தா.பேட்டை சிட்டிலரை ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு

ஊரக உள்ளாட்சிபதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. தா.பேட்டை ஒன்றியம் சிட்டிலரை ஊராட்சியை சேர்ந்த 9-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் ரமேஷ் என்பவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
தா.பேட்டை சிட்டிலரை ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு
Published on

திருச்சி:

திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஒன்றியம் சிட்டிலரை ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினராக இருந்த ஆண்டியப்பன் இறந்து விட்டார். இதையடுத்து ஊரக உள்ளாட்சிபதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் தா.பேட்டை ஒன்றியம் சிட்டிலரை ஊராட்சியை சேர்ந்த 9-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் ரமேஷ் என்பவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து 9-வது வார்டு உறுப்பினராக ரமேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை ரமேஷிடம் வழங்கினர். ஒன்றிய திட்ட ஆணையர் குணசேகரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியம், ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com