search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் ஷேக் ஹசீனா"

    • ஒருங்கிணைந்து பணியாற்றும் முனைப்பில் சீனா அழைப்பு.
    • வங்காளதேசத்துக்கான சீனா தூதரை ஹசன் சந்தித்து இருந்தார்.

    சீனாவுக்கு அலுவல் பூர்வ பயணம் மேற்கொள்ள வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது. வங்காளதேசத்தில் புதிய அரசு அமைந்துள்ளதை அடுத்து, அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்து பணியாற்றும் முனைப்பில் சீனா அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    "நாங்கள் பயணத்திற்கு ஏற்ற வகையில், சரியான நேரத்தை தேர்வு செய்கிறோம்," என்று வங்காளதேச வெளியுறவு துறை மந்திரி ஹசன் மஹ்மூத் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக வங்காளதேசத்துக்கான சீனா தூதரை ஹசன் சந்தித்து இருந்தார்.

    பிரதமரின் பீஜிங் சுற்றுப் பயணத்திற்கு ஏற்ற நேரம் ஒதுக்கி, பயணத்திற்கு வேண்டிய முன்னேற்பாடுகளை செய்வதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா முன்னதாக 2019-ம் ஆண்டு அலுவல்பூர்வ பயணமாக சீனா சென்றிருந்தார்.

    • எதிர்க்கட்சியினர் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் தலைநகர் டாக்காவில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

    டாக்கா:

    வங்காளதேசத்தின் பிரதமராக பதவி வகித்து வருபவர் ஷேக் ஹசீனா.

    இந்நிலையில், கோலாபாக் மைதானத்தில் எதிர்க்கட்சியான வங்காளதேசம் தேசிய கட்சியினர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஷேக் ஹசீனா வாக்குகளை திருடிவிட்டதாக குற்றம் சாட்டி கோஷமிட்டனர்.

    மேலும் அவர்கள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும், விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

    எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 7 எம்பிக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தனர்.

    பாராளுமன்றத்தை கலைத்து, நடுநிலையான காபந்து அரசாங்கம் அமைக்க சுதந்திரமான, நம்பகத்தன்மையுடன் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எங்களது முக்கிய கோரிக்கை என எதிர்க்கட்சியின் தெரிவித்தனர்.

    எதிர்க்கட்சியினர் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தலைநகர் டாக்காவில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

    • வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
    • இந்த பயணத்தில் இந்தியா வங்கதேசம் இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது.

    புதுடெல்லி:

    வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்தித்து பேச உள்ளார்.

    அப்போது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், பாதுகாப்பு, நீர் மேலாண்மை, அறிவியல் தொழில்நுட்பம், மின்சாரம், எரிசக்தி துறை உள்பட பல்வேறு துறைகளில் உள்ள நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பாக, வங்காளதேச வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் மோமன் கூறுகையில், வங்காளதேசம் தனது இலக்குகளை அடைவதற்கு, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள இந்த பயணம் மிகவும் உறுதுணையாக இருக்கும் என தங்கள் நாடு நம்புவதாக கூறினார்.

    பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 2019ம் ஆண்டு இந்தியா வந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3.6 பில்லியன் டாலர் செலவில் வங்கதேசத்தின் முழு நிதியளிக்கப்பட்ட பல்நோக்கு ரெயில்- சாலை பாலம் ஆகும்.
    • இந்த பாலம் நமது பெருமை, நமது திறன், நமது வலிமை மற்றும் நமது கண்ணியத்தின் சின்னம்.

    பங்களாதேஷில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட பத்மா பாலத்தை பிரதமர் ஷேக் ஹசீனா இன்று திறந்து வைத்தார். இது நாட்டின் மிக நீளமானது மற்றும் முற்றிலும் உள்நாட்டு நிதியில் கட்டப்பட்டது ஆகும்.

    இது 6.15 கி.மீ நீளமுள்ள சாலை- ரெயில் நான்கு வழி பாலம், தென்மேற்கு வங்கதேசத்தை தலைநகர் மற்றும் பிற பகுதிகளுடன் இணைக்கும் பத்மா நதியின் மீது கட்டப்பட்டுள்ளது.

    3.6 பில்லியன் டாலர் செலவில் வங்கதேசத்தின் முழு நதியளிக்கப்பட்ட பல்நோக்கு ரெயில்- சாலை பாலம் ஆகும்.

    பத்மா பாலத்தை திறந்து வைத்த வங்கதேசத் தலைவர் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதாவது:-

    எனக்கு யார் மீதும் எந்த புகாரும் இல்லை. ஆனால் பத்மா பாலம் கட்டுமான திட்டத்தை எதிர்த்தவர்கள் மற்றும் அதை குழாய் கனவு என்று அழைத்தவர்கள், தன்னம்பிக்கை இல்லாதவர்கள் என்று நான் கருதுகிறேன். இந்த பாலம் அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று நம்புகிறேன்.

    இந்த பாலம் வெறும் செங்கல், சிமெண்ட், இரும்பு மற்றும் கான்கிரீட் அல்ல. இந்த பாலம் நமது பெருமை, நமது திறன், நமது வலிமை மற்றும் நமது கண்ணியத்தின் சின்னம். இந்த பாலம் வங்கதேச மக்களுக்கு சொந்தமானது. பத்மா பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட மக்களுக்கு நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×