search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரின் சிலிச்"

    ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஒபன் டென்னிஸ் தொடர் காலிறுதியில் ஜோகோவிச் - மரின் சிலிச் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றன. #MadridOpen
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு  முந்தைய சுற்றில் முதல் நிலை வீரரான ஜோகோவிச் சார்டியை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-1, 7(7) - 6 (2) என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் 9-ம் நிலை வீரரான மரின் சிலிச் லாஸ்லோ டேர்-ஐ எதிர்கொண்டார். முதல் செட்டை மரின் சிலிச் 4-6 என அதிர்ச்சிகரமாக தோற்றார். அதன்பின் சுதாரித்துக்கொண்ட சிலிச் 2-வது செட்டை 6-3 எனவும், 3-வது செட்டை 6-2 எனவும் கைப்பற்றி பெற்றி பெற்றார்.



    6-ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷிகோரி வாவ்ரிங்காவிடம் 6-3, 7(7)-6(3) என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். 5-ம் நிலை வீரரான தியெம் 6-4, 7-5 என போக்னினியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதியில் 1-ம் நிலை வீரரான ஜோகோவிச் 9-ம் நிலை வீரரான மரின் சிலிச்சை எதிர்த்து விளையாடுகிறார். ரோஜர் பெடரர் தியெம்-ஐ எதிர்த்தும், அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் டிசிட்சிபாஸ்-ஐ எதிர்த்தும் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் மூன்றேகால் மணி நேரம் போராடி தோல்வியை சந்தித்துள்ளார் 3-ம் நிலை வீரர் மரின் சிலிச். #Wimbledon2018 #Cilic
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த முறை 2-ம் இடம் பிடித்தவரும், 3-ம் நிலை வீரரும் ஆன குரோசியாவின் மரின் சிலிச், தரநிலை பெறாத அர்ஜென்டினாவின் கிடோ பெல்லாவை எதிர்கொண்டார்.

    முதல் இரண்டு செட்டுகளையும் மரின் சிலிச் 6-3, 6-1 என எளிதில் கைப்பற்றினார். இதனால் 3-வது செட்டை கைப்பற்றி 3-வது சுற்றுக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 2-வது செட் முடிவடைந்த பின்னர் பெல்லா ஆட்டத்தில் அனல் பறந்தது. மரின் சிலிச்சை அதிர வைத்தார். 3-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். 4-வது செட்டிலும் கடும் போட்டி கொடுத்தார். மரின் சிலிச்சும் பதிலடி கொடுக்க ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் பெல்லா 7(7) - 6 (3) என கைப்பற்றினார்.



    இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 5-வது செட்டில் இருவரும் களம் இறங்கினார்கள். இதிலும் மரின் சிலிச்சால் ஜொலிக்க முடியவில்லை. 5-வது செட்டை 5-7 என இழந்தார். இதனால் கடைசி மூன்று செட்டுகளை தொடர்ந்து இழந்து 2-வது செட்டோடு விடைபெற்றார் மரின் சிலிச்.

    மரின் சிலிச்சை வெளியேற்றிய பெல்லா இதுவரை கிராண்ட் ஸ்லாம் தொடரில் 2-வது சுற்றை தாண்டியதே கிடையாது. தற்போது 3-ம் நிலை வீரரை வீழ்த்தி 3-வது சுற்றிற்கு முன்னேறியுள்ளார்.
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் சுவிட்சர்லாந்து வீரர் பெடரர், குரோஷியா வீரர் மரின் சிலிச் ஆகியோர் வெற்றி பெற்றனர். #RogerFederer #MarinCilic
    லண்டன்:

    ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் உயரியதும், கவுரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது.

    இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), உலக தரவரிசையில் 57-வது இடத்தில் இருக்கும் செர்பியாவின் டுசன் லாஜோவிச்சை சந்தித்தார். இதில் பெடரர் 6-1, 6-3, 6-4 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.



