search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகப்பாம்பு"

    • தொழிலதிபரும், கோல்ப் வீரருமான எலிதா பீட்சே தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
    • புதரில் இருந்து வெளிவரும் ராட்சத நாகப்பாம்பு மைதானத்தில் படமெடுத்து ஆடுவதையும், அங்கிருந்த பெண் வீரர்கள் டீ பாக்சை குறிவைப்பதையும் காட்டுகிறது.

    சமூக வலைதளங்களில் நாள்தோறும் புதுப்புது வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் பயனர்களை அதிகம் கவரும். குறிப்பாக பாம்புகள் பற்றிய வீடியோக்களுக்கு பார்வையாளர்கள் அதிகம் உள்ளனர்.

    இந்நிலையில் தென் ஆப்ரிக்காவில் கோல்ப் மைதானத்தில் ஒரு ராட்சத நாகப்பாம்பு படமெடுத்து ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொழிலதிபரும், கோல்ப் வீரருமான எலிதா பீட்சே தனது இன்ஸ்டாகிராமில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    அதில், புதரில் இருந்து வெளிவரும் ராட்சத நாகப்பாம்பு மைதானத்தில் படமெடுத்து ஆடுவதையும், அங்கிருந்த பெண் வீரர்கள் டீ பாக்சை குறிவைப்பதையும் காட்டுகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்
    • ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டு சென்றனர்

    ஆம்பூர்:

    மாதனூர் அடுத்த கீழ்முருங்கை ஊராட்சியில் ஸ்ரீ சுயம்பு பிரம்மபுரீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த சிவன் கோவிலில் மூலவர் மற்றும் நந்தி மீது நுமார் 5 அடி நீளம் உள்ள நாகப்பாம்பு பின்னி, பிணைந்து படம் எடுத்து ஆடியது.

    இதனைப் பார்த்த கிராம மக்கள் மற்றும் கோவில் பூசாரி பாம்பிற்கு கற்பூர தீபாரணை காட்டி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    இந்த நிகழ்வு குறித்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டு தீ போல் பரவியது. ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலில் நடந்த அதிசய நிகழ்வை வந்து பார்வையிட்டு சாம தரிசனம் செய்தனர்.

    • வயல்வெளி ஒன்றில் இளைஞர் ஒருவர் தூங்கி உள்ளார்.
    • வாலிபரின் சட்டையில் இருந்து நாகப்பாம்பு நைசாக வெளியே இறங்கி செல்கிறது.

    வயல்வெளிகள், தோட்டம், பூங்காக்களில் காற்றுக்காக ஆசைப்பட்டு சிலர் தூங்குவதை பார்க்க முடியும். அது சில நேரங்களில் ஆபத்தாகவும் மாறிவிடும் என்பதை உணர்த்தும் வகையில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பார்ப்பவர்களின் இதயத்தை உறைய வைக்கும் வகையிலான அந்த வீடியோவில் திக்திக் காட்சிகள் உள்ளன. அதாவது வயல்வெளி ஒன்றில் இளைஞர் ஒருவர் தூங்கி உள்ளார். அவருக்கு தெரியாமல் நைசாக ஒரு நாகப்பாம்பு அவரது சட்டைக்குள் புகுந்துள்ளது. பின்னர் திடுக்கிட்டு விழித்த அவர் அதிர்ச்சியில் உரைந்து போய் உள்ளார். சத்தம் போட்டால் பாம்பு கொத்தி விடும் என்ற பயத்தால் அவரால் எதுவும் செய்ய முடியாத நிலையில் அக்கம் பக்கத்தினர் அதை பார்த்து அவரது சட்டை பட்டன் ஒவ்வொன்றாக கழற்றுகின்றனர். அப்போது பதைபதைப்புடன் காணப்படும் அந்த வாலிபரின் சட்டையில் இருந்து நாகப்பாம்பு நைசாக வெளியே இறங்கி செல்கிறது. இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

    • சுமார் 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது.
    • வன ஆர்வலர்கள் பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாலை நேரங்களில் கன மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் கோவை குறிச்சி சக்தி நகர் பகுதியில் மிகவும் அரிதாக பார்க்கப்படும் வெள்ளை நிறமுடைய சுமார் 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு மழை வெள்ளத்தில் எங்கிருந்தோ அடித்து வரப்பட்டுள்ளது.

    இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த வன ஆர்வலர்கள் பாம்பை பத்திரமாக மீட்டு மாங்கரை வனப்பகுதிக்குள் பத்திரமாக விடுவித்தனர்.

    வெள்ளை நிறத்தில் காணப்படும் அந்த பாம்பை வெள்ளை நாகம் என பொதுமக்கள் பலரும் கூறிய நிலையில் வன ஆர்வலர் அது மரபணு பிரச்சனையால் தோல் நிறமி குறைபாடு காரணமாக இவ்வாறு தோற்றமளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது போன்று தோல் நிறமி குறைபாடுடன் காணப்படும் வெள்ளை நாகபாம்புகள் மிகவும் அரிதானது எனவும் தெரிவிக்கின்றனர்.

    • கோவிலுக்கு எதிரே உள்ள மழைநீர் வடிகால் கான்கிரீட் மீது 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு வந்தது.
    • பாம்பிற்கு மஞ்சள், குங்குமம் தூவி, பால் ஊற்றி முட்டையும் வைத்தனர். மேலும் கற்பூரம் ஏற்றி பெண்கள் வழிபட்டனர்.

    வடவள்ளி:

    கோவை தொண்டாமுத்தூர் அடுத்துள்ளது தென்னமநல்லூர்.

    இந்த பகுதியில் உள்ள காந்தி காலனியில் பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு தினமும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

    நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால், காலை முதலே மக்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தன. அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    அப்போது கோவிலுக்கு எதிரே உள்ள மழைநீர் வடிகால் கான்கிரீட் மீது 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு வந்தது.

    அந்த பாம்பு வெகு நேரமாக அங்கிருந்து செல்லாமல் அங்கேயே படம் எடுத்து ஆடியது. அந்த இடத்தை விட்டு நகராமல் வெகுநேரமாக அங்கேயே நின்றிருந்தது.

    இந்த நிலையில் கோவிலின் எதிரே நாகப்பாம்பு படம் எடுத்து நிற்கும் தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதையடுத்து அப்பகுதி பெண்கள் அங்கு கூடினர்.

    பாம்பிற்கு மஞ்சள், குங்குமம் தூவி, பால் ஊற்றி முட்டையும் வைத்தனர். மேலும் கற்பூரம் ஏற்றி பெண்கள் வழிபட்டனர்.

    இதற்கிடையே ஒருவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பகல் 12 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த போளுவாம்பட்டி வனசரக ஊழியர்கள், நாகப்பாம்பை பத்திரமாக மீட்டு, முள்ளங்காடு வனப்பகுதியில் விடுவித்தனர். கோவில் முன்பு நாகப்பாம்பு சுமார் 7 மணி நேரமாக ஒரே இடத்தில் படமெடுத்து நின்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தொண்டாமுத்தூர் பகுதியில் கோவில் முன்பு படமெடுத்து ஆடிய நாகப்பாம்புக்கு பொதுமக்கள் பால் ஊற்றி வழிபட்டனர்.

    • காட்டுமன்னார்கோவிலில் குடியிருப்பு பகுதியில் நாகப்பாம்பு புகுந்தது.
    • பொதுமக்கள் கூச்சலிட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    கடலூர்:

    காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட வாத்தியார் தெருவில் குடியிருப்பு பகுதியில் 3 அடி நீளம் நாகப்பாம்பு புகுந்ததுஇதனை பார்த்த பொதுமக்கள் கூச்சலிட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் கொளஞ்சிநாதன் தலைமையிலான குழுவினர் அந்த வீட்டிற்கு சென்று பாம்பை மீட்டு அடர்ந்த காட்டுப் பகுதியில் விட்டனர்.

    ×