search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை தினம்"

    • சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
    • சென்னை பள்ளி மாணவ, மாணவியர்கள் எடுத்த புகைப்படங்கள் "அக்கம் பக்கம்" என்ற தலைப்பில் ரிப்பன் கட்டிட வளாகத்தில் புகைப்பட கண்காட்சியாக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக சென்னை போட்டோ பியனாலே அறக்கட்டளை, ஐபோன்களைப் பயன்படுத்தி ஆறு மாத கால புகைப்படப் பட்டறைகளை மூன்று சென்னை பள்ளிகளில் (புளியந்தோப்பு தொடக்கப்பள்ளி, பெரம்பூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் நுங்கம்பாக்கம் ஸ்டெம் பள்ளி) நடத்தியது.

    இதில், 65 மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, புகைப்படங்களை எடுத்தனர். தொடர்ந்து சென்னை பள்ளி மாணவ, மாணவியர்கள் எடுத்த புகைப்படங்கள் "அக்கம் பக்கம்" என்ற தலைப்பில் ரிப்பன் கட்டிட வளாகத்தில் புகைப்பட கண்காட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஆகஸ்ட்-22-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த கண்காட்சி கடந்த 10-ந்தேதி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அந்த கண்காட்சியில் இடம் பெற்ற புகைப்படங்களை எடுத்த சென்னை பள்ளி மாணவ, மாணவிகளை பாராட்டி மேயர் பிரியா ரிப்பன் கட்டிட அலுவலக கூட்டரங்கில் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    இதில் துணை ஆணையர் (கல்வி) ஷரண்யா அறி, கல்வி அலுவலர் வசந்தி, சென்னை போட்டோ பியனாலே அறக்கட்டளை உறுப்பினர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல்.
    • நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை.

    சென்னையின் 383-வது தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதற்கு இன்னைக்கு 383வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல்.

    இப்ப நீங்க பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம். காத்திருங்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையின் 383-வது தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து.
    • சென்னையின் நீண்ட வரலாறு அனைத்து மக்களையும் ஈர்த்துள்ளது.

    சென்னையின் 383-வது தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை தினத்தையொட்டி கடந்த இரண்டு நாட்களாக சென்னை மாநகராட்சி பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் நடத்தியது.

    இந்நிலையில், சென்னை தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், " சென்னையின் செழுமையான கலாச்சாரம், ஆன்மீகம், துடிப்பான புலமை ஆகியவற்றின் நீண்ட வரலாறு அனைத்து மக்களையும் ஈர்த்தது மற்றும் ஊக்கப்படுத்தியது " என தனது வாழ்த்துகளை தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடும் விழாவுக்கும் மாநகராட்சி ஏற்பாடு.
    • கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க மக்களுக்கு அழைப்பு.

    ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    சென்னை தினத்தை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையை ஒட்டியுள்ள சாலையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இரு தினங்களிலும் மாலை 3.30 மணி முதல் இரவு 11.30 மணிவரை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் சென்னை தினம் கொண்டாடப்படவுள்ளது. கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வௌிப்படுத்தும் நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தவிர, ஆக. 21-ம் தேதி அன்று சென்னையில் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடும் விழாவுக்கும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

    மெட்ராஸ் தினத்தை ஒட்டி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தமிழில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #MadrasDay #HarbhajanSingh @ChennaiIPL @harbhajan_singh

    சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அணியில் இணைந்தது முதலே தமிழில் அவ்வப்போது ட்விட் செய்து ரசிகர்களை அதிர வைப்பார். ஒவ்வொரு போட்டி முடிவிலும் அவரின் தமிழ் ட்வீட்டுக்கு லைக்ஸ்கள் குவியும்.

    இந்நிலையில், மெட்ராஸ் தினத்தை ஒட்டி ஸ்பெஷல் வாழ்த்து ஒன்றை அவர் தெரிவித்துள்ளார். அதில், 

    கல கல னு ஊரு கெத்தா மெட்ராஸ் சிட்டி னு பேரு
    பரபரப்ப பாரு இங்க மக்கள் கூட்டம் ஜோரு
    ஐபில் னு அந்த பக்கம் வந்தோம் ஒரு நாளு அது செம தாறு மாறு 
    என்னைக்கும் எங்களுக்கு சென்னை ஒரு தாய் வீடு தான்
    இன்னக்கி ஊருக்கு 379வது பிறந்தநாள் 
    வாழ்த்துக்கள் சொல்லிக்குறேன் 

    என ஹர்பஜன் சிங் ட்வீட்டியுள்ளார். 




    ×