search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக கூட்டம்"

    • செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
    • காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன் வரவேற்று பேசுகிறார்.

    சென்னை:

    காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி சார்பாக, "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் காஞ்சிபுரம் காந்தி ரோடு, தேரடி அருகில், மாபெரும் தேர்தல் பிரசார கூட்டம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் தலைமையில் நடைபெறுகிறது.

    காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன் வரவேற்று பேசுகிறார்.

    இக்கூட்டத்தில், எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    • ஒரு தோட்டத்தில் உள்ள எல்லா பழமும் எங்களுக்கு தான் என்று சொல்வது சனாதனம்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சாதனைகள் தொடரும். நாட்டின் மாற்றம் தமிழ்நாட்டில் இருந்து தொடங்கும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் டூவிபுரம் 5-ம் தெருவில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தினம்தோறும் மக்களுக்கான திட்டங்களை எப்படி எல்லாம் செயல்படுத்தலாம் என்று சிந்தித்து செயல்படும் தி.மு.க. ஆட்சியை பார்த்து திராவிடம் காலாவதியாகி விட்டது என்று சனாதனம் பற்றி ஆளுநர் பேசுகிறார். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள 2,200 கோவில் சொத்துக்களை மீட்டு பாதுகாத்துள்ளார். இதை சனாதனம் செய்யவில்லை. திராவிடம் தான் செய்தது.

    திராவிட மாடல் ஆட்சியில் படித்தவர்கள் தான் பலர் வெளிநாட்டில் பணியாற்றுகிறார்கள். இந்தியாவை ஆளும் நிலைக்கு திராவிட மாடல் வந்து விட்டது. ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் ரூ. 77 லட்சத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி துறைமுகம் மேம்படுத்துதல், தூர்வாருதல் பணிகள் நடைபெறுகின்றன.

    கோரம்பள்ளம் குளம் ரூ. 12 கோடியில் தூர்வாருதல், உப்பளத் தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஆட்சிக்கு வந்ததும் மழை காலங்களில் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தது மட்டுமின்றி அதற்கு தனிநல வாரியமும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் 8,400 பேர் பயனடைவார்கள்.

    திராவிடம் எல்லோருக்கும் ஒன்று தான். ஒரு தோட்டத்தில் உள்ள எல்லா பழமும் எங்களுக்கு தான் என்று சொல்வது சனாதனம். இது எல்லோருக்கும் என்று சொல்வது திராவிடம். யாரையும் தூக்கி பிடிக்க வேண்டாம். நீயும், நானும் ஒன்று என்று நினைக்க வேண்டும். எல்லா தப்பையும் நீங்கள் செய்துவிட்டு எங்களை காலாவதியாகி விட்டது என்று கூறுகிறீர்கள்.

    மக்கள் உங்களை விரட்டும் காலம் வந்து கொண்டு இருக்கிறது. அம்பேத்கார் சட்டத்தை இயற்றும் போது என்னையும் அமைச்சரையும் மக்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்ததை போல் ஆளுநரையும் அப்படி தேர்வு செய்யலாமா என்று கேட்டபோது அந்த பதவிக்கு யாரும் வர மாட்டார்கள். இது ஒரு அலங்கார பதவிதான் என்று கூறினார்கள்.

    அந்த அலங்காரம் தேவையில்லை என்றால் அதை எடுத்துவிடலாம். எங்கள் பதவி காலாவதியாகவில்லை. பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வந்த உங்கள் பதவிதான் காலாவதியாக போகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சாதனைகள் தொடரும். நாட்டின் மாற்றம் தமிழ்நாட்டில் இருந்து தொடங்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், கலைஞர், ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழையவில்லை. தான் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நீட் வந்தது. மாநில உரிமைகளை எல்லாம் விட்டுக் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. மோடிக்கு ஜால்ரா போடுபவர்கள் நமக்கு தேவையில்லை.

    36 நல வாரியங்கள் மூலம் 6 லட்சத்து 75 ஆயிரம் பேர் பயனடைகின்றனர். இந்த தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளன. அது மீண்டும் தொடர கனிமொழி எம்.பி மீண்டும் தேவை என்று பேசினார். தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

    • தி.மு.க. சார்பில் இன்று மாலை 6 மணிக்கு சைதாப்பேட்டை தேரடி திடலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    • கூட்டத்தில் தி.மு.க. பொருளாளரும் பாராளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, நாஞ்சில் சம்பத் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்கள்.

    சென்னை:

    சைதை மேற்கு பகுதி தி.மு.க. சார்பில் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் சைதை மேற்கு பகுதி தி.மு.க. சார்பில் இன்று மாலை 6 மணிக்கு சைதாப்பேட்டை தேரடி திடலில் அமைச்சரும், சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான மா.சுப்பிரமணியன் முன்னிலையில், சைதை மேற்குப் பகுதி செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் தி.மு.க. பொருளாளரும் பாராளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, நாஞ்சில் சம்பத் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்கள்.

    நிகழ்ச்சியில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, துணைமேயர் மு.மகேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் அரவிந்த் ரமேஷ், காரம்பாக்கம் க.கணபதி, ஏ.எம்.வி.பிரபாகரராஜா மற்றும் இரா.துரைராஜ், மா.அன்பரசன், வழக்கறிஞர்கள் எம்.ஸ்ரீதரன், ஆர்.ரவிச்சந்திரன், ராமாபுரம் வி.ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள். முடிவில் எஸ்.பி. கோதண்டம், எம்.நாகா ஆகியோர் நன்றி கூறுகிறார்கள்.

    ×