search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாசர் ஹூசைன்"

    • இந்த தொடரின் பிட்ச்கள் அபாரமாக இருந்தது. எனவே இங்கிலாந்து அதைப்பற்றி எந்த புகார் சொல்ல முடியாது.
    • இந்த சுற்றுப்பயணத்தில் பேட்டிங் சரிவு தான் இங்கிலாந்தின் முக்கிய பிரச்சினையாக இருந்தது.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் அதற்கடுத்த 4 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 4 - 1 என்ற கணக்கில் கோப்பையை வென்றது.

    மறுபுறம் அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் சொதப்பலாக பேட்டிங் செய்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்தது.

    இந்நிலையில் இனிமேலாவது சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் விளையாடுவதை கற்றுக் கொள்ள வேண்டும் என இங்கிலாந்துக்கு நாசர் ஹுசைன் அறிவுரை கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த சுற்றுப்பயணத்தில் பேட்டிங் சரிவு தான் இங்கிலாந்தின் முக்கிய பிரச்சினையாக இருந்தது. பலமுறை அவர்கள் நல்ல துவக்கத்தைப் பெற்றும் மிடில் ஆர்டரில் சரிவை சந்தித்தனர். இந்த தொடரின் பிட்ச்கள் அபாரமாக இருந்தது. எனவே இங்கிலாந்து அதைப்பற்றி எந்த புகார் சொல்ல முடியாது.

    மேலும் 5 போட்டிகளில் அவர்கள் 3 முறை டாஸ் வென்றனர். எனவே ஏன் உங்களுடைய பேட்டிங் சரிந்தது? என்பதை கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். ஏன் ஜாக் கிராவ்லி தொடர்ந்து நல்ல துவக்கத்தை பெற்றும் பின்னர் அவுட்டானார்? என்பதை யோசியுங்கள்.

    அதே போல பந்து புதிதாகவும் சுழலும் போதும் ஒரு பவுலரை பென் டக்கெட் கண்டிப்பாக அதிரடியாக எதிர்கொள்ள வேண்டுமா? என்று பார்க்க வேண்டும். ஓலி போப் அபாரமான 196 ரன்கள் அடித்த பின் எதுவுமே செய்யவில்லை. எனவே உங்களுடைய இந்த ஆட்டத்தை பார்த்து அதில் முன்னேறும் வழியை பாருங்கள். அந்த வகையில் தான் ஒரு வீரராகவும் அணியாகவும் உங்களால் முன்னேற முடியும்.

    இவ்வாறு நாசர் ஹூசைன் கூறினார்.

    • இந்த தொடரில் அவரை நாம் மிஸ் செய்வோம் என்பதில் சந்தேகமில்லை.
    • ஹரி ப்ரூக் போலவே கோலியும் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளார்.

    இங்கிலாந்து அணி இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 25-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகி உள்ளார்.

    இந்நிலையில் விராட் கோலி விலகியுள்ளது இங்கிலாந்து அணிக்கான வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எனது முதல் எண்ணம் என்னவென்றால் விராட் கோலி நன்றாக இருக்க வேண்டும் என்பதே. ஹரி ப்ரூக் போலவே அவரும் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளார். அதை இந்த விளையாட்டு மதிக்க வேண்டும். கிரிக்கெட்டை விட சில விஷயங்கள் முக்கியமானதாக இருக்கும். இந்த தொடரில் கோலியை நாம் மிஸ் செய்வோம் என்பதில் சந்தேகமில்லை.

    தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் முதல் 2 போட்டிகளில் விளையாடுவதை உலக ரசிகர்களால் பார்க்க முடியாது. விராட் கோலி போன்ற வீரர் விலகுவது எந்த அணிக்கும் பின்னடைவாக இருக்கும். மறுபுறம் இந்த வாய்ப்பு முதல் 2 போட்டிகளில் இங்கிலாந்து வெல்வதற்கான நம்பிக்கையை கொடுத்துள்ளது.

    இவ்வாறு நாசர் ஹுசைன் கூறினார்.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் கொஞ்சம் அதிக ஆக்ரோஷத்துடன் விளையாடுவதாக நினைக்கிறேன்.
    • இன்னும் கடினமாக உழைத்து எதிர்காலத்தில் சிறப்பாக ஆடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் 24 வயதான சுப்மன் கில் கடந்த ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 29 ஆட்டங்களில் ஆடி 5 சதம் உள்பட 1,584 ரன்கள் குவித்து கவனத்தை ஈர்த்தார்.

