search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துர்க்கை வழிபாடு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துர்க்கையை குலதெய்வமாக நினைத்து வழிபடலாம்.
    • குலதெய்வ வழிபாடு செய்வது மக்களிடையே பெருகி வருகிறது.

    குல தெய்வம் எது? அதை வழிபடுவது எப்படி? எனத்தெரிந்து அதை வழிபட ஆரம்பிக்கும் வரை என்ன செய்வது என்று கவலைப்படாதீர்கள். கும்பகோணம் அருகில் 3 கி.மீ. தொலைவில், கதிராமங்கலத்தில் அமைந்துள்ள அகத்தியர் பூஜித்த துர்க்கை கோவிலுக்கு சென்று, அந்த துர்க்கையை குலதெய்வமாக நினைத்து வழிபடலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் இந்த துர்க்கையை வழிபாடு செய்வது சிறப்பாகும். கவிச்சக்கரவர்த்தி கம்பர்தான் பாடல் எழுதும் முன்பாக இந்த துர்க்கையை வழிபாடு செய்தபின் தான் கவிதை எழுதுவாராம்.

    குல தெய்வங்கள் என்பவை வெறும் கதைகளால் தோற்று விக்கப்பட்டதோ, ஆகாசத்தில் இருந்து குதித்தவையோ அல்ல. அவை நம் முன்னோர்கள். தங்களை காப்பாற்றியவர்களையோ, தங்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த மனிதர்களையோ நம் பெரியவர்கள் நமக்கு ஞாபகம் செய்ய குலதெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள்.

    வெள்ளாளர்களின் வரலாறு சொல்லும் பழைய நூல்களில் எல்லாம் நீலி கதையும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்து மதத்தின் ஈடு இணையற்ற வரலாற்று சின்னங்களில் குலதெய்வங்களும் ஒன்று. தமிழர்களின் பழங்கால பண்பாடுகளை எடுத்து சொல்ல இன்னமும் வரலாற்று ஆய்வாளர்கள் குலதெய்வ வழிபாட்டை நம்பியிருக்கிறார்கள்.

    சைவர்களும், வைணவர்களும் சில குலதெய்வங்களை சிவனாகவும், விஷ்ணுவாகவும் மாற்றி விட்டாலும் பெரும்பாலான குலதெய்வங்கள் தன்னிலை மாறாமல் இருக்கின்றன. அவற்றின் மகிமை உணர்ந்து வருடம் தோறும் குலதெய்வ வழிபாடு செய்வது மக்களிடையே பெருகி வருகிறது.

    மதுரைவீரன், கருப்பு, பெரியசாமி, செல்லாயி, மருதாயி என நம் முன்னோர்களின் பெயர்கள் அனைத்தும் குலதெய்வத்தினை சார்ந்தே இடப்பட்டிருக்கின்றன. நம் முன்னோர்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த குலதெய்வ வழிபாட்டு முறைகளையும், கதைகளையும் பற்றி கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்குதான் தெரியும்.

    • துர்க்கைக்கு செவ்வரளி மாலை கட்டிபோட்டு வழிபடுகின்றனர்.
    • திருமண சடங்குகளில் மிகவும் முக்கியமானது நிச்சயத்தார்த்தம் ஆகும்.

        

    துர்க்கை வழிபாடு என்பது தற்பொழுது எல்லா தலங்களிலுமே நடைபெற்று வருகின்றது.

    ஆனால் கோனியம்மன் கோவிலில் சிறப்பாக நடைபெறுகிறது.

    செவ்வாய், வெள்ளிக்கிழமை நாட்களில் ராகு காலத்தில் ஆதிகோனியம்மன் சன்னதிக்கு பக்கத்தில் உள்ள மேடையில் எலுமிச்சம் பழத்தில் விளக்கு வைத்து வழிபடுவர்.

    திருமண தடைகள், காரிய தடைகள், தொழிலில் நஷ்டம், உடல்நிலை சரியில்லாதவர்கள் தங்கள் நோய் தீர்க்க

    வேண்டியும் 48 வாரம், 18 வாரம், 9 வாரம் போன்ற கணக்குகள் வைத்து,

    துர்க்கைக்கு செவ்வரளி மாலை கட்டிபோட்டு வழிபடுகின்றனர்.

    அவர்கள் நினைத்த வாரம் வரை வந்து விட்டு, இறுதியில் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும்,

    திருமண தடைகளுக்காக வேண்டியவர் அம்மனுக்கு பொட்டு மாங்கல்யம் செய்து அம்மன் கழுத்தில் அணிவித்து

    அதை காணிக்கையாக செலுத்துவர்.

    உடல்நிலை சரியில்லாதவர்கள் வெள்ளியாலேயோ அல்லது அதுபோன்ற வேறு உலோகத்தாலேயோ

    செய்யப்பட்ட கண்ணடக்கம், கை, கால் போன்றவை வாங்கி பூஜை செய்துபின் அதை காணிக்கையாக செலுத்துவர்.

    சிலர் மண்ணால் பொம்மை செய்தும் வைப்பர்.

    காரியத்தடை ஏற்படுபவர்கள் பல தானங்களை செய்கின்றனர்.

    இவ்வாறு செய்வதனால் அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

    இந்த வேண்டுதல் உள்ளூர் மக்கள் மட்டும் வேண்டுவது இல்லை.

    வெளியூர், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் பம்பாய், கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களில் இருந்தும்,

    கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் வந்து வேண்டுதல் செய்கின்றனர்.

    மேலும் அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் கோனியம்மனுக்கு தீவிர பக்தர்கள் உண்டு.

