search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்வுகள்"

    • காலாண்டு தேர்வுக்கு மாநில அளவில் பொது வினாத்தாள் தயாரித்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மாவட்ட கல்வித்துறை சார்பில் வினாத்தாள் அச்சிட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

    திருப்பூர்:

    பள்ளிக்கல்வித்துறையில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வரும் 19ந் தேதி முதல் 27ந் தேதி வரை, காலாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தேர்வுக்கு வழக்கமாக, அந்தந்த மாவட்ட கல்வித்துறை சார்பில் வினாத்தாள் அச்சிட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

    ஆனால் தற்போது நடக்கவுள்ள காலாண்டு தேர்வுக்கு மாநில அளவில் பொது வினாத்தாள் தயாரித்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அங்கிருந்து வரும் வினாத்தாளை அந்தந்த மாவட்டங்களில் நகலெடுத்து தேர்வு நாளன்று காலை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், காலாண்டு தேர்வை பொதுவினாத்தாள் முறையில் நடத்துவதன் மூலம், கல்வியில் பின்தங்கிய பள்ளிகளை கண்டறியலாம்.

    அங்குள்ள நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணலாம். குறிப்பாக 6-ம் வகுப்பில் இருந்தே, பொது வினாத்தாள் முறையில் இனிவரும் தேர்வுகளை நடத்த வேண்டும்.

    அப்போது தான் மாணவர்களின் கற்றல் நிலையை பரிசோதிக்க முடியும் என்றனர்.

    • 2022-2023-ம் கல்வியாண்டு பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இத்தேர்வுகள் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.
    • இதையடுத்து 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் ஆகிய 3 பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது.

    சேலம்:

    2022-2023-ம் கல்வியாண்டு பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இத்தேர்வுகள் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 6 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இத்தேர்வு மையங்களில் 18,830 மாணவர்கள், 20,443 மாணவிகள் என மொத்தம் 39,273 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் தொழிற்கல்வி, அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுகளை மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் எழுதினர்.

    3 நாட்கள் விடுமுறை

    தொடர்ந்து நாளை (18-ந்தேதி) மற்றும் நாளை மறுநாள் (19-ந்தேதி), திங்கட்கிழமை (20-ந்தேதி) ஆகிய 3 நாட்கள் தேர்வு கிடையாது. தேர்வுக்கான பாடங்களை படிக்கும் விதமாக மாணவ- மாணவிகளுக்கு இந்த 3 நாட்களும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதையடுத்து 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் ஆகிய 3 பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது.

    • மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
    • சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திறகு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்பதால் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புயல் கரையை கடக்கும் நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    மேலும், பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திறகு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. அண்ணா, சென்னை மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

    • விழாவில் 224 மாணவர்களுக்கும், 59 மாணவிகளுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
    • சிறப்பாக படிக்கும் மாணவர்கள் இந்திய அளவில் நடத்தப்படும் உயர்பதவிக்கான தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலை ப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் 224 மாணவர்களுக்கும், 59 மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

    தலைமை யாசிரியர் அறிவுடைநம்பி வரவேற்றார். சீர்காழி மாவட்டக் கல்வி அலுவலர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

    பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தமிழக அரசின் விலையில்லா சைக்கிளை வழங்கி பேசுகையில், சிறப்பாக படிக்கும் மாணவர்கள் இந்திய அளவில் நடத்தப்படும் உயர் பதவிக்கான தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும்" என்றார்.

    இதில் சீர்காழி நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், தி.மு.க ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகரமன்ற துணைத்தலைவர் சுப்பராயன், சீர்காழி நகரமன்ற உறுப்பினர்கள் நித்யாதேவிபாலமுருகன், ரமாமணி, வேல்முருகன் வாழ்த்துரை வழங்கினர்.

    உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரெங்கன், வரதராஜன், தி.மு.க நிர்வாகி செந்தில், இருபால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் பள்ளியின் உதவித்தமையாசிரியரும் உடற்கல்வி இயக்குநருமான முரளிதரன் நன்றி கூறினார்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. உபரி நீர் திறக்கப்படுவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கவிருந்த 8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடத் தேர்வுகள் மட்டும்  ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராமவர்மா தெரிவித்தார்.
    ×