என் மலர்
நீங்கள் தேடியது "பிஎஸ்எல்வி"
- சக்திவாய்ந்த பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை வருகிற ஜூன் மாதத்தில் மீண்டும் ஏவ முயற்சிக்கப்படும்.
- கடந்த முறை நடந்தது போன்று இப்போது நடக்க வாய்ப்பில்லை.
சென்னை:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உள்நாடு மற்றும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டிலும் பொருத்தி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. உலக அளவில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வெற்றி விகிதத்தைக் கொண்ட ராக்கெட் என்ற பெயரை 'பி.எஸ்.எல்.வி.' ரக ராக்கெட் பெற்றுள்ளது.
இந்தநிலையில், ஆந்திரமாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1-வது ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் கடந்த ஆண்டு மே 18-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. இ.ஓ.எஸ்-09 ராடார் இமேஜிங் செயற்கைக்கோளை சுமந்து சென்ற இந்த ராக்கெட்டின், 3-வது நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விண்வெளிப் பயணம் தோல்வியடைந்தது.
அதேபோல், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) உருவாக்கிய இ.ஓ.எஸ்.01 என்ற முதன்மை செயற்கைக்கோளுடன், வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைக்கோள்கள், பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் மூலம் கடந்தமாதம் விண்ணில் ஏவப்பட்டது.
அப்போது, ராக்கெட்டின் 3-வது நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலக்கை அடையாமல் திட்டம் தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து 2 பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் தோல்வியை தழுவின.
இதுகுறித்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது:-
இஸ்ரோவின் 2 பி.எஸ்.எல்.வி. தோல்விகளைத் தவிர, கடந்த ஆண்டு இஸ்ரோ ஏவிய வழி செலுத்தல் செயற்கைக்கோள், என்.வி.எஸ்-02, விண்கலத்தின் 'திரஸ்டர் வால்வு' செயலிழப்பு காரணமாக அதுவும் திட்டமிட்ட சுற்றுப்பாதையை அடையத் தவறிவிட்டது. ஒவ்வொரு பயணத்திலும் என்ன தவறு நடந்தது என்பதை பகுப்பாய்வு செய்ய தனித்தனி உள் மற்றும் வெளிப்புற தோல்வி மதிப்பீட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தோல்வி குறித்து குழுவின் அறிக்கையை ஆராய்ந்து, எல்லாவற்றையும் சரிசெய்து, நம்மை நாமே சான்றளித்த பிறகு, மிகவும் லட்சிய இலக்காகக் கொண்டு சக்திவாய்ந்த பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை வருகிற ஜூன் மாதத்தில் மீண்டும் ஏவ முயற்சிக்கப்படும். கடந்த முறை நடந்தது போன்று இப்போது நடக்க வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராக்கெட் பாதை மாறி சென்றதால் இலக்கை அடைய முடியவில்லை.
- பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டில் இருந்து பிரிந்து இயங்கி தரவுகளை அனுப்பியுள்ளது.
பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டை கடந்த 12-ந்தேதி இஸ்ரோ விண்ணில் ஏவியது. இதில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) உருவாக்கிய இ.ஓ.எஸ்-என்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
மேலும், அந்த ராக்கெட்டுடன் ஸ்பானிஷ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய சோதனை கருவி மற்றும் 16 சிறிய செயற்கைக் கோள்களும் இணைக்கப்பட்டு ஏவப்பட்டது. ஆனால் ராக்கெட் பாதை மாறி சென்றதால் இலக்கை அடைய முடியவில்லை. இதனால் இத்திட்டம் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் திடீர் திருப்பமாக பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட ஒரு சிறிய செயற்கைக்கோள் செயல்பட தொடங்கியது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆர்பிட்டல் பாராடிகம் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர் என்ற சிறிய செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டில் விண்ணுக்கு அனுப்பி இருந்தது.