    அவர்கள் வேண்டுதலுக்கு காணிக்கைகளை அஞ்சலில் அனுப்புவதும் உண்டு.

    உப்பு மஞ்சள் வாங்குதல்

    திருமண சடங்குகளில் மிகவும் முக்கியமானது நிச்சயத்தார்த்தம் ஆகும்.

    கோவை மக்கள் பெரும்பாலும் உப்புக்கூடை மாற்றி கொள்ளுவதன் மூலமாக தான் திருமணத்தை உறுதிப்படுத்துகின்றனர்.

    இன்றைய தினத்தில் கோவையை பொறுத்த வரையில் உப்பு மஞ்சள் வாங்குதல் என்றாலே கோனியம்மன் கோவில்தான்

    என்று சொல்லும் அளவிற்கு இங்கு தான் முகூர்த்த நாட்களில் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் இருவரும்

    தங்கள் சுற்றத்தாருடன் ஒன்று கூடி அம்மனுக்கு அபிஷேகம் செய்து அலங்கரித்து உப்புக்கூடைகளை மாற்றி

    தங்கள் இல்லத்திருமண பந்த நிகழ்வினை உறுதிப்படுத்தி செல்கின்றனர்.

    • பெண்கள் துர்க்கையை பூஜித்து வந்தால் மஞ்சள் குங்குமம் நிலைத்து நிற்கும்.
    • வாலிபர்கள் துர்க்கையை பூஜித்து வந்தால் அழகும், அறிவும் பொருந்திய மனைவி வாய்ப்பாள்.

    ராகு கிரகத்தின் அதிபதியான துர்க்கை அம்மனை ராகு காலத்தில்தான் வழிபட வேண்டும்.

    குறிப்பாக திருமணம் நடைபெறாமல் கால தாமதமாகி வரும் கன்னிப்பெண்கள் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் 13 வாரங்கள் பூஜை செய்து வந்தால் கண்டிப்பாக அந்த கன்னிக்கு மனம்போல் மணமகன் வாய்த்து திருமணம் சிறப்பாக நடக்கும்.

    பிள்ளை பேறு இல்லாமல் மன அமைதியற்ற ஆண்களும் அன்னை துர்க்கா தேவியை செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் பூஜித்து வந்தால் அன்னையின் அருட்காடசத்தினால் அவரது மனைவி கருத்தரிப்பாள்.

    இதனால் பிள்ளை பேறு உண்டாகி சந்தோஷமடைவாள்.

    பெண்கள் துர்க்கையை பூஜித்து வந்தால் மஞ்சள் குங்குமம் நிலைத்து நிற்கும்.

    குழந்தை செல்வம் கிடைக்கும்.

    வாழ்வில் சந்தோஷம் கிடைக்கும்.

    ஆண்கள் துர்க்கையை வழிப்பட்டு வந்தால் மனைவி மக்களுடன் சந்தோஷமாக வாழ்வார்கள்.

    வியாபாரம் விருத்தியாகும்.

    செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். செல்வ வளம் பெருகும்.

    இளம் பெண்கள் துர்க்கையை வாரம் தவறாமல் செவ்வாய் கிழமைகளில் வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலன் கிடைக்கும்.

    நல்ல கணவன் அமைவான்.

    வாலிபர்கள் துர்க்கையை பூஜித்து வந்தால் அழகும், அறிவும் பொருந்திய மனைவி வாய்ப்பாள்.

    அதனால் குடும்பம் செல்வக் களஞ்சியமாகும்.

    பிறக்கும் குழந்தைகளும் அறிவுள்ளவர்களாக இருப்பார்கள்.

    இதனால் வாழ்க்கையில் மேலும் மேலும் சந்தோஷம் உண்டாகும்.

    • ஞாயிற்றுக்கிழமைகளில் சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்வதால் வறுமை நீங்கும்.
    • வெள்ளிக் கிழமைகளில் தேங்காய் சாதம் நைவேத்யம் செய்தால் மாங்கல்ய பலன் பெருகும்.

    ராகு கேது பெயர்ச்சியான ஜாதக ரீதியாக சில சிரமங்கள் வருமானால், துர்க்கை வழிபாடு செய்தால் போதுமானது.

    ஒவ்வொரு கிழமையிலும் வழிபாடு செய்ய வேண்டிய விவரம் தரப்பட்டுள்ளது.

    ஞாயிறு

    ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30-6.00 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும்.

    சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.

    திங்கள்

    திங்கள்கிழமைகளில் காலை 7.30-9.00 க்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும்.

    இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும். வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும் என்பதும் நம்பிக்கை.

    செவ்வாய்

    ராகு கால நேரமான மாலை 3.00-4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும்.

    இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    புதன்

    மதியம் 12.00 முதல் 1.30க்குள் பஞ்சில் திரிசெய்து, விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும்.

    இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பதும், ரத்த சம்பந்தமான நோய் தீரும் என்பதும் நம்பிக்கை.

    வியாழன்

    வியாழக் கிழமைகளில் மதியம் 1.30-3.00 மணிக்குள் விளக்கேற்றி, எலும்மிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்து, வழிபட வேண்டும்.

    இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    வெள்ளி

    வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரமான காலை 10.30-12.00 துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம்.

    எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

    தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும்.

    இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.

    சனி

    சனிக்கிழமைகளில் காலை 9.00-10.30 வரை மஞ்சள்துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும்.

    இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும் என்பது நம்பிக்கை.

    ×