search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டைனோசர்"

    • 2022ல், டேமியன் நடைபயிற்சிக்கு செல்லும் போது, சில எலும்புகளை கண்டார்
    • டைட்டனோசர் எலும்புக்கூடு, க்ரூசி அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது

    பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள க்ரூசி (Cruzy) பகுதிக்கு அடுத்துள்ளது மோன்டோலியர் (Montouliers) காட்டுப் பகுதி.

    இப்பகுதியை சேர்ந்த தொல்பொருள் ஆர்வலரான டேமியன் போஷெட்டோ (Damien Moschetti) இங்கு தனது வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    கடந்த 2022ல், டேமியன் நடைபயிற்சிக்கு செல்லும் போது, அந்த மலைப்பகுதியில், புதைந்த நிலையில் சில எலும்புகள் தென்படுவதை கண்டார்.

    இதையடுத்து, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் ஆய்வை தொடங்கினர்.

    ஆய்வுப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் தொடர்ந்தால், புதைபொருட்களுக்கு சேதம் ஏற்படலாம் என்பதால் அப்பகுதி முழுவதையும் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

    இந்த ஆராய்ச்சியில் பெருமளவிற்கு தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். மேலும், இந்த ஆய்வு ரகசியமாக நடத்தப்பட்டது.


    சுமார் 2 வருட காலம் பல முறை 10 நாட்கள் இடைவெளியில் நடத்தப்பட பல்வேறு ஆய்வில், டேமியனால் கண்டறியப்பட்ட புதைவடிவம், பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு வகை டைனோசரின் எலும்பு கூட்டின் 70 சதவீத புதைவடிவம் என தெரிய வந்தது.

    அது சுமார் 7 கோடி (70 மில்லியன்) வருடங்களுக்கு முன் வாழ்ந்த "டைட்டனோசர்" (titanosaur) எனும் அரிய டைனோசர் உயிரினத்தின் புதைந்த எலும்புகள் என்பதும் தெரிய வந்துள்ளது.

    இந்த டைட்டனோசர் எலும்புக்கூடு, க்ரூசி அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.

    "கடந்த 28 வருடங்களுக்கும் மேலாக க்ரூசி நகரின் சுற்றியுள்ள பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர் போன்ற உயிரினங்களின் புதைபடிவங்கள் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டு வெளியே கொண்டு வரப்படுகின்றன. ஆனால், இம்முறை கிடைத்திருப்பது அந்த உயிரினத்தின் உடலில் இருந்த 70 சதவீத பெரும்பாலான பாகங்கள்" என க்ரூசி அருங்காட்சியகத்தின் நிறுவனர், பிரான்சிஸ் ஃபேஜ் (Francis Fage) தெரிவித்தார்.

    • டைனோசரின் பல இனங்கள் கண்டறியப்பட்டன.
    • பர்லோவிச்னஸ் ரேபிடஸ் ஒரு சிறிய, வேகமான மாமிச உண்ணி ஆகும்.

    பல கோடி நூறு ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் இனம் வாழ்ந்தது. அதன் கால் தடங்கள், எலும்புகள், புதை படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் டைனோசரின் பல இனங்கள் கண்டறியப்பட்டன.

    இந்த நிலையில் பிரேசிலில் கால்தடங்கள் மூலம் புதிய டைனோசர் இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரேசிலின் அரராகுவாரா நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கால் தடங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதில் பார்லோவிச்னஸ் ரேபிடஸ் என்று அழைக்கப்படும் புதிய டைனோசர் இனம் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இது 60 முதல் 90 செ.மீ. (2 முதல் 3 அடி) உயரம் கொண்ட ஒரு சிறிய மாமிச விலங்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பர்லோவிச்னஸ் ரேபிடஸ் ஒரு சிறிய, வேகமான மாமிச உண்ணி ஆகும். இது சுமார் 12.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.

    • இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டைனோசர்ஸ்’.
    • இப்படத்தில் புது முகங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    புதுமுக இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'. இப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய் பிரியா, யாமினி சந்தர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேலக்ஸி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


    தஸ்தா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஆர். கலைவாணன் படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். புதுமுகங்கள் நடிப்பில் கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த டிரைலரை இயக்குனர் பா.இரஞ்சித் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.



    • தொல்லியல் ஆய்வாளர்கள் இது டைனோசரின் இடது கால் தடம் என்று கூறியுள்ளனர்.
    • கண்டெடுக்கப்பட்ட டைனோசரின் கால்தடம் அருங்காட்சியகத்துக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    யோர்க்ஷிர்:

    இங்கிலாந்தில் சுமார் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் 3 அடி நீள கால் தடம் கண்டறியப்பட்டுள்ளது. பழமையான யோர்க்ஷிர் மாவட்டத்தில் இருக்கும் கடற்கரை பகுதியில் பாறை துண்டின் மீது டைனோசரின் கால் தடம் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    இது குறித்து பேசிய தொல்லியல் ஆய்வாளர்கள், கண்டெடுக்கப்பட்டது டைனோசரின் இடது கால் தடம் என்றும், அதன் அளவு 3.3 அடி நீளம் இருப்பதாகவும், இந்த உயிரினம் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளர்.

    மேலும், கண்டெடுக்கப்பட்ட டைனோசரின் கால்தடம் அருங்காட்சியகத்துக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிலி மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 5 பேர் கொண்ட வல்லுனர் குழு ஆய்வு.
    • 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் டைனோசர்களின் கால்தடங்களை கண்டுபிடித்தனர்.

    சிலி நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஹூடாகோண்டோ என்ற சிறிய நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டைனோசர்களின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    சிலி மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 5 பேர் கொண்ட வல்லுனர் குழு ஆய்வு மேற்கொண்டபோது 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் டைனோசர்களின் கால்தடங்களை கண்டுபிடித்தனர்.

    இதுகுறித்து ஆய்வாளர் கிறிஸ்டியன் சலாசர் கூறும்போது, இது தனது அனுபவத்தில் இதுவரை இல்லாத ஒன்று என்றும், 10 நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்தடங்களை கண்டுபிடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இது மிகப்பெரிய திட்டத்தின் தொடக்கம் என்றும் தெரிவித்துள்ளார். 

    ×