search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை அபேஸ்"

    • சமூக வலைதளம் மூலம் பழக்கம்
    • திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றினார்

    நாகர்கோவில் :

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் கணவனை இழந்து வசித்து வருகிறார். இதையடுத்து அவர் மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அப்போது சமூக வலைதளம் ஒன்றில் மறுமணம் செய்ய விருப்பம் தெரிவித்து வாலிபர் ஒருவர் பதிவு செய்திருந்தார். உடனே அந்த பெண் அந்த வாலிபரை தொடர்பு கொண்டார். இருவரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பின்னர் நேரில் சந்திக்க முடிவு செய்தனர்.

    இதையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அந்த வாலிபர் பெண்ணை நெல்லை பகுதியில் உள்ள கோவிலுக்கு வருமாறு அழைத்தார். அந்த வாலிபரும் அங்கு வந்தார். அப்போது அந்த பெண்ணும் அங்கு சென்றுள்ளார். இருவரும் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர். பின்னர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு கன்னியாகுமரிக்கு வந்தனர். கன்னியாகுமரிக்கு வந்த இருவரும் கோவிலுக்கு சென்றனர். அப்போது அந்த வாலிபர் அந்த பெண்ணிடம் தன்னை மறுமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும் சில தோஷங்கள் இருப்பதால் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். அப்போது அவர் அணிந்திருந்த நகையை கழட்டிக் கொடுக்குமாறு கூறினார். வாலிபரை நம்பி அந்த பெண் அணிந்திருந்த 5 பவுன் நகையை கழட்டி கொடுத்தார். உடனே அந்த வாலிபர் தங்க நகை வைத்துவிட்டு அவர் கையில் இருந்த கவரிங் நகையை பூஜைக்கு வைத்தார். பூஜை முடிந்த சிறிய நேரத்தில் அந்த வாலிபர் அந்த பெண்ணிடம் கடலில் பூஜை செய்த பொரு ட்களை போட்டுவிட்டு வருவ தாக கூறிவிட்டு 5 பவுன் நகையுடன் மாயமானார். நீண்ட நேரமாக அந்த பெண் வாலிபருக்காக காத்திருந்தார். ஆனால் அவர் வரவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகு தான் அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். உடனே இது தொடர்பாக கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பெண்ணை ஏமாற்றியது கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த யுவராஜ் (வயது 49) என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கோவை சென்று யுவராஜை இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட யுவராஜை கன்னியாகுமரிக்கு அழைத்து வந்தனர். கன்னியாகுமரியில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் இவரும், அவரது மனைவியும் விவகாரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் அவர் மறுமணம் செய்ய சமூக வலைதளங்கள் மூலமாக பெண் தேடியுள்ளார். பல பெண்களிடம் நெருங்கி பழகி வந்த யுவராஜ் பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த பெண்ணை ஏமாற்றிவிட்டு நகையை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. வேறு பெண்களை ஏமாற்றி உள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தை வீதியை சேர்ந்தவர் மரகதம் (55). இவரது கணவர் முத்துசாமி. இவர்களுக்கு ஒரு மகனும். ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணம் ஆகி வெளியூர்களில் உள்ளனர். முத்துசாமி இறந்து விட்டார். மரகதம் மட்டும் அதே பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் மூதாட்டியிடம் தங்க நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதை உண்மை என்று நம்பிய மரகதம் தனது கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை கழற்றி அந்த வாலிபர்களிடம் கொடுத்துள்ளார்.

    நகையை வாங்கியதும் அந்த வாலிபர்கள் தங்க சங்கிலியை எடுத்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்து ஓடி விட்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மரகதம் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அவர்கள் தங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நூதன முறையில் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பஸ்சில் இருந்த பெண் ஒருவர் திடீரென தனது 2 பவுன் நகையை காணவில்லை என்று கூச்சலிட்டார்
    • பஸ்சில் கூட்டம் நெரிசலை பயன்படுத்தி கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது

    நாகர்கோவில் :

    திங்கள் சந்தையில் இருந்து வெள்ளிச்சந்தை வழியாக நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்திற்கு இன்று காலை அரசு பஸ் வந்தது. பஸ்சில் காலை நேரம் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் பகுதியில் பஸ் வந்தபோது பஸ்சில் இருந்த பெண் ஒருவர் திடீரென தனது 2 பவுன் நகையை காணவில்லை என்று கூச்சலிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.

