நம்ம எதிரி பெருசா இருந்தா தான் எதிர்காலம் பெருசா இருக்கும்.. வைரலாகும் டைனோசர்ஸ் டிரைலர்

இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டைனோசர்ஸ்’.இப்படத்தில் புது முகங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
டைனோசர்ஸ்
டைனோசர்ஸ்
Published on

புதுமுக இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'. இப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய் பிரியா, யாமினி சந்தர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேலக்ஸி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தஸ்தா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஆர். கலைவாணன் படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். புதுமுகங்கள் நடிப்பில் கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த டிரைலரை இயக்குனர் பா.இரஞ்சித் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com