பாலிஷ் போடுவதாக கூறி மூதாட்டியிடம் 7 பவுன் நகை அபேஸ்

நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலிஷ் போடுவதாக கூறி மூதாட்டியிடம் 7 பவுன் நகை அபேஸ்
Published on

புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தை வீதியை சேர்ந்தவர் மரகதம் (55). இவரது கணவர் முத்துசாமி. இவர்களுக்கு ஒரு மகனும். ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணம் ஆகி வெளியூர்களில் உள்ளனர். முத்துசாமி இறந்து விட்டார். மரகதம் மட்டும் அதே பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் மூதாட்டியிடம் தங்க நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதை உண்மை என்று நம்பிய மரகதம் தனது கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை கழற்றி அந்த வாலிபர்களிடம் கொடுத்துள்ளார்.

நகையை வாங்கியதும் அந்த வாலிபர்கள் தங்க சங்கிலியை எடுத்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்து ஓடி விட்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மரகதம் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அவர்கள் தங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நூதன முறையில் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com