என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்
- அனைத்து வகையான பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் காமராஜர் உருவப்படத்தை அலங்கரித்து சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
- காமரா ஜரின் செயல்பாடுகள் குறித்து மாணவர்கள் அறியும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரோடு:
முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாளையொட்டி நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நாளை கல்வி வளர்ச்சி தினமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் காமராஜர் உருவப்படத்தை அலங்கரித்து சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் முதல்-அமைச்சர் காமரா ஜரின் செயல்பாடுகள் குறித்து மாணவர்கள் அறியும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






