search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சுவார்த்தை தோல்வி"

    • சாலையை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படாததால் தோல்வியில் முடிந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் சிறுக்களஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட தளவாய்பாளையம் புதூர் என்ற ஊர் வழியாக சென்று அங்குள்ள ரெயில்வே நுழைவு பாலத்தை கடந்தால் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட இணைப்பு சாலை உள்ளது.

    இந்த சாலையை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து விட்டதாகவும், இது குறித்து புகார் கொடுத்தும் சிறுக்களஞ்சி ஊராட்சி தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி கடந்த 26-ந் தேதி சிறுக்களஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் சிறுக்களஞ்சி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.

    பின்னர் அதிகாரிகள் அங்கு சென்று பொது–மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சுமூக தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காயத்ரி இளங்கோ, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், பாஸ்கர் பாபு, சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் பொதுமக்கள் சார்பில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் பேசும்போது,

    ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தில் 40 அடி அகலத்தில் சாலையை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    பின்னர் சாலை ஆக்கிரமிப்பு பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண்பதாக பொதுமக்கள் கூறிவிட்டு சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 4-ந் தேதி நடைபெற்றது.
    • கடந்த 10-ந் தேதி கடைகளின் மேற்கூரைகள் சரிந்து மூவருக்கு காயம் ஏற்பட்டது.

    பெருமாநல்லூர் :

    பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. பக்தர்கள் பலர் குண்டம் இறங்கும் போது தீக்காயம் அடைந்தனர்.10-ந் தேதி கடைகளின் மேற்கூரைகள் சரிந்து மூவருக்கு காயம் ஏற்பட்டது. இதைக்கண்டித்து இந்து முன்னணி அமைப்பு சார்பாக பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறிவித்திருந்தது. இந்த நிலையில் கோவில் நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் இந்து முன்னணி அமைப்பினருடன் பேச்சுவார்த்தை கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    பேச்சுவார்த்தையில் ஆர்.எஸ்.எஸ்.கோட்ட பொறுப்பாளர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில செயலாளர் செந்தில்குமார், கோவில் நிர்வாகத்தின் சார்பில் செயல் அலுவலர் காளிமுத்து, கோவில் மிராசுதாரர்கள் மற்றும் கட்டளைதாரர்கள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே வருகிற 20-ந் தேதி இணை ஆணையர் அலுவலகம் முற்றுகையிடப்படும் என இந்து முன்னணியினர் அறிவித்துள்ளனர்.

    • குமாரபாளையம் விசைத்தறி தொழிற்சங்கங்கள் சார்பில் 20 சதவீத பொங்கல் போனஸ் கேட்கப்பட்டது.
    • இதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் உடன்படவில்லை.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் விசைத்தறி தொழிற்சங்கங்கள் சார்பில் 20 சதவீத பொங்கல் போனஸ் கேட்கப்பட்டது. இதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் உடன்படவில்லை. இதனால் தாலுகா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் சண்முகவேல் சில நாட்கள் முன்பு ஏற்பாடு செய்திருந்தார். இதில் விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் பங்கேற்க முடியாத காரணம் குறித்து கடிதம் மூலம் தாசில்தாருக்கு தெரியப்படுத்தினர்.

    நேற்று கொங்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தி

    யாளர் சங்க தலைவர் சங்க

    மேஸ்வரன் தலைமையில், 3-ம் கட்ட போனஸ் பேச்சு வார்த்தை நடைபெற்றது.இதுகுறித்து சங்க மேஸ்வரன் கூறியதாவது:-

    நூல்விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் தொழில் நடத்துவதே பெரும் சிரமமாக

    உள்ளது. தொழிற்சங்கத்தினர் 20 சதவீதம் போனஸ் கேட்டனர். இது குறித்து செயற்குழு கூட்டி முடிவெடுத்து சொல்கிறோம் என்று கூறியதன்படி, கடந்த ஆண்டு கொடுத்த 8.15 சதவீதம் போனஸ் கொடுப்பதாக கூறினோம். ஆனால் தொழிற்சங்கத்தினர் அதற்கு உடன்படாமல் சென்று விட்டனர்.இவ்வாறு அவர் கூறினார். விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகி பாலசுப்ரமணி கூறுகையில், நாங்கள் 20 சத வீதம் போனஸ் கேட்டோம். ஆனால் உற்பத்தியாளர்கள் கடந்த ஆண்டு கொடுத்த 8.15 சதவீதம் போனஸ் கொடுப்பதாக கூறினார்கள். அதில் எங்களுக்கு உடன்பா டில்லை என்றனர்.

    இதில் கொங்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் சுந்தரராஜ், ராஜேந்திரன், குமாரசாமி, தொழிற்சங்க நிர்வாகிகள் பாலசுப்ரமணி, சுப்ரமணி, பாலுசாமி, வெங்கடேசன், சரவணன், சரஸ்வதி, செல்வராஜ், உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அறிவுசார் மையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • அலுவலக கட்டிடமே பூங்கா இடத்தில் தான் உள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட மணி நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மேட்டுப்பாளையம் நகர பகுதி மாணவர்கள் மட்டுமின்றி அருகில் உள்ள தாசம்பாளையம், குரும்பனூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வந்து ஏராளமான மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

    இந்நிலையில் இப்பள்ளியின் எதிரே இதற்கு முன் தொடக்கப்பள்ளியாக செயல்பட்டு வந்த கட்டிடங்கள் பழுதடைந்ததால் அந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு தற்போது காலி இடமாக உள்ளது. தற்போது இந்த இடத்தில் மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் அறிவு சார் மையம் அமைக்க ஏற்கனவே நகரசபை கூட்டத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கு ஏற்கனவே கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஏற்கனவே அப்பள்ளியில் இட நெருக்கடி உள்ளது. எனவே போதுமான வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளது. மணிநகர் பள்ளியை எதிர்காலத்தில் மாணவர்கள் நலன் கருதி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட வேண்டும். அப்படி தரம் உயர்த்தும் போது இடப்பற்றாக்குறை ஏற்படும். எனவே அறிவு சார் மையத்தை அதே வார்டில் வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என கூறி வந்தனர்.

    இந்தநிலையில் நகராட்சி அதிகாரிகள், அ.தி.மு.க. வார்டு கவுன்சிலர்களிடம் கோவை ஆர்.டி.ஓ. பூமா, தாசில்தார் மாலதி ஆகியோர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சார்பில் காண்பித்த இடம் பூங்கா இடமாக உள்ளது.

    இதனால் அப்பகுதியில் அறிவுசார் மையம் அமைக்க முடியாது. எனவே இப்பள்ளியின் முன் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மட்டுமே இம்மையம் அமைக்க முடியும் என அதிகாரிகள் கூறினர்.

    அப்போது நகராட்சி அலுவலக கட்டிடமே பூங்கா இடத்தில் தான் உள்ளது. மேலும் இப்பகுதியில் அறிவுசார் மையம் அமைக்கும் பணி தொடங்கினால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஆர்.டி.ஓ. பூமா மாவட்ட கலெக்டரிடம் இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய பின் பேசுவதாக கூறி அங்கிருந்து சென்றார். 

    ×