளிகைக்கடை நடத்தி வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சங்க ராபுரம்-பூட்டை சாலையில் உள்ள செல்போன் கடைக்கு சென்றார். பின்னர் அவர் கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தனது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்து விட்டு, மீண்டும் மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மினிலாரி அண்ணாமலை மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சங்கராபுரம் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அண்ணாமலையை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தியாகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×