நெய்யூர் பேரூராட்சியில் ரூ.16 லட்சம் செலவில் புதிய சாலை பணி

தி.மு.க. ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா தொடங்கி வைத்தார்நெய்யூர் பேரூராட்சி தலைவி பி.வி. பிரதீபா பணிகளை தொடங்கி வைத்தார்.
நெய்யூர் பேரூராட்சியில் ரூ.16 லட்சம் செலவில் புதிய சாலை பணி
Published on

இரணியல்:

நெய்யூர் பேரூராட்சி 12-வது வார்டு கொடுமுட்டி சந்திப்பு முதல் சானல்கரை வரை சாலை சிமெண்ட் தளம் அமைக்க ரூ.9 லட்சமும், 6-வது வார்டு இலந்தவிளை குருசடி முதல் இலந்தவிளை அங்கன்வாடி வரை செல்லும் சாலை கருந்தளம் அமைக்க ரூ.7 லட்சமும் என ரூ.16 லட்சத்திற்கான சாலை வளர்ச்சி பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணிகள் தொடக்க விழா அந்தந்த பகுதிகளில் நடந்தது.

குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா முன்னிலையில், நெய்யூர் பேரூராட்சி தலைவி பி.வி. பிரதீபா பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன், நிர்வாகிகள் ஜெரோம்பெனடிக்ட் மற்றும் ஊர் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com