காட்டுப்புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.19.50 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்

விஜய் வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 2 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
காட்டுப்புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.19.50 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்
Published on

பூதப்பாண்டி:

காட்டுப்புதூர் அரசு தொடக்கப்பள்ளியில் பாராளுமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 2 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

விழாவில் விஜய்வசந்த் எம்.பி. கலந்துகொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி வைத்தார். இதில் தோவாளை மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் செல்வராஜ், வட்டார துணை தலைவர் மரிய ஜான், செயல் தலைவர் மிக்கேல், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com