என் மலர்
நீங்கள் தேடியது "பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்"
- அவர் அணிந்திருந்த விலையுயர்ந்த Louis Vuitton பிராண்ட் பெல்ட் வெளியே தெரிந்தது.
- பெல்ட் தெரிவதை உணர்ந்த அவர், உடனடியாக அமர்ந்து கொண்டு, மீண்டும் எழுந்து பேசும்போது தனது கோட்-உடையை கொண்டு அந்த பெல்ட்டை மறைக்க முயன்றார்.
மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பாஜக எம்.பி அனுராக் தாகூர் அணிந்திருந்த ஒரு விலையுயர்ந்த பெல்ட் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று, நாடாளுமன்றத்தில் அமளிக்கு இடையே அனுராக் தாகூர் பேச எழுந்தபோது, அவர் அணிந்திருந்த விலையுயர்ந்த Louis Vuitton பிராண்ட் பெல்ட் வெளியே தெரிந்தது.
கேமராவில் பெல்ட் தெரிவதை உணர்ந்த அவர், உடனடியாக அமர்ந்து கொண்டு, மீண்டும் எழுந்து பேசும்போது தனது கோட்-உடையை கொண்டு அந்த பெல்ட்டை மறைக்க முயன்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் அணிந்திருந்த பெல்ட்டில் 'LV' என்ற சின்னம் தெளிவாகத் தெரிந்தது. லூயி விட்டான் பெல்ட்கள் பொதுவாக 40,000 ரூபாயிலிருந்து தொடங்குகின்றன. அனுராக் தாகூர் அணிந்திருந்தது போன்ற குறிப்பிட்ட மாடல்கள் 80,000 முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் ஒரு மூத்த தலைவர் இது போன்ற விலையுயர்ந்த வெளிநாட்டு பிராண்ட் பெல்ட் அணிந்திருந்தது பேசுபொருளாகியுள்ளது.
- பிரதமரின் வீடு கட்டும் திட்டம் கடந்த முறை 54,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
- அதில் 32,400 கோடி மட்டுமே செலவழித்து இருக்கிறது அரசு.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதித்தற்காக பாராளுமன்றம் நேற்று கூடியது.
அதில் பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது:-
மூன்று கோடி வீடுகளை புதிதாக கட்டப் போவதாகவும் பெருமை பொங்கக் கூறியிருக்கிறார் குடியரசுத் தலைவர். கடந்த கூட்டத்தொடரின் போது குடியரசுத் தலைவர் அறிவித்த பல அறிவிப்புகளை இந்த கூட்டத்திலும் அறிவித்து இருக்கிறார். அதிலே ஒன்றுதான் இந்த வீடு கட்டும் திட்டம்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டம் கடந்த முறை 54,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதில் 32,400 கோடி மட்டுமே செலவழித்து இருக்கிறது அரசு. சரிபாதியாக செலவை குறைத்து 22,100 கோடி ரூபாய் செலவிடவில்லை. இதனால் பிரதமரின் இந்த வீடு கட்டும் திட்டம் முழுமையாக நிறைவடையவில்லை.
ஆங்காங்கே தொடங்கிய பணிகள் அப்படியே கிடக்கின்றன. ஒதுக்கிய நிதியும் விரயம் ஆகிறது. மக்களுக்கு வீடும் கிடைக்கவில்லை. இலக்கும் எட்டப்படவில்லை என்பது எவ்வளவு வேதனைக்குரியது என்பதை தயவு கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, பட்ஜெட் கூட்டத் தொடரை அமைதியான முறையில் நடத்த அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சுமித்ரா மகாஜன் கேட்டுக் கொண்டார்.







