search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுநல மனு"

    • விளம்பரநோக்கில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
    • அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை.

    புதுடெல்லி:

    நாட்டின் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய உத்தரவிட கோரி இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

    மனுவை இன்று பரிசீலனை செய்த நீதிபதிகள், விளம்பர நோக்கில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன், மனுவை திரும்ப பெற அனுமதியளித்து, மனுவை தள்ளுபடி செய்தனர். பொதுநல மனுவை திரும்ப பெறாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் எனவும் மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

    தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு நேற்று அரசாரணை பிறப்பித்தது. துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிப்பார்கள் என டிஜிபி இன்று அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும், பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 கோடி அளிக்க வேண்டும், துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், பணியில் இருக்கும் நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளுடன் ரஜினிகாந்த் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் இன்று பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

    இதே கோரிக்கையுடன் டிராபிக் ராமசாமி உள்ளிட்டவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். மேற்கண்ட மூன்று மனுக்களும் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
    ×