இதற்கிடையே அந்த சிறிய செயற்கைக்கோள் தரவுகளை அனுப்பியதாக ஆர்பிட்டல் பாராடிகம் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் கூறும்போது,"எதிர்பாராத அனைத்து தடைகளையும் மீறி, எங்கள் சிறிய விண்கலம் கேப்சூல் பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டில் இருந்து பிரிந்து இயங்கி தரவுகளை அனுப்பியுள்ளது.
நாங்கள் அதன் பயணப் பாதையை மீண்டும் உருவாக்குகிறோம். முழு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்து உள்ளது.
- பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டுக்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கியது.
- ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் ஒருங்கிணைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன.
புதுடெல்லி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 10.17 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. -சி62 விண்ணில் ஏவப்படுகிறது. இது புத்தாண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ராக்கெட்டாகும்.
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சேவைக்காக இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன்மை செயற்கைக்கோளான இதனுடன் ஸ்பானிஷ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்' என்ற ஒரு சிறிய சோதனைக் கருவியும் பொருத்தப்பட்டது.
இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 வணிக செயற்கைக்கோள்களும் இதனுடன் விண்ணுக்கு ஏவப்படுகிறது.
இந்த பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான கவுண்ட்டவுன் நேற்று காலை 10.12 மணிக்கு தொடங்கியது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் ஒருங்கிணைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. ஏவுதலுக்கு முந்தைய சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 துணை செயற்கைக்கோள்களும் ராக்கெட் மூலம் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
- சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ வருகிற 12-ந்தேதி பி.எஸ்.எல்.வி-சி 62 ராக்கெட் விண்ணில் ஏவ உள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரோ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பி.எஸ்.எல்.வி-சி62 திட்டத்தின் ராக்கெட்டை வருகிற 12-ந்தேதி காலை 10:17 மணிக்கு ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஏவுதலை ஏவுதல் காட்சிக் கூடத்தில் இருந்து பொதுமக்கள் பார்க்க ஆன்லைனில் lvg.shar.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட் மூலம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) உருவாக்கப்பட்ட மேம்பட்ட புவி கண் காணிப்பு-ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் செயற்கைக் கோளான இ.ஒ.எஸ்-என்1 (அன்வேஷா ) விண்ணில் ஏவப்படுகிறது. இது பட மெடுக்கும் செயற்கைக் கோள் ஆகும்.
மேலும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட் ரேட்டர் என்ற சிறிய செயற்கைக்கோள் மற்றும் இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெ ரிக்கா முழுவதும் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 துணை செயற்கைக்கோள்களும் ராக்கெட் மூலம் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
- இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட மிக அதிக எடையுள்ள செயற்கைக்கோள் என்ற சாதனையைப் படைத்தது.
- ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட 100-வது ராக்கெட் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.
2025-ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிற்கு (ISRO) ஒரு கலவையான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான ராக்கெட் ஏவுதல்கள் மற்றும் அவற்றின் முடிவுகள் குறித்த விவரங்கள் இங்கு பார்க்கலாம்..
LVM3-M6 (BlueBird Block-2) - மிகப்பெரிய வெற்றி:
டிசம்பர் 24, 2025 அன்று ஏவப்பட்ட இந்த ராக்கெட், அமெரிக்காவின் 6,100 கிலோ எடையுள்ள 'BlueBird Block-2' செயற்கைக்கோளைச் சுமந்து சென்றது.

இது இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட மிக அதிக எடையுள்ள செயற்கைக்கோள் என்ற சாதனையைப் படைத்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் 'பாகுபலி' ராக்கெட்டான LVM3 தனது 100% வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து 9-வது முறையாக நிலைநாட்டியது.
PSLV-C61 (EOS-09) - தோல்வி:

மே 18 அன்று ஏவப்பட்ட இந்த ராக்கெட்டின் மூன்றாவது அடுக்கில் (Third Stage) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, செயற்கைக்கோளைத் திட்டமிட்ட பாதையில் நிலைநிறுத்த முடியாமல் போனது. இது இஸ்ரோவிற்கு ஒரு பின்னடைவாக அமைந்தது.