    பெண் பஸ்சில் நகையை தேடி பார்த்தார். எனினும் நகை கிடைக்கவில்லை. இதையடுத்து பஸ் அங்கிருந்து புறப்பட்டு அண்ணா பஸ் நிலையத்துக்கு சென்றது. பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது குறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த பஸ் பஸ் நிலையத்திற்கு செல்வதற்குள் போலீசார் அங்கு வந்தனர். பஸ்சை விட்டு இறங்கிய பயணிகள் அனைவரையும் சோதனை செய்தனர். ஆனால் நகை சிக்க வில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் நகையை திருடியிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பெண் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார்.

    ஆனால் சம்பவம் நடந்தபோது நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் என்பதால் நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியாகும். எனவே அங்கு தான் புகார் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். கோட்டார், நேசமணி நகர் போலீசார் மாறி மாறி நகை இழந்த பெண்ணை அலைக்கழித்ததால் அந்த பெண் புகார் கொடுக்காமலையே திரும்பி செல்லும் சூழல் ஏற்பட்டது. ஏற்கனவே பஸ்சில் கூட்டம் நெரிசலை பயன்படுத்தி கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதேபோல் இன்றும் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. போலீசார் இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • வீட்டிற்கு வந்த மர்ம நபர், தன்னை உறவினராக தேவதர்ஷினியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
    • நான் யாரையும் அனுப்பவில்லை எனக் கூறிய, தேன்மொழி பீரோவை திறந்து பார்த்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே மாடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 40). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (35), மகள் தேவதர்ஷினி (11) ஆகியோர் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் நடந்த 100 நாள் வேலைக்கு தேன்மொழி சென்றார். அப்போது அவரது மகள் தேவதர்ஷினி வீட்டில் படித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது வீட்டிற்கு வந்த மர்ம நபர், தன்னை உறவினராக தேவதர்ஷினியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும், தானும் 100 நாள் வேலை செய்வதாகவும் கூறினார்.

    உங்கள் வீட்டின் பீரோவில் ஒரு சீட்டு உள்ளது. அதனை உன்னுடைய அம்மா எடுத்துவரச் சொல்லி என்னை அனுப்பினார் என மர்மநபர் தேவதர்ஷினியிடம் கூறினார். இதனை நம்பிய குழந்தை தேவதர்ஷினி மர்மநபரிடம் பீரோ சாவியை கொடுத்தார். சிறிது நேரம் கழித்து சீட்டை எடுத்துக்கொண்டேன் எனக் கூறி பீரோ சாவிலை தேவதர்ஷினியிடம் கொடுத்துவிட்டு சென்றார். 100 நாள் வேலை முடித்து வீட்டிற்கு வந்த தேன்மொழியிடம், தேவதர்ஷினி நடந்தவற்றை கூறினார். நான் யாரையும் அனுப்பவில்லை எனக் கூறிய, தேன்மொழி பீரோவை திறந்து பார்த்தார். அதிலிருந்த 6 பவுன் தங்க நகை காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    மகள் கூறிய அங்க அடையாளங்களை வைத்து நகையை திருடிச் சென்ற மர்மநபரை தேன்மொழி ஊர் முழுவதும் தேடினார். அவர் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் தியாக துருகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும், நகையை கொள்ளையடித்த மர்ம நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். பட்டம் பகலில் வீட்டிலிருந்த 11 வயது பெண் குழந்தையை ஏமாற்றிய மர்மநபர், நூதன முறையில் நகையை அபேஸ் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • ராஜாக்கமங்கலம் வந்த போது, சுனிதா தனது கழுத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து ஓடும் பஸ்சில் நகையை அபேஸ் செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜாக்கமங்கலம்:

    குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அனந்தநாடார் குடி பகுதியைச் சேர்ந்தவர் மெர்லின் ஜெயபால்.

    இவரது மனைவி சுனிதா (வயது 38). இவர் முட்டம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தினமும் வீட்டில் இருந்து சுனிதா பஸ்சில் வேலைக்குச் சென்று வருகிறார்.

