search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செலவில்"

    • விஜய் வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
    • ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 2 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    பூதப்பாண்டி:

    காட்டுப்புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் பாராளுமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 2 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

    விழாவில் விஜய்வசந்த் எம்.பி. கலந்துகொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி வைத்தார். இதில் தோவாளை மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் செல்வராஜ், வட்டார துணை தலைவர் மரிய ஜான், செயல் தலைவர் மிக்கேல், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    • தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா தொடங்கி வைத்தார்
    • நெய்யூர் பேரூராட்சி தலைவி பி.வி. பிரதீபா பணிகளை தொடங்கி வைத்தார்.

    இரணியல்:

    நெய்யூர் பேரூராட்சி 12-வது வார்டு கொடுமுட்டி சந்திப்பு முதல் சானல்கரை வரை சாலை சிமெண்ட் தளம் அமைக்க ரூ.9 லட்சமும், 6-வது வார்டு இலந்தவிளை குருசடி முதல் இலந்தவிளை அங்கன்வாடி வரை செல்லும் சாலை கருந்தளம் அமைக்க ரூ.7 லட்சமும் என ரூ.16 லட்சத்திற்கான சாலை வளர்ச்சி பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணிகள் தொடக்க விழா அந்தந்த பகுதிகளில் நடந்தது.

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா முன்னிலையில், நெய்யூர் பேரூராட்சி தலைவி பி.வி. பிரதீபா பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன், நிர்வாகிகள் ஜெரோம்பெனடிக்ட் மற்றும் ஊர் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
    • கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு பகுதியான லூர்துமாதா தெருவில் உள்ள சானல் ரோட்டில் பேரூராட்சி பொது நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிதாக தடுப்புச்சுவர் கட்டி சிமெண்ட் காங்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது. இந்த பணியின் தொடக்க விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட உள்ள தடுப்பு சுவருடன் கூடிய சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஆனி ரோஸ்தாமஸ், ஆட்லின் சேகர், அரசு ஒப்பந்ததாரர் சுதாபாஸ்கர், முன்னாள் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தாமஸ், தி.மு.க. நிர்வாகிகள் அன்பழகன், புனிதன், புஷ்பராஜ், சகாயம், நிசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
    • ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார்.

    கன்னியாகுமரி:

    அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக அவைக்கூடத்தில் நடந்தது. ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார். துணை தலைவி சண்முகவடிவு, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பரதி, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் அருண்காந்த், பிரேமலதா, ராஜேஷ், ஆரோக்கிய சவுமியா, பால்தங்கம், ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நீலகண்டமூர்த்தி, ஒன்றிய பொறியாளர் ஹெலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் செலவில் சாலை, குடிநீர் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கலெக்டர் ஸ்ரீதர் திறந்து வைத்தார்
    • கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், கிள்ளியூர், விளவங்வோடு, பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளும், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியும் உள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், கிள்ளியூர், விளவங்வோடு, பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளும், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியும் உள்ளது. இங்கு தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு எந்திரங்கள் கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எந்திரங்கள் திங்கள்நகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும், தோவாளை தாலுகா அலுவலகத்திலும் வைக்கப்பட்டு வந்தது. இந்த எந்திரங்களை நாகர்கோவில் கலெக்டர் வளாகத்தில் வைக்க மின்னணு வாக்கு ப்பதிவு எந்திர கிடங்கு கட்டப்பட்டது.

    ரூ.2 கோடியே 93 லட்சம் செலவில் கட்டிடம் கட்டுமான பணி நடந்தது. தற்பொழுது இந்த பணிகள் முடிவடைந்து இன்று திறக்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கை கலெக்டர் ஸ்ரீதர் திறந்து வைத்தார். தேர்தல் தாசில்தார் சுசிலா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அலுவலகம் திறக்கப்பட்டதையடுத்து திங்கள்நகர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் தோவாளை தாலுகா அலுவ லகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கிற்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது. லாரிகள் மூலமாக அந்த எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இங்கு கொண்டுவரப்பட்டது.

    5,204 மின்னணு எந்திரங்களும் 3,760 கட்டுப்பாட்டு கருவியும், 2612 வி.வி.பேட் எந்திரங்கள் என மொத்தம் 11,582 எந்திரங்களை இந்த கட்டிட த்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தரை தளம், முதல் தளம், இரண்டாவது தளத்தில் இந்த எந்திரங்கள் அனை த்தும் வைக்கப்படுகிறது. எந்திரங்கள் அனைத்தும் வைக்கப்பட்ட பிறகு அந்த அறைகளை பூட்டி சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டிடத்தில் 13 சி.சி.டி.வி. காமிராக்கள் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு கருவி, லிப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    • சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பண்ணாரியம்மன் கோவிலில் தினமும் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
    • மேலும் கோவிலில் முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் ரூ.1.92 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி யம்மன் கோவிலுக்கு அமைச்சர் சேகர்பாபு வந்ததார். தொடர்ந்து அங்கு சாமி தரிசனம் செய்து ஆய்வு செய்தார்.

    இதில் ஏ.ஜி.வெங்கடா சலம் எம்.எல்.ஏ, கூடுதல் ஆணையர் (இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை) கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுபாலன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    அப்போது அைமச்சர் சேகர்பாபு பேசியதாவது:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த புதிய அரசு பல்வேறு திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. பல ஆண்டுகளாக நிலுவை யில் இருந்த திருப்பணிகளை நிறைவு செய்து குடமுழுக்கு நடத்துவது, 12 ஆண்டுகள் கடந்து திருப்பணிகள் மேற்கொள்ளாத கோவில் களில் திருப்பணிகள் மேற்கொண்டு வருகிறது.

    மேலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோவில்களில் பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஆணையிட்டு உள்ளார். இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் தமிழகத்தில் தற்போது ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் வைப்பு நிதியாக ரூ.1 லட்சம் என சுமார் 11,959 கோவில்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த வைப்பு நிதி ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது.

    மேலும் குளங்கள், தேர்கள், நந்தவனங்கள் பராமரிப்பு, பழைய தேர்கள் புது ப்பிப்பது, புதுத்தேர்களை உருவாக்குவது என பல் வேறு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    இதே போல் தற்போது சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பண்ணாரியம்மன் கோவிலில் தினமும் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கோவிலில் முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் ரூ.1.92 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதேபோல் கோவில் மகா மண்டபம் மற்றும் சோபனமண்டபத்தில் கைப்பிடிகள் பித்தளையாக அமைக்க உத்தர விடப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.87 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    ராஜ கோபுரம் கட்டுமான பணி ரூ.11.50 கோடி செலவில் 9 நிலை ராஜ கோபுரம் அமைக்க ப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் மருத்துவமனையை அமைக்கப்படும். அந்த மருத்துவ மனையை முதல்-அமைச்சர் திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலைய த்துறை இணைஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணை யர்திரு.அன்னக்கொடி, ஓய்வு பெற்ற தொல்பொருள் துறை உதவி இயக்குநர் சுப்பிரமணியன், இந்து சமயஅற நிலையத்துறை தாசில்தார் தாமோதரன் மற்றும் கோவில் செயல் அலுவலர்கள் அருள்குமார், கயல்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×