இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய கோரி மாணவி மனு தாக்கல்- விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்

விளம்பரநோக்கில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை.
இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய கோரி மாணவி மனு தாக்கல்- விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்
Published on

புதுடெல்லி:

நாட்டின் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய உத்தரவிட கோரி இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை இன்று பரிசீலனை செய்த நீதிபதிகள், விளம்பர நோக்கில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன், மனுவை திரும்ப பெற அனுமதியளித்து, மனுவை தள்ளுபடி செய்தனர். பொதுநல மனுவை திரும்ப பெறாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் எனவும் மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com