search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாசுப்பிரமணியன்"

    • ரத்தத்தை எடுத்து ஓவியமாக வரைவதை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர்.
    • அன்பை, நட்பை, காதலை வெளிபடுத்துவதற்கு ஏராளமான வழிகள் உள்ளது.

    திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது:

    தற்பொழுது இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஒரு புதிய கலாச்சாரம் ஒன்று தலை தூக்கியுள்ளது. ரத்தத்தை எடுத்து ஓவியம் வரைந்து விரும்புவர்களுக்கு அனுப்புவது. குறிப்பாக காதலன் காதலிக்கு அனுப்புவது, காதலி காதலனுக்கு அனுப்புவது போன்ற பழக்கம் புதியதாக வந்துக் கொண்டிருக்கிறது. அதனை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர்.

    இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ரத்ததானம் என்பது பல உயிர்களை காக்க பயன்படுகிறது. எனவே அந்த ரத்தத்தை வைத்து ஓவியம் வரைவது சரியான அணுகுமுறையல்ல. உடலில் உள்ள இரத்தத்தை எடுக்கும் போது மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களின், அதற்கு தேவையான ஊசியினை முறையாக பயன்படுத்தி ரத்தத்தை எடுத்து, பாதுகாப்பார்கள்.

    ஆனால், ஓவியத்திற்காக எடுக்கப்படும் ரத்தம் என்பது முறையாக பாதுகாப்பு இல்லாத ஒன்றாகும். அதோடுமட்டுமல்லாமல் ரத்தம் எடுக்க பயன்படுத்துகின்ற ஊசி எத்தனை பேருக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியாது.

    எனவே விதிமுறைகளின்படி இந்த ரத்தம் எடுக்காத நிலையில் அந்த ரத்தத்தை படம் வரைவதற்கு கையாளும்பொழுது, அந்த ரத்தம் எச்.ஐ.வி போன்ற நோய் பாதிப்பிற்கு உள்ளானவர்களிடமிருந்து எடுக்கப்பட்டால் அது பலரை தாக்கி, பாதிப்பிற்குள்ளாக்கும்.

    எனவே இந்த தகவல் தெரிந்தவுடன் சென்னை வடபழனி மற்றும் தியாகராயநகர் பகுதியில் இருக்கின்ற ரத்த ஓவிய நிறுவனங்களை மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள். அங்கிருந்து அதற்காக பயன்படுத்தப்படுகின்ற ரத்த குப்பிகள், ஊசி, வரைந்து வைத்திருந்த படங்களை எல்லாம் பறிமுதல் செய்து, அவர்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது.

    இதோடு இந்த தொழிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் நிறுவனம் அல்லது கடைகளுக்கு சீல் வைக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓவியத்தை வரைவதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றது, ரத்தத்தை எடுத்துதான் வரைய வேண்டும் என்றில்லை.

    ரத்தம் என்பது பல உயிர்களை காக்க பயன்படுகிறது. எனவே இந்த ரத்த ஓவிய நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப் படுகிறது. இதை யாராவது மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இளைஞர்கள் ரத்த ஒவியத்தின் மீது ஆர்வம் காட்டக்கூடாது, மேலும் இதை வரையும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    அன்பை பரிமாறிக்கொள்வதற்கு, நட்பை வெளிப்படுத்திக்கொள்வதற்கு, காதலை வெளிபடுத்துவதற்கு ஏராளமான வழிகள் உள்ளது, ரத்த ஓவியம் வரைந்துதான் அதனை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • டாக்டர் குமரேசனிடம் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்றுள்ளனர்.
    • குரல் மாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு அரிய சிகிச்சை வழங்கப்படும்.

    டாக்டர் எம்.குமரேசன், கே.நவீன்பாரத் ஆகியோர் எழுதிய மகரக்கட்டு மருத்துவம், கீச்சுக்குரலுக்கு புதிய எளிய சிகிச்சை என்ற புத்தகம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:- 


    டாக்டர் எம்.குமரேசன் ஆதாரப்பூர்வமாக மருத்துவ சிகிச்சையை மேற் கொண்டு வருகிறார். அவர் 1,010 பேருக்கு குரல் சிகிச்சை அளித்து, அவர்களின் மனநிலையை மாற்றம் செய்து இருக்கிறார். இந்தியா முழுவதும் மட்டுமல்லாது, வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இவரிடம் சிகிச்சை பெற்று நலம் பெற்று இருக்கிறார்கள். இந்த சிகிச்சை முறையை அவர் 2 பேருக்கு சொல்லி கொடுத்து இருப்பதாக கூறினார்.

    அவருடைய ஆற்றலை இன்னமும் பல நூறு பேருக்கு பயிற்றுவித்து இருக்க வேண்டும். டாக்டர் குமரேசன் மூலம் பலர் பயிற்சி பெற வேண்டும். கீச்சுக்குரலில் இருந்து கம்பீர குரலுக்கு மாற எவ்வளவோ பேர் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் குரல் மாற்றத்தை ஏற்படுத்துகிற இந்த அரிய சிகிச்சை குறித்து விரைவில் முதலமைச்சரிடம் தெரிவித்து, தமிழக மருத்துவ துறையில் சிறப்பு சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்படும். டாக்டர் குமரேசன் மூலம் ஏராளமான டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மருத்துவ அறிவியல் கழகத் தலைவர் டாக்டர் கமலி ஸ்ரீபால், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் ஐ.லியோனி, ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழுவின் தலைவர் பி.ஜோதிமணி, டாக்டர்கள் சொக்கலிங்கம், கே.காந்தராஜ், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், சென்னைவாழ் நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்து கோரிக்கை விடுக்க முடிவு.
    • நடப்பாண்டில் கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்க நடவடிக்கை.

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் தரம் உயர்த்தப்பட்ட ரேடியோ கதிரியக்கவியல் துறை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    கடந்த ஆண்டு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் வாயிலாக தமிழகத்திற்கு கூடுதலாக 1500 இடங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. ஒரே ஆண்டில் கூடுதலாக இவ்வளவு மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பது மருத்துக் கல்லூரி வரலாற்றில் இதுதான் முதன்முறை. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மட்டும்தான் 1500 மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற்று இருக்கிறது.

    நடப்பாண்டில் கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டஙகளில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் வகையில், தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிபேட்டை உள்பட 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி அமைக்க, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×