search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடை திறப்பு"

    • ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும்.
    • இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். பங்குனி மாத பூஜைகள் நாளை (14-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக ஐயப்பன் கோவில் நடை இன்று (13-ந்தேதி) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் கோவில் நடையை திறக்கிறார். இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடை பெறாது. வழக்கமான பூஜைகளுக்கு பிறகு ஹரிவராசனம் பாடப் பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

    பின்பு நாளை(14-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அதன்பிறகு கணபதி ஹோமம், உஷபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடை பெறும். காலை 9 மணி முதல் 11 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 16-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் 9-ம் நாளான வருகிற 24-ந்தேதி சரங்குத்தியில் பள்ளி வேட்டையும், 25-ந்தேதி பம்பையில் ஆராட்டும் நடைபெறுகிறது. அன்றுடன் பங்குனி உத்திர திருவிழா முடி வடைந்து இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

    பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர திருவிழா அடுத்தடுத்து வருவதால் ஐயப்பன் கோவில் நடை நாளை (14-ந்தேதி) முதல் வருகிற 25-ந்தேதி வரை 12 நாட்கள் தொடர்ச்சி யாக திறந்திருக்கும்.

    அந்த 12 நாட்களும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே, சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் உடனடி முன்பதிவு செய்ய பம்பையில் தற்காலிக மையம் திறக்கப்பட்டு இருக்கிறது.

    • புதிய மேல்சாந்திகள் தேர்வு இன்று சன்னிதானத்தில் நடைபெறும்.
    • ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் அனுமதி.

    திருவனந்தபுரம்:

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. புதிய மேல்சாந்திகள் தேர்வு இன்று (புதன்கிழமை) சன்னிதானத்தில் நடைபெறும்.

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.

    இன்று முதல் 5 நாட்கள் தினமும் அதிகாலை கோவிலில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதனையொட்டி சபரிமலைக்கு வரும்

    பக்தர்களின் வசதிக்காக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் சபரிமலைக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக நிலக்கல் பகுதியில் தற்காலிக முன்பதிவு மையமும் செயல்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • பக்தர்களின் வசதிக்காக அழகியமண்டம், குலசேகரம், மார்த்தாண்டம் ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

    கன்னியாகுமரி:

    108 வைணவத் திருப்பதி களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஆதிகேசவப் பெருமாள் பாம்பணை மீது சயன கோலத்தில் 3 வாயில்கள் வழியாக பக்தர்களுக்கு காட்சி தருகிறார்

    ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர் கோவிலுக்கு நாள் தோறும் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    மஹா கும்பாபிஷே கத்துக்குப் பின்னர் நடை பெறும் முதல் வைகுண்ட ஏகாதசி ஆகும். தற்போது கோவிலுக்கு தினமும் வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களின் வருகையும் அதிகரித்து வருகிறது. சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிகமாக உள்ளது.

    இன்று வைகுண்ட ஏகாதசியில் பக்தர்கள் வரிசையில் செல்வ தற்கு வசதியாக கோவில் பிரகாரத்தில் சவுக்கு கட்டைகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    நேற்று இரவு 10 மணியளவில் கோவில் கருவறையின் வெளிப்பகுதி, உள்பகுதி, உதயமார்த்தாண்ட மண்டபம், சபா மண்டபம் ஆகிய இடங்க ளில் மலர்களால் அலங்க ரிக்கப்பட்டது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து அர்ச்சனா மூர்த்தி விக்கி ரகங்கள் கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டு கலச பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து 6.30 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கருவறையில் அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் காலை 7 மணிக்கு ஸ்ரீபலி பூஜை யும் நடைபெற்றது. அதன்பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி பக்தர்கள் 3 வாயில்கள் வழியாக பாம்பணை மீது பள்ளிகொண்டிருக்கும் ஆதிகேசவப்பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். இன்று மதியம் 12.30 மணி அளவில் கோவில் நடை அடைக்கப்பட்டு மாலை 5 மணிக்குத்தான் திறக்கப்படும். இன்று மதியம் 12 மணி முதல் கோவிலில் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

    மாலையில் 6 மணிக்கு புஷ்பாபிஷேகம் 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை ஆகியன நடை பெறுகிறது. தீபாராதனையை தொடர்ந்து கோவில் விளக்கணி மாடத்தில் உள்ள விளக்கு களுக்கு ஒளியேற்றும் லட்சதீப விழா நடக்கிறது. அப்போது கோவில் ஒளிவெள்ளத்தில் ஜொலிப்பதைக்காணலாம். கருட வாகனத்தில் ஆதி கேசவப்பெரு மாளும், கிருஷ்ணசாமியும் கோவில் பிரகாரத்தில் பவனி வருதல் நடைபெறும்.

    வைகுண்ட ஏகாதசியான இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக அழகியமண்டம், குலசேகரம், மார்த்தாண்டம் ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன்குமார் தலைமையில் நிர்வாகத்தினரும், பக்தர்க ளும் இணைந்து செய்து உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் தலைமையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×