என் மலர்
நீங்கள் தேடியது "PM Sheikh Hasina"
- வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
- இந்த பயணத்தில் இந்தியா வங்கதேசம் இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது.
புதுடெல்லி:
வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்தித்து பேச உள்ளார்.
அப்போது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், பாதுகாப்பு, நீர் மேலாண்மை, அறிவியல் தொழில்நுட்பம், மின்சாரம், எரிசக்தி துறை உள்பட பல்வேறு துறைகளில் உள்ள நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக, வங்காளதேச வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் மோமன் கூறுகையில், வங்காளதேசம் தனது இலக்குகளை அடைவதற்கு, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள இந்த பயணம் மிகவும் உறுதுணையாக இருக்கும் என தங்கள் நாடு நம்புவதாக கூறினார்.
பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 2019ம் ஆண்டு இந்தியா வந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதைப்போல வங்காளதேச வெளியுறவுத்துறை மந்திரி ஷரியர் ஆலமும் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். #PulwamaAttack #SheikhHasina