search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போட்டியின்றி தேர்வு"

    • திருப்பத்தூர் அருகே பேரூராட்சி தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
    • இதில் போட்டியிட மன்ற உறுப்பினர்கள் யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சியில் மன்ற தலைவராக பதவி வகித்த அ.புசலான் திடீரென உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் பேரூராட்சிக்கு துணை சேர்மனாக பதிவி வகித்த கே.பி.எஸ். பழனியப்பன் கடந்த மாதம் 30-ந்தேதி பொறுப்பு சேர்மனாக பதவி ஏற்று கொண்டார்.

    தொடர்ந்து புதிய சேர்மன் பதவிக்காக போட்டியிடுவதற்கான அறிவிக்கையை செயல் அலுவலர் உமா மகேஸ்வரன் வெளியிட்டார். இதில் போட்டியிட மன்ற உறுப்பினர்கள் யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.

    இதையடுத்து பொறுப்பு சேர்மனாக பதவி வகித்து வந்த பழனியப்பன் ஒரு மனதாக புதிய சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி சான்றிதழை அவரிடம் செயல் அலுவலர் வழங்கினார்.

    இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் கண்ணன், சேக்கப்பன், நிலோபர்நிஷா, கணேசன், சித்ரா தேவி, அமுதா, அழகு, பாப்பா, குமார், தன பாக்கியம், இளநிலை உதவியாளர் சேர லாதன், வரி தண்டர் துரைராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சாமி கண்ணு, வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், ஒன்றிய அவைத் தலைவர் திருநாவுக்கரசு, ஒன்றிய கவுன்சிலர் ராம சாமி, கருப்பையா நெற்குப்பை இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன், சப்- இன்ஸ்பெக்டர்கள் மாணிக் கம், முருகேசன், ஜெய்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நரிக்குடி ஒன்றிய சேர்மனாக தி.மு.க. கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
    • அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் மொத்தம் 14 கவுன்சிலர்கள் உள்ளனர்.இதில் 6 அ.தி. மு.க. உறுப்பினர்களும், 6 தி.மு.க. உறுப்பினர்களும், அ.ம.மு.க., சுயேட்சை தலா ஒரு உறுப்பினர்களும் உள்ள னர்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் அருப்புக் கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகுமார் தலைமை யில் நடைபெற்ற கவுன்சிலர் கள் கூட்டத்தில் நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்ச வர்ணம் மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    மொத்தமுள்ள 14 கவுன்சிலர்களில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கவுன்சி லர்கள் உள்பட 12 கவுன்சி லர்கள் பஞ்சவர்ணத்துக்கு எதிராக கையெழுத் திட்டனர். இதுகுறித்து நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்சவர்ணத்தை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு தமிழக அரசி தழிலும் வெளியிடப்பட்டது.

    இதனையடுத்து நரிக்குடி ஒன்றிய சேர்மன் பதவி காலியாக அறிவிக்கப்பட்ட நிலையில் நிர்வாக நலன் கருதி நரிக்குடி ஒன்றிய துணை சேர்மனாக இருந்த அம்மன் பட்டி ரவிச்சந்திரனை நரிக்குடி ஒன்றிய சேர்மனாக (பொறுப்பு) செயல்பட மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் உத்தரவு பிறப்பித்தார்.

    இன்று (23-ந் தேதி) நரிக்குடி ஒன்றிய சேர்மனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி இன்று தேர்தலுக்கான ஏற்பாடுகள் நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் செய்யப்பட்டிருந்தது. காலை 10.30 மணிக்கு தி.மு.க.வை சேர்ந்த 6 கவுன்சிலர்களும், அ.தி.மு.க.வை சேர்ந்த 4 கவுன்சிலர்களும், ஒரு சுயேட்சை கவுன்சிலர்களும் வந்தனர். அதனை தொடர்ந்து தேர்தல் நடந்தது.

