search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதி ஆயோக் கூட்டம்"

    • மாநிலங்கள் நிதி ரீதியாக விவேகமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
    • தமிழகம், மேற்கு வங்காளம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட 11 மாநில முதல் மந்திரிகள் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

    புதுடெல்லி:

    நிதி ஆயோக் அமைப்பின் எட்டாவது ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், சுகாதாரம், திறன் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கான பொதுவான பார்வையை உருவாக்க வேண்டியது அவசியம் என்றார். மாநிலங்கள் நிதி ரீதியாக பலமானதாகவும், மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்ளும் திறன் கொண்டதாகவும் இருக்கும் வகையில் நிதி ரீதியாக விவேகமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். 

    நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள்
    நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள்

    கூட்டத்தில் மத்திய மந்திரிகள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் மற்றும் உத்தரபிரதேசம், அசாம், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர். தமிழகம், மேற்கு வங்காளம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட 11 மாநில முதல் மந்திரிகள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

    • நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார்.
    • மாநிலங்கள் தங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கும்.

    புதுடெல்லி:

    மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி அமைத்ததும் இந்தியாவில் ஏற்கனவே அமலில் இருந்த திட்டக்கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் பணிகளை நிதி ஆயோக் ஈடுபட்டு வருகிறது.

    நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். இந்த அமைப்பின் ஆட்சிமன்ற குழுவில் அனைத்து மாநில முதல் மந்திரிகள் மற்றும் யூனியன் பிரேதசங்களின் துணைநிலை ஆளுநர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இதன் ஆட்சிமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு இந்தக் கூட்டம் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெற்றது.

    இந்நிலையில், இந்த ஆண்டு நிதி ஆயோக் ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் மற்றும் உத்தர பிரதேசம், அசாம், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் மாநில முதல் மந்திரிகள் பங்கேற்றனர்.

    தமிழகம், மேற்கு வங்காளம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட 8 மாநில முதல் மந்திரிகள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர்.

    • நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார்.
    • மாநிலங்கள் தங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கும்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று 8-ஆவது நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. கடந்த 2014 ஆண்டு ஆட்சியமைத்ததும், இந்தியாவில் ஏற்கனவே அமலில் இருந்த திட்ட கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் பணிகளை நிதி ஆயோக் ஈடுபட்டு வருகிறது.

    நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். இந்த அமைப்பின் ஆட்சிமன்ற குழுவில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களின் துணை நிலை ஆளுநர்கள் இடம்பெற்று உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இதன் ஆட்சிமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு இந்த கூட்டம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெற்றது.

    அந்த வகையில் இந்த ஆண்டு நிதி ஆயோக் ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற இருக்கிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிதி ஆயோக் ஆட்சிமன்ற குழு கூட்டத்தில், மாநிலங்கள் தங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆரோக்கியம், திறன் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், உள்கட்டமைப்பு வளர்ச்சி உள்ளிட்ட பிரிவுகளில் இந்தியா 2047 ஆம் ஆண்டு வளர்ச்சி பெற்ற நாடாக உருவெடுக்க வைக்கும் இலக்குடன் மாநிலங்கள் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

    "இன்றைய கூட்டத்தில் 1- விக்சித் பாரத் @2047, 2- சிறு, குறு மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கு ஊக்கமளித்தல், 3- உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள், 4- பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு காணுதல், 5- பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், 6- ஆரோக்கிம் மற்றும் ஊட்டசத்து, 7- திறன் மேம்பாடு மற்றும் 8- சமூக உள்கட்டமைப்பை வளர்ச்சி பெற செய்வது என்று எட்டு மிகமுக்கிய திட்டங்கள் பற்றிய பேச்சுவார்த்தை நடைபெறும்," என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

    "இந்த கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், மத்திய மந்திரிகள், நிதி ஆயோக் துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வர்," என்றும் நிதி ஆயோக் தெரிவித்து இருக்கிறது.

    ×