    எதிர்பார்க்கப்பட்ட தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் அவர் சோபிக்கவில்லை. அவர் 2 மற்றும் 26 ரன்னில் வேகப்பந்து வீச்சில் வீழ்ந்தார். வெள்ளை நிற பந்தில் ஜொலிக்கும் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதுவரை 19 டெஸ்டில் ஆடி 2 அரைசதம் உள்பட 994 ரன் எடுத்துள்ளார். கடைசி 7 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

    இந்த நிலையில் அவருக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் (இந்தியா) டெஸ்டில் எப்படி ஆட வேண்டும் என்பது குறித்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

    இது குறித்து கவாஸ்கர் கூறுகையில், 'டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் கொஞ்சம் அதிக ஆக்ரோஷத்துடன் விளையாடுவதாக நினைக்கிறேன். ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆடுவதை காட்டிலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு சிறிது வித்தியாசம் உள்ளது. ஆனால் அவர் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி போன்றே டெஸ்டிலும் அதிரடியாக ஆட நினைக்கிறார்.

    குறுகிய வடிவிலான போட்டிக்கு பயன்படுத்தப்படும் வெள்ளைநிற பந்தை விட டெஸ்ட் கிரிக்கெட்டுக்குரிய சிவப்பு நிற பந்து காற்றிலும், ஆடுகளத்திலும் வேகமாக நகரும். மேலும் சிவப்பு பந்து அதிகமாக பவுன்சும் ஆகும். அதை மனதில் வைத்து அவர் டெஸ்டிஸ் விளையாட வேண்டும்.

    சுப்மன் கில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய போது, அவரது ஷாட்டுகள் எல்லாம் பாராட்டும்படி இருந்தது. மீண்டும் அவர் பார்முக்கு திரும்புவார் என்று நம்புகிறேன். இன்னும் கடினமாக உழைத்து எதிர்காலத்தில் சிறப்பாக ஆடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்றார்.

    இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறுகையில், 'சுப்மன் கில் 2023-ம் ஆண்டில் முதல் 9-10 மாதங்களில் நன்றாக ஆடினார். அதன் பிறகு தான் தடுமாறுகிறார். மறுமுனையில் ஆடும் ரோகித் சர்மா போன்ற வீரர்களிடம் அவர் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு வேளை உடல்நலம் பாதிப்பின் (டெங்கு காய்ச்சல்) காரணமாக இந்த தடுமாற்றம் வந்திருக்கலாம். சுப்மன் கில்லிடம் சூப்பர் திறமை இருக்கிறது. வருங்காலத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரராக இருப்பார். 2024-ம் ஆண்டு அவருக்கு நன்றாக அமையும் என்று நம்புகிறேன்' என்றார்.

    • ஓவலில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வலுவான இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றது.
    • இந்திய அணி எந்தவிதமான கள சூழலிலும் வெல்லும் என நான் நினைக்கிறேன்.

    லண்டன்:

    இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. கோப்பையை எந்த அணி வெல்லும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் மற்றும் முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளனர்.

    ஏபிடி வில்லியர்ஸ் கூறியதாவது:-


    ஓவலில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வலுவான இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. அதிலிருந்து கொஞ்சம் நம்பிக்கை கொள்வார்கள். பேட்டிங் செய்ய இது ஒரு நல்ல விக்கெட், ஆனால் டெஸ்ட் போட்டியின் கடைசி கட்டங்களில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் விளையாடுவார்கள் என்று நான் நினைக்கிறேன்.

    நாசர் ஹூசைன் கூறியதாவது:-


    இந்திய அணி எந்தவிதமான கள சூழலிலும் வெல்லும் என நான் நினைக்கிறேன். அதற்கு ஆஸ்திரேலியாவில் அவர்களது செயல்பாடு உதாரணம். சூரியன் பிரகாசிக்கும் வகையில் வானிலை ஒத்துழைத்தால் அவர்கள் 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3-வது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாக்கூர் என்ற ஃபார்முலாவின் அடிப்படையில் அணியை தேர்வு செய்யலாம்.

    கடந்த முறை நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி அந்த மைதானத்தின் சூழலை தவறாக கணித்து விட்டனர் என கருதுகிறேன். அதே நேரத்தில் ஓவலில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. கடந்த முறை இங்கிலாந்தை இங்கு வீழ்த்தி உள்ளது. ஷமிக்கும், கம்மின்சுக்கும் இடையே நிச்சயம் பலமான போட்டி நிலவுகிறது. அது ட்யூக் பந்தில் அவர்களது லெந்த் மற்றும் லைனில் எப்படி இருக்கப் போகிறது என்பதுதான்.

    என நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

    ×