search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேட்டரி கார்"

    • கன்னியாகுமரியிலும் இயக்க நடவடிக்கை
    • நாளை முதல் தொடக்கம்

    நாகர்கோவில் :

    தென்னக ரெயில்வே யில் ஏ கிரேட் அந்தஸ்தில் நாகர்கோவில் ரெயில் நிலையம் உள்ளது. நாகர்கோவில் ரெயில் நிலையத்தி லிருந்து சென்னை, கோவை போன்ற பெரு நகரங் களுக்கும், மும்பை, பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியூர் களுக்கு செல்வதற்கு ரெயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

    குறிப்பாக மாலை நேரங்களில் சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட மாலையில் வெளி யூருக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் கூட்டம் அதிகமாக காணப் படும். இந்த ரெயில் நிலை யத்தில் முதலாவது பிளாட் பாரத்தில் இருந்து இரண் டாவது பிளாட்பாரத்திற்கு செல்வதற்கு எக்ஸ்லெக்டர் வசதி மட்டும் உள்ளது. மேலும் ரெயில் நிலை யத்தில் லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ஏற்கனவே பேட்டரி கார் இயக்கப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென பேட்டரி கார் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பேட்டரி காரை இயக்க வேண்டும் என்று பயணிகள் சங்கத்தி னரும் சட்டமன்ற உறுப்பி னர்களும் கோரிக்கை வைத்து வந்தனர்.

    பேட்டரி கார் வசதி இல்லாததால் ரெயில் நிலையத்தில் ரெயிலை விட்டு இறங்கும் முதிய வர்கள், கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள் ளாகி வந்தனர். ரெயிலை விட்டு இறங்கி நீண்ட தூரம் நடக்க வேண்டிய நிலை இருப்பதால் அவர்கள் அவதிக்குள்ளானார்கள்.

    இந்த நிலையில் மீண்டும் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பேட்டரி கார் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக டெண்டர் பிறப பிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 2 பேட்டரி கார்கள் நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு உள் ளது. பயணிகளின் நலன் கருதி ரெயில்வே பிளாட் பாரங்களில் பேட்டரி கார் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

    நாளை (6-ந்தேதி) முதல் பிளாட்பாரத்தில் பேட்டரி கார் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ள தாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

    மேலும் பேட்டரி காருக் கான கட்டணத்தை நிர்ண யம் செய்வது தொடர்பாக ஆலோசனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. குறைந்த கட்டணத்தை பேட்டரி காருக்கு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது ரெயில் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

    நாகர்கோவில் ரெயில்வே யில் பேட்டரி கார் இயக்கப் படும்போது ரெயில் பயணி களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெரு நகரங்களுக்கு ஈடாக நாகர்கோவிலில் பேட்டரி கார் இயக்கப்படுவது பயணி களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    இதேபோல் சர்வதேச சுற்றுலா தலமாக கருதப்ப டும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலும் பேட்டரி கார் வசதி இல்லாமல் சுற்று லா பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். வெளி மாநி லங்களில் இருந்து வரும் பயணிகள் மட்டும் இன்றி உள்ளூர் பயணிகளும் அவதிப்பட்டு வருவதால் பேட்டரி கார் இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவ டிக்கை மேற்கொண்டது. இங்கும் பேட்டரி காரை இயக்குவதற்கு டெண்டர் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 2 பேட்டரி கார்களை கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவிலில் டெண் டர் எடுத்த அதே நிறுவனமே கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலும் பேட்டரி கார் இயக்க டெண்டர் எடுத்துள்ளது. அங்கும் ஓரிரு நாட்களில் பேட்டரி கார் இயக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகை யில், நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ஏற்கனவே தனியார் மூலம் பேட்டரி கார் இயக்கப்பட்டு வந்தது. அதற்கான ஒப்பந்த காலம் நிறைவடைந்தது பிறகு பேட்டரி கார் இயக்குவது நிறுத்தப்பட்டது.

    தற்பொழுது நாகர்கோ வில், கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் பேட்டரி கார் இயக்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ஒரே நிறுவனமே அதற்கு டெண்டர் எடுத்துள்ளது.

    நாகர்கோவிலில் இயக்கு வதற்கான பேட்டரி கார் கொண்டு வந்துள்ள நிலை யில் நாளை முதல் அந்த பேட்டரி காரை இயக்க நடவடிக்கை எடுக்கப் படும். அதற்கான கட்ட ணத்தை காண்ட்ராக்ட் எடுத்த நிறுவனமே முடிவு செய்யும் என்றார்.

    • மாற்றுத்திறனாளிகள், முதியோர் பயணிக்க ஏற்பாடு
    • பேட்டரி காரில் சென்று அங்கு உள்ள பச்சை புல்வெளிகளை கண்டு மகிழ்ந்தனர்

    ஊட்டி,

    சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி விளங்கு கிறது.

    இங்கு ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடக்கும். செப்டம்பர், அக்டோபரில் 2-வது சீசன் களைகட்டும். ஊட்டியில் தற்போது, 2-வது சீசன் தொடங்கி உள்ளதால் அங்கு சுற்றுலா பயணி களின் வருகை கணிசமாக அதிகரித்து உள்ளது.

    நீலகிரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு பல்வேறு நாடுகளில் அரிதாக காணப்படும் தாவரங்கள் நடப்பட்டு பராம ரிக்கப்பட்டு வரு கின்றன.

    அதிலும் குறிப்பாக இத்தாலியன் பூங்கா, கண்ணாடி மாளிகை, பெரணி இல்லம், பெரிய புல்வெளி மைதானம் ஆகி யவை, சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக உள்ளது. ஊட்டி தாவர வியல் பூங்காவுக்கு வரும் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், கைக்குழந்தை களுடன் வரும் பெண்கள் ஆகியோர் மேடான பகுதி யில் உள்ள இத்தாலி யன்பூங்கா உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கு பூத்திருக்கும் மலர்களை கண்டு ரசிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.

    இதனை கருத்தில் கொண்டு மாற்றுத்திறனா ளிகள், முதியவர்களின் வசதிக்காக பேட்டரி வாக னத்தை அறிமுகப்படுத்து வது என பூங்கா நிர்வாகம் முடிவு செய்தது.

    அதன்படி ஊட்டி தாவரவியல் பூங்காவில் பேட்டரி கார் சேவை தற்போது அமலுக்கு வந்து உள்ளது.

    இதில் சுமார் 6 பேர் அமர்ந்து பூங்காவை சுற்றிப்பார்க்க இயலும்.

    எனவே சுற்றுலா பயணி கள் தற்போது பேட்டரி காரில் பயணித்து, தாவிர வியல் பூங்காவை சுற்றி வந்து, அங்கு உள்ள மலர்கள் மற்றும் பச்சை புல்வெளிகளை கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.

    • விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது
    • 6 போ் அமா்ந்து பயணிக்கக் கூடிய பேட்டரி காா் ஒன்று வாங்கியுள்ளனா்.

    ஊட்டி:

    சா்வதேச புகழ்பெற்ற ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவில் கோடை சீசன் காலங்களான ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும், இரண்டாவது சீசன் காலமான செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதங்களிலும் சுற்றுலாப் பயணிகன் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும்.

    அதேபோல, மற்ற மாதங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருக்கும். சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க கொல்கத்தா, காஷ்மீா், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட 60 ரகங்களிலான பல்வேறு வகையான லட்சக்கணக்கான மலா்கள் பூந்தொட்டிகளிலும், மலா் பாத்திகளிலும் தயாா்படுத்த ப்படுகின்றன.தற்போது, ஊட்டியில் இரண்டாவது சீசன் தொடங்கி உள்ள சூழலில் ஓணம் பண்டிகைக்கான தொடா் விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் பூங்காவுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், வயதானவா்கள் பூங்காவில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மலா்களை ரசிக்க சிரமப்பட்டு வந்தனா். இதனால் பூங்கா நிா்வாகம் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி 6 போ் அமா்ந்து பயணிக்கக் கூடிய பேட்டரி காா் ஒன்று வாங்கியுள்ளனா். இதன் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. இதைத்தொடா்ந்து இந்த பேட்டரி காா் விரைவில் சுற்றுலாப்பயணிகளின் பயன்பாட்டுக்கு வருமென பூங்கா நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

    • கடலூர் மாநகராட்சியில் 50 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு அமைக்கும் பணி தீவிரம்: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார்.
    • பாதாள சாக்கடை பணியை மழைக்காலங்கள் தொடங்குவதற்கு முன்பு கட்டி முடித்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் அரசு மருத்துவமனையில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து 25.5 லட்சம் மதிப்பிலான நவீன உயர் சிகிச்சை கருவிகள், மற்றும் 5.5 லட்சம் மதிப்பிலான பேரிடர் கால நவீன காணொளி காட்சி கட்டுப்பாட்டு அறை மற்றும் நோயாளிகளுக்கான பேட்டரி கார் சேவை தொடக்க விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி உபகரணங்கள் வழங்கியும், கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தும் பேட்டரி கார் சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடலூர் அரசு மருத்துவமனைக்கு குறிஞ்சிப்பாடி சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து 31 லட்சம் மதிப்பீட்டில் உபகரணங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் என்.எல்.சி சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து நோயாளிகள் செல்வதற்காக பேட்டரி கார் வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாநகராட்சி பகுதியில் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் குப்பை கிடங்கு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 50 ஏக்கர் பரப்பளவில் குப்பைக்கிடங்கு அமைப்பது தொடர்பாக நிலத்தை கையகப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது மட்டுமின்றி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த பத்தாண்டு காலமாக குப்பை கிடங்கு இல்லாதது குறித்தும், குப்பைகள் மலைபோல் குவிந்து இருந்தது குறித்தும் யாரும் கேட்க திராணி இல்லாமல் இருந்து வந்தனர்.

