search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுத்தை தாக்குதல்"

    • சிறுத்தையின் தொடர் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி சுற்றுவட்டார கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • அம்பரோஸ் பகுதியில் புதரில் பதுங்கியிருந்த சிறுத்தைக்கு துப்பாக்கி மூலம் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தினர்.

    நீலகிரி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அவை ஊருக்குள் புகுந்து கால்நடைகளை கொன்று வருவதோடு மனிதர்களையும் தாக்கி வருகிறது.

    கடந்த சில நாட்களில் மட்டும் சிறுமி உள்பட 4 பேரை சிறுத்தை தாக்கி இருந்தது. அதில் படுகாயம் அடைந்த ஏலமன்னாவை சேர்ந்த சரிதா என்பவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    நேற்று தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை 3 வயது சிறுமியை கவ்வி இழுத்து சென்றது. கழுத்து பகுதியில் பலத்த காயமடைந்த சிறுமி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தாள்.

    இதையொட்டி சிறுத்தையின் தொடர் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி சுற்றுவட்டார கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் அம்பரோஸ் பகுதியில் புதரில் பதுங்கியிருந்த சிறுத்தைக்கு துப்பாக்கி மூலம் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தினர். சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் நடமாட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    சிறுத்தையை பிடிக்க கூண்டுகளுடன் வனத்துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.

    இதையடுத்து கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது.

    • கடந்த சில நாட்களில் மட்டும் சிறுமி உள்பட 4 பேரை சிறுத்தை தாக்கி இருந்தது.
    • கழுத்து பகுதியில் பலத்த காயமடைந்த சிறுமி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தாள்.

    சென்னை:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அவை ஊருக்குள் புகுந்து கால்நடைகளை கொன்று வருவதோடு மனிதர்களையும் தாக்கி வருகிறது.

    கடந்த சில நாட்களில் மட்டும் சிறுமி உள்பட 4 பேரை சிறுத்தை தாக்கி இருந்தது. அதில் படுகாயம் அடைந்த ஏலமன்னாவை சேர்ந்த சரிதா என்பவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    நேற்று தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை 3 வயது சிறுமியை கவ்வி இழுத்து சென்றது. கழுத்து பகுதியில் பலத்த காயமடைந்த சிறுமி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தாள்.

    இதையொட்டி சிறுத்தையின் தொடர் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி சுற்றுவட்டார கிராம மக்கள் பந்தலூர் பஜார், தேவாலா பஜார், மேங்கோரேஞ்ச் பிரிவு ஆகிய 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த 3 வயது குழந்தை உட்பட 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தற்போது திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறை அளித்துள்ள அறிக்கை பக்தர்களின் பாதுகாப்புக்கு போதுமானதாக இல்லை.
    • வனவிலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் தெரியப்படுத்த வேண்டும்.

    திருப்பதி:

    திருப்பதி அலிபிரி நடைபாதையில் நடந்து சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்துச்சென்று கடித்து கொன்றது.

    இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 6 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன. தொடர்ந்து சிறுத்தை, கரடி நடமாட்டம் உள்ளது.

    இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான முன்னாள் உறுப்பினர் பானு பிரகாஷ் ஆந்திர ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் நடைபாதையில் நடந்து செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை நிரந்தரமாக உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தார்.

    அந்த மனு மீதான விசாரணை நேற்று ஆந்திரா ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் தற்போது திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறை அளித்துள்ள அறிக்கை பக்தர்களின் பாதுகாப்புக்கு போதுமானதாக இல்லை.

    வனவிலங்குகள் தாக்குதலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க திருப்பதி அலிபிரியில் இருந்து திருப்பதி மலை வரை 2 பக்கமும் இரும்பு வேலி மற்றும் சுரங்க நடைபாதை அமைப்பது குறித்து திருப்பதி தேவஸ்தானம், வனத்துறை, வனவிலங்கு நிர்வாகம் ஆகியவை இணைந்து மேலும் ஒரு கூட்டத்தை கூட்ட வேண்டும்.

