search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக வெளிநடப்பு"

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக திடமான கொள்கை முடிவு எடுக்கத் தவறிய தமிழக அரசை கண்டித்து சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். #DMK #MKStalin
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    நேற்று நான் பேசும் போது, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை பற்றி குறிப்பிட்டேன். ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு மத்திய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதி செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

    தமிழக அரசு அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்பதை அறிய விரும்புகிறேன். உடனடியாக அமைச்சரவையை கூட்டி அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்பாக அவசர ஆலோசனை நடத்த வேண்டும். இது தொடர்பாக விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆனால், இதற்கு சபாநாயகர் அனுமதி வழங்காததை கண்டித்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


    வெளிநடப்புக்கு பின்னர் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், " ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திடமான கொள்கை முடிவு எடுப்பதற்காக அமைச்சரவை கூட்டத்தை நடத்தி ஆலோசிக்க வேண்டும் என்று முதலமைச்சரை நான் வலியுறுத்தினேன். ஆனால் எதுவுமே நடக்காததால் தமிழக அரசின் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம்" என்று குறிப்பிட்டார்.

    இதன் பின்னர், சிறிது நேரம் நடைபெற்ற சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.  #DMK #MKStalin #SterlitePlant #TNAssembly
    ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்பாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
    சென்னை:

    சட்டசபை கூட்டத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பேசும்போது, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் போராடி வருகிறார்கள். அவர்களை அழைத்து பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    அதற்கு பதிலளித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது, “பல்வேறு விளக்கங்களை கூறி வரவுக்குள் தான் செலவுகள் இருக்க வேண்டும். அரசு ஊழியர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற விவரத்தையும்” தெரிவித்தார். ஆனால் பேச்சு வார்த்தைக்கு அழைப்பது பற்றி பேசவில்லை.

    இதை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

    மேட்டூர் அணையை 12-ந்தேதி திறக்க முடியாது என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்கிறோம் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். #DMK #MKStalin #TNAssembly #Walkout
    சென்னை:

    சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது மேட்டூர் அணையில் குறைந்த அளவு தண்ணீர் இருப்பதால் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்க இயலாது என்றும் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

    இதற்கு நன்றி தெரிவித்து அமைச்சர் காமராஜ் பேச முற்பட்டார். அதற்கு துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார். 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் வாசித்த பிறகு அதன்மீது எந்த விவாதமும் கூடாது என்று சபாநாயகர் எடுத்துக் கூறினார்.

    ஆனால் சபாநாயகர் கூறுகையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டதும் அதன்மீது விவாதம் தான் கூடாது, நன்றி சொல்லலாம் என்றார்.

    இதனால் துரை முருகனுக்கும், சபாநாயகருக்கும் 10 நிமிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் சபாநாயகர் தி.மு.க. ஆட்சியின் போது நடந்த சம்பவங்களை விளக்கி கூறி அப்போதும் நன்றி சொல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றார்.



    இதைத்தொடர்ந்து அந்த பிரச்சினை முடிவுக்கு வந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து மேட்டூர் அணையை 12-ந்தேதி திறக்க முடியாது என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

    இதைதொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் மு.க.ஸ்டாலினுடன் வெளி நடப்பு செய்தனர். #DMK #MKStalin #TNAssembly #Walkout

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு பிரச்சனையை முன்வைத்து தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க. இன்று வெளிநடப்பு செய்தது தொடர்பாக மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். #ThoothukudiFiring #TNAssembly #DMKWalkout
    சென்னை:

    சட்டசபையில் இன்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்க மறுத்ததுடன், முதலமைச்சர் பதவி விலகும்வரை இனி பேரவை நிகழ்வுகளில் திமுக பங்கேற்கப் போவதில்லை எனக் கூறினார். பின்னர் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து நிருபர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-



    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை கண்துடைப்பு நாடகம். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு முடிவு செய்தால், அமைச்சரவையை உடனடியாக கூட்டி கொள்கை முடிவை எடுத்து தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிட வேண்டும்.

    துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரிப்பதற்காக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் என்பது ஏமாற்று வேலை. துப்பாக்கி சூட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். துப்பாக்கி சூட்டுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiFiring #TNAssembly #DMKWalkout

    ×