பதவி விலக கோரி எதிர்க்கட்சியினர் பிரமாண்ட பேரணி - ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

எதிர்க்கட்சியினர் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் தலைநகர் டாக்காவில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
பிரமாண்ட பேரணி
பிரமாண்ட பேரணி
Published on

டாக்கா:

வங்காளதேசத்தின் பிரதமராக பதவி வகித்து வருபவர் ஷேக் ஹசீனா.

இந்நிலையில், கோலாபாக் மைதானத்தில் எதிர்க்கட்சியான வங்காளதேசம் தேசிய கட்சியினர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஷேக் ஹசீனா வாக்குகளை திருடிவிட்டதாக குற்றம் சாட்டி கோஷமிட்டனர்.

மேலும் அவர்கள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும், விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 7 எம்பிக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தனர்.

பாராளுமன்றத்தை கலைத்து, நடுநிலையான காபந்து அரசாங்கம் அமைக்க சுதந்திரமான, நம்பகத்தன்மையுடன் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எங்களது முக்கிய கோரிக்கை என எதிர்க்கட்சியின் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சியினர் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தலைநகர் டாக்காவில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com