search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாள்"

    • குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது. இதற்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு அக்டோபர் 30-ந்தேதி நடக்கிறது.
    • இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிகலாம்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் 92 பணியிடங்களுக்கான துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சித்துறை) குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது. இதற்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு அக்டோபர் 30-ந்தேதி நடக்கிறது.

    இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிகலாம். அதன் பிறகு 27-ந்தேதி முதல் 29 -ந்தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

    • அனைத்து வகையான பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் காமராஜர் உருவப்படத்தை அலங்கரித்து சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
    • காமரா ஜரின் செயல்பாடுகள் குறித்து மாணவர்கள் அறியும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாளையொட்டி நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நாளை கல்வி வளர்ச்சி தினமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

    இதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் காமராஜர் உருவப்படத்தை அலங்கரித்து சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் முன்னாள் முதல்-அமைச்சர் காமரா ஜரின் செயல்பாடுகள் குறித்து மாணவர்கள் அறியும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு மாவட்டத்தில் ஜூன் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 24-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
    • இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஜூன் 2022-ம் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வரும் 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

    அன்றைய தினம் காலை 10 மணிமுதல் 11.ஈரோடு மாவட்டத்தில் ஜூன் 2022-ம் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வரும் 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.30 வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப்பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்சினைகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கலாம்.

    மேலும் மதியம் 12.30 முதல் 1.30 முடிய அலுவலர்களின் விளக்கங்களும் தெரிவிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    சேலம் தலைமை அஞ்சலக கட்டிடத்தில் வருகிற 29-ந்தேதி மக்கள் குறை தீர்க்கும் நாள் நடைபெறும்.

    சேலம்:

    சேலம் தலைமை அஞ்சலக கட்டிடம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலக 3-வது தளத்தில் வருகிற 29-ந்தேதி காலை 11 மணியளவில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அஞ்சல் சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருப்பின் புகார்களை தெரிவிக்கலாம்.

    மணி ஆர்டர், வி.பி.பி., வி.பி.எல்., பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு தபால் பற்றிய புகார்கள் எனில் அனுப்பிய தேதி, முழு முகவரி, பதிவு அஞ்சல் எண், அலுவலகத்தின் பெயர் அனைத்தும் இடம்பெற்றிருக்க வேண்டும். சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் காப்பீடு பற்றிய புகார்கள் என்றால் கணக்கு எண், பாலிசி எண், வைப்புத் தொகையாளரின் பெயர், வசூலிக்கப்பட்ட விபரங்கள் அல்லது வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் தெரிவிக்கவும்.

    தபால் மூலம் குறைகளை தெரிவிக்க விரும்புபவர்கள் அஞ்சல் உறையின் மேலே DAK ADALAT CASE என்று எழுதவும்.

    மேலும் வருகிற 27-ந்தேதிக்குள் மேற்கண்ட அலுவலகத்தில் கிடைக்குமாறு அந்த தபாலை அனுப்பி வைக்க வேண்டும். இந்த தகவலை சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார். 

    ×