GSLV-F15 (NVS-02) - சிக்கல்:

ஜனவரி மாதம் ஏவப்பட்ட இந்தச் செயற்கைக்கோள், ராக்கெட் மூலம் விண்வெளிக்குச் சென்றாலும், அதன் திரவ இயந்திரத்தில் (LAM) ஏற்பட்ட வால்வு கோளாறு காரணமாகச் சரியான சுற்றுவட்டப் பாதைக்கு உயரவில்லை. தற்போது இது மாற்று வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
100-வது ராக்கெட் மைல்கல்:
ஜனவரி 29 அன்று ஏவப்பட்ட GSLV-F15 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட 100-வது ராக்கெட் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.

இஸ்ரோவின் (ISRO) வரலாற்றில் ஜிஎஸ்எல்வி-எஃப்15 (GSLV-F15) ராக்கெட் ஏவுதல் ஒரு மிகமுக்கியமான மைல்கல்லாகும். இது 2025-ம் ஆண்டின் முதல் ஏவுதல் மட்டுமல்லாமல், இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட 100-வது ராக்கெட் என்ற பெருமையையும் பெற்றது.
GSLV (Geosynchronous Satellite Launch Vehicle) - இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் கொண்ட 17-வது ஜிஎஸ்எல்வி பயணமாகும்.இந்த ராக்கெட் NVS-02 என்ற நேவிகேஷன் செயற்கைக்கோளைச் சுமந்து சென்றது.
ராக்கெட் திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்து, செயற்கைக்கோளைப் புவிவட்டப் பாதையில் (GTO) வெற்றிகரமாக விடுவித்தது. இது புதிய இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தலைமையிலான முதல் வெற்றிகரமான ஏவுதலாகும்.
2025-ம் ஆண்டின் தொடக்கம் சில சவால்களுடன் இருந்தாலும், ஆண்டின் இறுதியில் LVM3 ராக்கெட்டின் அடுத்தடுத்த வெற்றிகள் (குறிப்பாக அமெரிக்கச் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது) உலக விண்வெளிச் சந்தையில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியுள்ளது.
- இஸ்ரோவின் 101-வது ராக்கெட் இன்று ஏவப்பட்டது.
- 3-வது அடுக்கு பிரியும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து ஆய்வு செய்யப்படும்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
விண்ணில் ஏவப்பட்ட 101-வது ராக்கெட்டிலிருந்து 2 அடுக்கு மட்டுமே வெற்றிகரமாக பிரிந்தது. முதல் 2 அடுக்கு மட்டுமே வெற்றிகரமாக பிரிந்த நிலையில் 3-வது அடுக்கு பிரியும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தது.
இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறுகையில்,
இஸ்ரோவின் 101-வது ராக்கெட் இன்று ஏவப்பட்டது.
2-வது அடுக்கு பிரியும் வரை பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்டின் செயல்பாடு சரியாகத்தான் இருந்தது. 3-வது அடுக்கு பிரியும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை.
3-வது அடுக்கு பிரியும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து ஆய்வு செய்யப்படும். பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்தது குறித்து ஆய்வுக்கு பிறகு விரிவான அறிக்கை அளிக்கப்படும்.
தவறுக்கான காரணத்தை ஆய்வு செய்து மீண்டு வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
- பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்துள்ளது என இஸ்ரோ தெரிவித்தது.
ஸ்ரீஹரிகோட்டா:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
பூமி கண்காணிப்புக்காக 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டு ஆகும்.
இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்துள்ளது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இரு அடுக்குகள் வெற்றிகரமாகப் பிரிந்தது. 3வது அடுக்கு பிரிந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
- பூமி கண்காணிப்புக்காக இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டது.
- இதன் ஆயுட்காலம் 5 ஆண்டு மட்டுமே ஆகும் என இஸ்ரோ தெரிவித்தது.
ஸ்ரீஹரிகோட்டா:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட்டுக்கு தேவையான திட மற்றும் திரவ எரிபொருள் நிரப்பப்பட்டு உள்ளது.
பூமி கண்காணிப்புக்காக 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டு ஆகும்.
இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது என்றும், ராக்கெட் மற்றும் செயற்கைக் கோள் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது இஸ்ரோவின் 101-வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
- 'டிஎஸ்-சார்' செயற்கை கோள், சிங்கப்பூர் அரசு மற்றும் எஸ்.டி. என்ஜினீயரிங் இணைந்து உருவாக்கப்பட்டது.
- ராக்கெட் ஏவும் நிகழ்வை காண்பதற்காக ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது.
ராக்கெட் ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணியாக 25½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது. கவுண்ட்டவுன் முடிந்த நிலையில் திட்டமிட்டபடி காலை 6.30 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக புறப்பட்டுச் சென்றது. ராக்கெட் ஏவும் நிகழ்வை காண்பதற்காக ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர்.

இந்த ராக்கெட்டில் சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 360 கிலோ எடை கொண்ட 'டிஎஸ்-சார்' என்ற பிரதான செயற்கை கோள் உள்பட மொத்தம் 7 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இந்த 'டிஎஸ்-சார்' செயற்கை கோள் டி.எஸ்.டி.ஏ. (சிங்கப்பூர் அரசு) மற்றும் எஸ்.டி. என்ஜினீயரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது.
'இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்' (ஐ.ஏ.ஐ) உருவாக்கிய செயற்கை துளை ரேடார் கருவியை கொண்டுள்ள இந்த செயற்கை கோள் அனைத்து வானிலை தகவல்களையும் துல்லியமான படங்களையும் வழங்கும் திறன் கொண்டதாகும்.
இந்த செயற்கை கோள் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ. உயரத்தில் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. மற்ற செயற்கை கோள்களும் அவற்றுக்கான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
செயற்கை கோள்களை செலுத்தும் பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாகவும், பிஎஸ்எல்வி-சி56 வாகனம் 7 செயற்கை கோள்களையும் அவற்றின் சுற்றுப்பாதையில் துல்லியமாக செலுத்தியதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை ஏவிய சில வாரங்களுக்குப் பிறகு மற்றொரு முக்கிய நிகழ்வாக, இன்று 7 செயற்கை கோள்களை செலுத்தியிருப்பது, இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணத்தில் மற்றொரு மைல்கல் ஆகும்.
- பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் 24 மணிநேர கவுண்ட் டவுன் நேற்று முற்பகல் தொடங்கியது.
- பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் ஆதித்யா எல்-1 விண்கலத்தை சுமந்து கொண்டு இன்று விண்ணில் பாய்கிறது.
புதுடெல்லி:
சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம் பெறுகிறது. இதில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.
பூமியில் சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' என்னும் இடத்தில் இந்த விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு குறிப்பாக, சூரியனை நோக்கிய கோணத்தில் நிறுத்தப்படுகிறது. இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய இருக்கிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து, ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முற்பகல் 11.50 மணிக்கு தொடங்கியது.
தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்டப்படி இன்று பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்
- ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முற்பகல் 11.50 மணிக்கு தொடங்கியது.
- ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம் பெறுகிறது.
இதில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. பூமியில் சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' என்னும் இடத்தில் இந்த விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு குறிப்பாக, சூரியனை நோக்கிய கோணத்தில் நிறுத்தப்படுகிறது. இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய இருக்கிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து, ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முற்பகல் 11.50 மணிக்கு தொடங்கியது.
தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்டப்படி இன்று பகல் 11.50 மணிக்கு விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
- 7 முக்கிய கருவிகளில், 4 கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்கின்றன.
- ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம் பெறுகிறது.
இதில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. பூமியில் சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' என்னும் இடத்தில் இந்த விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு குறிப்பாக, சூரியனை நோக்கிய கோணத்தில் நிறுத்தப்படுகிறது.
இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய இருக்கிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து, ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முற்பகல் 11.50 மணிக்கு தொடங்கியது.
தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்டப்படி இன்று பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
7 முக்கிய கருவிகளில், 4 கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்கின்றன. 3 பேலோடுகள் லெக்ராஞ்சியன் புள்ளியில் உள்ள துகள்கள், புலங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.