    ஆனால் மாநகராட்சி தேர்தல் நடைபெற்று புதிதாக பொறுப்பேற்று 3 மாதமான நிலையில் மேயர், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் குப்பை கிடங்குகள் அமைப்பதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் முடிவடையாத நிலையில் இருக்கும் பாதாள சாக்கடை பணியை மழைக்காலங்கள் தொடங்குவதற்கு முன்பு கட்டி முடித்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி வடிகால் வாய்க்கால் சரி செய்து கழிவுநீர் தங்கு தடை இன்றி செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் வாரந்தோறும் ஒவ்வொரு பகுதியாக சென்று கழிவுநீர் மற்றும் குப்பைகள் அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

    கலெக்டர் பாலசுப்ரமணியம் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ் பாபு வரவேற்றார். விழாவில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மீரா, மாநகராட்சி திமுக செயலாளர் ராஜா, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சாய் லீலா, ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காரல், மாநகராட்சி மண்டல குழு தலைவர் கள் பிரசன்னா, இளையராஜா, சங்கீதா, சங்கீதா செந்தில் குமார், ஒன்றிய தி.மு.க. செயலாளர் தனஞ்செயன், வி.ஆர். அறக்கட்டளை விஜயசுந்தரம், மாநகராட்சி கவுன்சிலர்கள் பார்வதி, செந்தில் குமாரி இளந்திரையன், சுபாஷிணி ராஜா , சுதா அரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் வசதிக்காக பேட்டரி கார் சேவையை அன்வர்ராஜா எம்.பி. தொடங்கி வைத்தார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து அன்வர்ராஜா எம்.பி. ரூ.8 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பீட்டில் பேட்டரி கார் வழங்கியுள்ளார். இதன் சேவை தொடக்க விழா மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர் முல்லைக்கொடி வரவேற்று பேசினார். விழாவில் கலந்து கொண்ட அன்வர்ராஜா எம்.பி. நோயாளிகளின் வசதிக்காக பேட்டரி கார் சேவையை தொடங்கி வைத்தார். அதனை கலெக்டர் இயக்கினார். விழாவில் அன்வர்ராஜா எம்.பி. பேசியதாவது:- ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி முழுவதும் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.80 லட்சம் செலவில் அலங்காரகற்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது நோயாளிகள் பயணம் செய்வதற்காக பேட்டரி கார் வழங்கப்பட்டுள்ளது.

    மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அடுத்தபடியாக தினமும் 2 ஆயிரம் வெளிநோயாளிகள், மாதத்திற்கு 15 ஆயிரம் உள்நோயாளிகள் மற்றும் 500 அறுவை சிகிச்சைகள் நடைபெறக்கூடிய மிகப்பெரிய ஆஸ்பத்திரியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இதேபோல ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே டி-பிளாக்கில் ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் எம்.பி. நிதியில் இருந்து அம்மா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

    பூங்கா முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமையாக மாற்ற மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன். பாம்பன்-சின்னப்பாலம், கீழநாகாச்சி-தேவர் நகர், என்மனங்கொண்டான்-தர்காவலசை, ஆர்.எஸ்.மங்கலம்-சேத்திடல், நயினார்கோவில்-எஸ்.சிறுவயல், முதுகுளத்தூர்-கீழத்தூவல், கமுதி-சின்ன ஆணையூர், காரியாபட்டி-அல்லாலபேரி கிராமம் ஆகிய இடங்களில் ரூ.1 கோடியே 65 லட்சம் செலவில் சமுதாயக்கூடம் மற்றும் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகள் என 544 பள்ளிகளுக்கு ரூ.37½ லட்சம் செலவில் நூலகங்களுக்கு நூல்கள் வழங்கப்பட்டுள்ளன. 63 அரசு பள்ளிகளுக்கு ரூ.1½ கோடி செலவில் இருக்கைகள், மேஜைகள் வழங்கப்பட்டுள்ளன. தொகுதி முழுவதும் 129 இடங்களில் ரூ.6கோடியே 68 லட்சம் செலவில் எல்.இ.டி. உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. 70 ஊராட்சிகளில் ரூ.5 கோடியே 16 லட்சம் செலவில் சாலை பணிகள் நடைபெற்றுள்ளன. 25 ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 19 லட்சம் செலவில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 49 ஊராட்சிகளில் ரூ.2.57 கோடி செலவில் கலையரங்கம் கட்டி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலையை நீட்டிப்பதற்காக ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல ராமநாதபுரம் முதல் ராமேசுவரம் அரிச்சல்முனை வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக பாம்பன் கடலில் புதிய ரோடு பாலம் கட்டப்படும். காவிரி பிரச்சினைக்காக அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தையே ஒரு மாதம் முடக்கியதன் காரணமாக மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது.

    தமிழகத்தின் உரிமைக்காக அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததால் பல்வேறு திட்டங்கள் நமக்கு கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜவகர்லால், நகர் செயலாளர் அங்குச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ராமநாதபுரம் அசோக்குமார், திருப்புல்லாணி முனியாண்டி, மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். டாக்டர் சாதிக் அலி நன்றி கூறினார்.
    ×