    மற்றொரு ஆட்டத்தில், கடந்த ஆண்டில் 2-வது இடம் பிடித்தவரான மரின் சிலிச் (குரோஷியா) 6-1, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீரர் யோஷிஹிடோ நிஷிகாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் சாம் குயரி 6-2, 6-4, 6-3 என்ற நேர்செட்டில் ஜோர்டான் தாம்சனை (ஆஸ்திரேலியா) வீழ்த்தினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-0, 6-3 என்ற நேர்செட்டில் வர்வரா லெப்செங்கோவை (உஸ்பெகிஸ்தான்) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில், கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவரான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 1-6, 3-6 என்ற நேர்செட்டில் குரோஷியா வீராங்கனை டோனா வெகிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் 6-4, 6-2 என்ற நேர்செட்டில் அஜ்லா டாம்ஜனோவிச்சை(ஆஸ்திரேலியா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.  #RogerFederer #MarinCilic #tamilnews
    லண்டனில் நடைபெற்ற குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், குரோசியா வீரர் மரின் சிலிச், ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். #QueensClubChampionships #MarinCilic #NovakDjokovic

    லண்டன்:

    குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் போட்டிகள் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது.

    இறுதிப்போட்டியில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச், குரோசியா வீரர் மரின் சிலிச்சை எதிர்கொண்டார். இப்போட்டியில் இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் செட்டை 7-5 என ஜோகோவிச் போராடி கைப்பற்றினார். 



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டும் விறுவிறுப்பாக இருந்தது. இந்த செட்டை சிலிச் 7-6 (6-4) என போராடி கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் இறுதி செட்டில் சிலிச் அதிரடியாக விளையாடினார். இறுதியில் அந்த செட்டை சிலிச் 6-3 என கைப்பற்றினார்.

    இதனால் 5-7, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சிலிச் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். #QueensClubChampionships #MarinCilic #NovakDjokovic
    லண்டனில் நடைபெற்றுவரும் குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார். #QueensClubChampionships #NovakDjokovic #MarinCilic

    லண்டன்:

    குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் போட்டிகள் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இத்தொடரில் இன்று அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    ஒரு அரையிறுதி ஆட்டத்தில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச், பிரான்ஸ் வீரர் ஜெர்மி சார்டியை எதிர்கொண்டார். இப்போட்டியில் இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் செட்டை 7-6 (7-5) என போராடி ஜோகோவிச் கைப்பற்றினார். 

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டும் விறுவிறுப்பாக இருந்தது. இறுதியில் 6-4 என அந்த செட்டையும் ஜோகோவிச் கைப்பற்றினார். இதனால் 7-6 (7-5), 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.



    முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் குரோசியா வீரர் மரின் சிலிச் வெற்றி பெற்றார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜோகோவிச் - சிலிச் பலப்பரீட்சை செய்கின்றனர். #QueensClubChampionships #NovakDjokovic #MarinCilic
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ரபெல் நடால் மற்றும் மரின் சிலிச் ஆகியோர் பங்கேற்ற காலிறுதி போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டன. #FrenchOpen #QuarterFinal #RafaelNadal #MarinCilic
    பாரிஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
    தற்போது காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் மற்றும் அர்ஜெண்டினாவின் டிகோ ஷ்வர்ட்ஸ்மான் மோதினர்.



    இதில், முதல் செட்டில் அர்ஜெண்டினா வீரர் கைப்பற்றினார். இதையடுத்து, ஆக்ரோஷமாக ஆடிய நடால் 5-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றபோது மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

    இதேபோல், மற்றொரு ஆட்டத்தில் குரோசியா வீரர் மரின் சிலிச் மற்றும் அர்ஜெண்டினாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவும் மோதினர். முதல் சுற்றில் 6-6 என்ற கணக்கில் சமநிலை வகித்தபோது, மழையால் ஆட்டம் தடைபட்டது. இந்த ஆட்டங்கள் மறுநாள் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். #FrenchOpen #QuarterFinal #RafaelNadal #MarinCilic
    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ரபெல் நடால், மரின் சிலிச் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினார்கள். #ItalianOpen #Nadal
    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஒன்றில் முதல் நிலை வீரரான ரபெல் நடால் இத்தாலியின் பபியோ ஃபோக்னினியை எதிர்கொண்டார்.

    சொந்த நாட்டில் விளையாடிய ஃபோக்னினி ரபெல் நடாலுக்கு சற்று நெருக்கடி கொடுத்தார். முதல் செட்டில் ஃபோக்னினி சிறப்பாக விளையாடி 6-4 என வெற்றி பெற்றார். ஆனால், நடால் அடுத்த இரண்டு செட்டுகளை 6-1, 6-2 என எளிதில் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.



    மற்றொரு அரையிறுதியில் குரோஷியாவின் மரின் சிலிச் ஸ்பெயினின் பப்லோ கர்ரெனோ பஸ்டாவை எதிர்கொண்டார். இதில் மரின் சிலிச் 6-3, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ஜோகோவிச் - நிஷிகோரி பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    ×