search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேறும் சகதி"

    • அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
    • கிராம மக்கள் குறுக்கு வழியாக பயன்படுத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பெரியபாபுசமுத்திரம் கிராமத்தில் இருந்து ஏரிக்கரை வழியாக வனத்தாம்பாளையம் செல்லும் தார்சாலை பெரியபாபுசமுத்திரத்தில் மண் சாலை போல மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலை சேறும் சகதியுமாக மக்கள் பயன்படுத்த முடியாத அளவு மிக மோசமாக உள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். 

    இச்சாலை வழியாக புதுச்சேரி மற்றும் விழுப்புரம் பகுதிகளுக்கு சென்று வர பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் குறுக்கு வழியாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே பெரியபாபு சமுத்திரத்தில் இருந்து வனத்தாம்பாளையம் செல்லும் ஏரிக்கரை சாலையை பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • பஸ்கள் நிறுத்தப்படும் அனைத்து பகுதிகளும் மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக மிக மோசமாக உள்ளது.
    • டிரைவர்கள் பஸ்களை பணிமனையில் இயக்குவது மிக சிரமமாக உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சி உட்பட்ட தி.இளமங்கலத்தில் கடந்த சுமார் 29 ஆண்டுகளுக்கு மேலாக அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் திட்டக்குடி கிளை பணிமனை உள்ளது. இங்கு பஸ்கள் நிறுத்தப்படும் அனைத்து பகுதிகளும் மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக மிக மோசமாக உள்ளது.

    இதனால் டிரைவர்கள் பஸ்களை பணிமனையில் இயக்குவது மிக சிரமமாக உள்ளது. சில சமயம் பஸ்கள் பணிமனையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் சிக்கிக் கொள்வதால் டிவைர்கள் பஸ்களை இயக்க சிரமப்படுகின்றனர்.இது குறித்து பல ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு போக்குவரத்து பணிமனையை சீர் செய்து சமநிலைப்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்தும் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் அவல நிலை நீடிக்கிறது.

    பஸ்களை இயக்கும் சமயத்தில் பள்ளத்தில் பஸ் சிக்கிக் கொண்டு பழுது ஏற்பட்டால் டிவைர்கள் பொறுப்பு என அவர்களுக்கு மெமோ கொடுப்பதாக புகார் எழுந்து உள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் அரசு பஸ்களை பராமரிக்கும் பணிமனை பொறுப்புடன் அப்பகுதியில் சிமெண்ட் தளம் அமைத்து பஸ்களை நிறுத்த வேண்டும். மேலும் பணிமனையில் பணி புரியும் ஊழியர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்கும் ஓய்வறை உயரமான தளம் அமைத்து தர வேண்டும்.

    காரணம் தற்போது தரை மட்டத்துக்கு ஓய்வறை உள்ளதால் பின்புறம் உள்ள் விவசாய நிலங்களில் இருந்து பாம்புகள் உள்ளே நுழைவது அன்றாட நிகழ்வுகளாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போக்குவரத்து பணிமனையை போர்க்கால அடிப்படையில் சீர் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். 

    • சுந்தராபுரம்-மதுக்கரை சாலை முழுவதும் கடந்த 4 நாட்களாகவே சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
    • வாகனங்கள் அனைத்தும் சேற்றில் மிதந்து, மெல்ல மெல்ல நகர்ந்து செல்லும் சூழ்நிலை காணப்படுகிறது.

    குனியமுத்தூர்:

    கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

    இந்த நிலையில் சுந்தராபுரம்-மதுக்கரை சாலை முழுவதும் கடந்த 4 நாட்களாகவே சேறும், சகதியுமாக காணப்படுகிறது.

    இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    கடந்த சில வரு–டங்களாகவே சுந்தரா புரம் -மதுக்கரை சாலையை பல்வேறு காரணங்களு க்காக தோண்டப்பட்டு அந்த பகுதியே குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    கடந்த 4 நாட்களாக நள்ளிரவில் கன மழை பெய்து வருகிறது. இதனால் இந்த சாலையில் குளம் போல் சேறும், சகதியும் தேங்கி காட்சியளிக்கிறது.

    சுந்தராபுரம்-மதுக்கரை சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலையை கண்ணில் காண முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. எங்கு திரும்பினாலும் சேறும் சகதியும் காணப்படுகிறது.

    வாகனங்கள் அனைத்தும் சேற்றில் மிதந்து, மெல்ல மெல்ல நகர்ந்து செல்லும் சூழ்நிலை காணப்படுகிறது. ஆனால் இதனை சரி செய்ய இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இரண்டு சக்கரம், நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மற்றும் பாதசாரிகளும் கூட சாலையைக் கடக்க முடியாத நிலையில் உள்ளனர்.

    சாலை முழுவதும் நீரில் மிதப்பதால் எங்கு பள்ளம் இருக்கிறது என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விழுந்து எழுந்து செல்லும் நிலையும் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் ஆட்டோ மற்றும் லாரி டயர் சேற்றில் சிக்கி சாய்ந்திருக்கும் நிலையையும் காணமுடிகிறது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க விட்டால் பொது மக்களாகிய நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் செய்வோம். இவ்வாறு வாகன ஓட்டிகள் தங்களது மனக் குமுறல்களை வெளியிட்டனர்.

    • சவேரியார் ஆலயம் முதல் கோட்டார் நாராயண குரு மண்டபம் வரை உள்ள சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது
    • 4 சக்கர வாகனங்கள் செல்லும்போது இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது சகதிகளை வீசி செல்வதால் அவர்கள் கடும் அவதி

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட பகுதி களில் பாதாள சாக்கடை பணிகள் 95 சதவீதம் முடிவ டைந்துள்ளது. பிரதான சாலையாக கருதப்படும் கோட்டார் சாலையில் பாதாள சாக்கடைக்கான பணிகள் முடிவடைந்து உள்ளது.

    ஆனால் அந்தபகுதி களில் இன்னும் சாலை அமைக்கப்படவில்லை சாலை அமைக்கப்படாததால் சவேரியார் ஆலயம் முதல் கோட்டார் நாராயண குரு மண்டபம் வரை உள்ள சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

    இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் மட்டுமின்றி இரு சக்கர வாகனங்களும் சென்று வருகிறது. வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளங்களில் சிக்கித் தவிக்கும் அவல நிலையை சொல்லி மாளாது. அந்த அளவிற்கு படுமோசமாக இந்த சாலை காட்சி அளிக்கிறது.

    சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னரும் பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் நாகர்கோ விலில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக இந்த சாலை சேறும் சகதியுமாக மாறி உள்ளது சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது .

    சாலையில் பொதுமக்கள் நடந்து செல்லக்கூடிய செல்லக்கூட முடியாத அள விற்கு மோசமாக உள்ளது. சாலையில் தேங்கி இருக்கும் தண்ணீரில் 4 சக்கர வாக னங்கள் செல்லும்போது இரு சக்கர வாகனங் களில் செல்பவர்கள் மீது சகதிகளை வீசி செல்வதால் அவர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

    பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்வோரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக சாலையில் உள்ள பள்ளங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதே போல் சவேரியார் ஆலயத்தில் இருந்து செட் டிக்குளம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து பஸ் போக்கு வரத்து நடந்து வருகிறது. இந்த சாலையின் தற்போது சேறும் சகதியமாக மாறி உள்ளது. சாலைகள் சேறும் சகதிகமாக காட்சி அளிப்ப தால் விபத்துக்கள் நடக்க வும் வாய்ப்புள்ளது. அதற்கு முன்னதாக உரிய நடவ டிக்கை எடுக்கவேண்டும் என்பதை அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    ×