    இன்று காலையும் வழக்கம் போல் அவர் வீட்டில் இருந்து புறப்பட்டார். காலை 8.45 மணிக்கு அனந்தநாடார் குடியில் இருந்து புறப்பட்ட 14பி அரசு பஸ்சில் சுனிதா ஏறினார்.

    அந்த பஸ்சில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. ஒவ்வொரு நிறுத்தத்தில் பயணிகள் ஏறி, இறங்கும் போது சுனிதா அங்கும் இங்குமாக நகர்ந்துள்ளார்.

    இந்த நிலையில் பஸ், ராஜாக்கமங்கலம் வந்த போது, சுனிதா தனது கழுத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் அணிந்து இருந்த 7 பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருந்ததே அதற்கு காரணம். பஸ்சுக்குள் கூட்ட நெரிசலில் அதனை யாரோ அபேஸ் செய்ததை அறிந்து அவர் கூச்சலிட்டார்.

    நகையை அபேஸ் செய்தது யார்? என்பது குறித்து தெரியவில்லை. இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து, ராஜாக்கமங்கலம் போலீசில், சுனிதா புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து ஓடும் பஸ்சில் நகையை அபேஸ் செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வட மாநில வாலிபர்களுக்கு அடி உதை
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாழனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி தேவி.

    இன்று காலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது டிப்-டாப் உடையில் வடமாநில வாலிபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் தேவியிடம் நகைக்கு பாலிஷ் போடுவதாக கூறி உள்ளனர்.

    இதனையடுத்து தேவி பீரோவில் இருந்து 3 பவுன் தங்க நகைகளை எடுத்து வந்து வட மாநில வாலிபர்களிடம் பாலிஷ் போடுவதற்காக கொடுத்துள்ளார்.

    வாலிபர்கள் நகைக்கு பாலிஷ் போடுவது போல ஏமாற்றி தேவியிடம் கவரிங் நகைகளை கொடுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து வாட மாநில வாலிபர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். இதை அறிந்த தேவி கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்கவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் துரத்திச் சென்று வட மாநில வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தரும அடி கொடுத்தனர். இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் வட மாநில வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    போலீசார் வட மாநில வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சென்னையில் இருந்து அரசு போக்குவரத்து பஸ்சில் திருவண்ணாமலைக்கு பயணம் செய்தார்.
    • 2 பெண்கள் சூரியகாந்தி பக்கத்தில் அமர்ந்து வந்துள்ளனர்.

    விழுப்புரம்:

    சென்னை பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. அவரது மனைவி சூரியகாந்தி (வயது 68). இவர் சம்பவத்தன்று அதிகாலை சென்னையில் இருந்து அரசு போக்குவரத்து பஸ்சில் திருவண்ணாமலைக்கு பயணம் செய்தார். அப்போது மேல்மரு வத்தூர் பஸ் நிறுத்தத்தில் 3 பெண்கள் பஸ்சில் ஏறினர். அதில் 2 பெண்கள் சூரியகாந்தி பக்கத்தில் அமர்ந்து வந்துள்ளனர். அவர்கள் செஞ்சி வரும் வரை அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.

    நாட்டார்மங்கலம் வரும்போது 3 பெண்களும் இறங்கிவிட்டனர். பின்னர் பார்த்தபோது சூரியகாந்தி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை காணவில்லை. இதனை ஓடும் பஸ்சில் 3 பெண்களும் தனது தங்க செயினை அபேஸ் செய்து உள்ளதாக சூரியகாந்தி செஞ்சி போலீசில் கொடுத்தார். அதன் பேரில் செஞ்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன்ராஜ் வழக்கு பதிவு செய்து பெண்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பெண்ணிடம் 10 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது.
    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கம்பன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சாந்தி சுந்தரி (வயது 56).இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தை தெப்பத்திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.