    அப்போது நரிக்குடி ஒன்றிய 3-வது வார்டு கவுன்சிலர் காளீஸ்வரி சமயவேலு போட்டி யிடுவதாக அறிவித்தார். இதற்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட 11 கவுன்சி லர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து காளீஸ்வரி சமயவேலு நரிக்குடி ஒன்றிய சேர்மனாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • இளையான்குடி பேரூராட்சி தலைவர், துணைதலைவர் போட்டியின்றி தேர்வாயினர்.
    • அவர்களுக்கு, தமிழரசி எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சி யில் பெண்தலைவர் மற்றும் துணை தலைவராக இருந்த செய்யதுஜமிமா, சபுரியத்பீவி ஆகியோர் கடந்த மாதம் ராஜினாமா செய்து பதவிவிலகினார்கள். அதைதொடர்ந்து 13-வதுவார்டில் இடைதேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. நகர்செயலாளர் நஜீமுதின் மற்றும்14வதுவார்டு தி.மு.க. கவுன்சிலர் இபுராஹிம் ஆகியோர்பேரூராட்சி உறுப்பினர்களால் இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் போட்டியின்றி தலைவர், துணைதலைவராக தேர்வு செய்யப்பட்டனர்.

    புதிதாக தேர்வு செய்யப்பட்ட பேரூராட்சி தலைவர் நஜீமுதின், துணைத்தலைவர் இபுராஹிம் ஆகியோருக்கு மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ. ஒன்றியசெயலாளர் சுபமதியரசன், பேரூராட்சி செயல்அலுவலர் கோபிநாத், மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    • 5 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • வாக்கு எண்ணிக்கை 12-ந் தேதி நடைபெறுகிறது

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 7 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் அம்மாபட்டி ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர் பதவிககு ரா.கேசவன், மொடக்கூர் மேற்கு ஊராட்சி 5- வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பா.வீரமணி, குளித்தலை ஊராட்சி ஒன்றியம் குமாரமங்கலம் ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.சுதா, தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் கருப்பம்பாளையம் ஊராட்சி 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பா.சாந்தி, பள்ளபாளையம் ஊராட்சி 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆ.கருணாகரன் ஆகியோர் போட்டியின்றி நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இன்று (ஜூலை 9) க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் புன்னம் ஊராட்சி 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ஆலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் கிரு ஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் வீரியபாளையம் 7வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை யக்கவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 12-ந் தேதி சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறுகிறது.    

    • ஊரக உள்ளாட்சிபதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.
    • தா.பேட்டை ஒன்றியம் சிட்டிலரை ஊராட்சியை சேர்ந்த 9-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் ரமேஷ் என்பவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஒன்றியம் சிட்டிலரை ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினராக இருந்த ஆண்டியப்பன் இறந்து விட்டார். இதையடுத்து ஊரக உள்ளாட்சிபதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதில் தா.பேட்டை ஒன்றியம் சிட்டிலரை ஊராட்சியை சேர்ந்த 9-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் ரமேஷ் என்பவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து 9-வது வார்டு உறுப்பினராக ரமேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    பின்னர் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை ரமேஷிடம் வழங்கினர். ஒன்றிய திட்ட ஆணையர் குணசேகரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியம், ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளராக சரவணமுருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
    • தேர்தல் ஆணையாளர் சீனிவாசன், சரவணமுருகனிடம் சான்றிதழை வழங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளராக சங்கரபாண்டியபுரத்தை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலரான எம்.ஏ.பி. சரவணமுருகன் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ளார்.

    விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் தேர்தல் ஆணையாளர் சீனிவாசன், சரவணமுருகனிடம் சான்றிதழை வழங்கினார்.

    கிழக்கு ஒன்றிய அவைத்தலைவராக குருசாமி, பொருளாளராக விவேகானந்தன், துணை செயலாளராக ராஜா விக்னேஷ் ராமேஸ்வரி, மாவட்ட பிரதிநிதியாக முத்து, மாமுண்டி, வேல்முருகன், லட்சுமணன், ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணமுருகன் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு,தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

    ×