    சாந்திசுந்தரி பல மணி நேரம் கூட்ட நெரிசலில் வரிசையில் காத்திருந்தார். அப்போது சாந்தி சுந்தரி கையில் வைத்திருந்த கைப்பையை மர்ம நபர் திருடி கொண்டு தப்பினார். அதில் 10 பவுன் இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை தெப்பக்குளம் பங்கஜம் காலனி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த வர் ராஜேந்திரன். இவரது மகளுக்கு ஐராவதநல்லூரில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடந்தது. அப்போது மணமகள் அறையில் புகுந்த மர்ம நபர் விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை திருடி சென்று விட்டார். இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வாடிப்பட்டி அருகே பாலிஷ் செய்து தருவதாக கூறி பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ் செய்தனர்.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை வாடிப்பட்டி போலீசார் தேடிவருகின்றனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கூழாண்டிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி அன்ன மயில் (வயது 70). இவர் தனது மகன் வீரமணியுடன் வசித்து வருகிறார்.

    நேற்று காலை அன்னமயில் தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் அன்னமயிலிடம் தாங்கள் நகையை பாலிஷ் செய்து கொடுக்கும் தொழில் செய்து வருவதாகவும், உங்கள் நகையை கொடுத்தால் பாலிஷ் செய்து கொடுப்போம் என கூறியுள்ளனர்.

    இதை நம்பிய அன்னமயில் தன் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க செயினை பாலிஷ் போட அவர்களிடம் கொடுத்துள்ளார். மர்ம நபர்களும் சிறிது நேரம் பாலீஷ் போடுவதுபோல் நடித்து அன்னமயிலிடம் கவரிங் நகையை கொடுத்து 5 பவுன் செயினை அபேஸ் செய்து தப்பினர். நகை மினுமினுப்பதை பார்த்து அன்னமயிலும் நம்பிவிட்டார்.

    சிறிது நேரம் கழித்து பார்த்தபோது 2 பேரும் கவரிங் நகையை கொடுத்துவிட்டு தங்க செயினை திருடி சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அன்னமயில் இதுகுறித்து வாடிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் நித்யபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • கவனத்தை திசை திருப்பி வியாபாரியிடம் நகை அபேஸ் செய்த கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.
    • கடந்த 3 நாட்களாக அந்தப் பகுதிக்கு வந்த ஒருவர் அவரிடம் தான் பெரிய பைனான்ஸ் அதிபர் என ஆசை வார்த்தைகளை கூறி தொடர்ந்து பேசி வந்தனர்.

    விழுப்புரம்

    திண்டிவனம் இந்திரா நகரில் வசித்து வருபவர் கதிரேசன் (வயது72). இவர் திண்டிவனம் பஸ் நிலையத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றார்.

    கடந்த 3 நாட்களாக அந்தப் பகுதிக்கு வந்த ஒருவர் அவரிடம் தான் பெரிய பைனான்ஸ் அதிபர் என ஆசை வார்த்தைகளை கூறி தொடர்ந்து பேசி வந்தனர். மறுநாள் அங்கு வந்த அந்த மர்ம நபர் கதிரேசனிடம் வழக்கம் போல் பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது கதிரேசன் அணிந்திருக்கும் மோதிரம் அழகாய் இருப்பதாகவும், பார்த்துவிட்டு தருவதாகவும் கூறி கேட்டுள்ளார்.

    இதனை நம்பி கதிரேசன் தனது கையில் இருந்த மோதிரத்தை கழற்றி கொடுத்துவிட்டு வழக்கம் போல் வியாபாரம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று அந்த மர்ம நபர் அங்கிருந்து மறைந்துள்ளார். அதிர்ச்சியடைந்த கதிரேசன் அந்த நபரை தேடி உள்ளார்

    எங்கும் கிடைக்காத நிலையில் திண்டிவனம் நகர போலீஸ் நிலையத்தில் கதிரேசன் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர் குறித்த தகவல்களை சேகரித்து. குறிப்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை திண்டிவனம் உட்கோட்ட குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம், சிறப்பு உதவி யாளர் ஆய்வாளர் அய்யப்பன், காவலர்கள் தீபன் குமார், செந்தில் கோபால கிருஷ்ணன், ஆகி யோர் கொண்ட தனிப்படை யினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது கள்ளக்குறிச்சி அருகே விளந்தை கிராமத்தில் பதுங்கி இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவரது பெயர் முருகன்.இவர் திண்டிவனத்தை சேர்ந்த கதிரேசனிடம் மோதிரத்தை திருடியதை ஒப்புகொண்டார். உடனே போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து நகை, மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான கதிரேசன் மீது பல்வேறு திருடடு வழக்குகள் உள்ளது.

    ×