    கூட்டத்தில் பக்தர்களின் பாதுகாப்பு நிரந்தர தீர்வுக்கு அறிக்கை தயார் செய்ய வேண்டும். அந்த அறிக்கையை 6 வார காலத்திற்குப் பின்பு ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.

    அதேபோல் வனவிலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் தெரியப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • காயம் அடைந்த 3 பேருக்கும் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
    • சரிதா என்ற இளம்பெண் மட்டும் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை ஒன்று நடமாடி வருகிறது.

    இந்த சிறுத்தை அவ்வப்போது ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.

    ஏலமண்ணா பகுதியில் கடந்த 21-ந் தேதி காலை புகுந்த சிறுத்தை அந்த பகுதியை சேர்ந்த சரிதா(வயது29), துர்கா(55), வள்ளியம்மாள் ஆகிய 3 பெண்களை சிறுத்தை தாக்கியது.

    இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதனை அறிந்த மக்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை பிடிக்க 5 இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். அத்துடன் அந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தி, சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.

    காயம் அடைந்த 3 பேருக்கும் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவர்களில் சரிதா என்ற இளம்பெண் மட்டும் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி சரிதா பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

    இந்த தகவல் அவர்களது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமானோர் அரசு ஆஸ்பத்திரியில குவிந்தனர். அவர்கள் சரிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 3 மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்தது.
    • கேமராக்களை ஆய்வு செய்தபோது லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அருகே சிறுத்தை நடமாடுவதை உறுதி செய்தனர்.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் அருகே சிறுத்தைகள் நடமாட்டம் இருந்து வருகிறது.

    ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு ஒரு சிறுமியை அடித்து கொன்றது. அதற்கு முன்பு ஒரு சிறுவன் படுகாயத்துடன் மீட்கப்பட்டான்.

    இதனையடுத்து கூண்டுகள் வைத்து அடுத்தடுத்து 6 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டன. இதனால் கடந்த 3 மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக லட்சுமி நரசிம்ம சாமி சன்னதி அருகே உள்ள நடைபாதை அருகே அடிக்கடி மீண்டும் சிறுத்தை நடமாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் கேமராக்களை ஆய்வு செய்தபோது லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அருகே சிறுத்தை நடமாடுவதை உறுதி செய்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    பக்தர்கள் தனியாக செல்லக்கூடாது, குழுவாக செல்லவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் மீண்டும் மூங்கில் கம்பு வழங்கி வருகின்றனர்.

    இதுதவிர 100 படிக்கட்டுகளுக்கு ஒரு போலீசார் மற்றும் வனத்துறையினர் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தி முகாமிட்டுள்ளனர். அவர்கள் பக்தர்கள் தனியாக செல்லாதபடி கண்காணித்து 100 பேர் குழுவாக அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

    சிறுவர், சிறுமிகளை அழைத்துச்செல்லும்போது மிக கவனமாக இருக்க வேண்டும் எனவும், மலைப்பாதையில் வனத்துறையினர் மற்றும் போலீசார் மைக் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

    திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியொட்டி நாளை முதல் 9 இடங்களில் பக்தர்களுக்கு தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது. அதனை பெற்று நேரடியாக சாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும்.

    இதன் மூலம் விரைவாக தரிசனம் செய்யலாம். டோக்கன் தீரும் வரை பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

    இன்று இலவச தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • கடந்த 10 நாட்களாக சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் மலைப்பகுதியில் கடாமான் ஒன்று சுற்றி வந்தது.
    • வாகன ஓட்டிகளின் ஹாரன் சத்தத்தை கேட்டு சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, புலி, மான், சிறுத்தை கடாமான், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    கடந்த 10 நாட்களாக சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் மலைப்பகுதியில் கடாமான் ஒன்று சுற்றி வந்தது. இந்நிலையில் நேற்று இரவு அந்த கடாமானை சிறுத்தை தாக்கி கொன்று அதன் உடல் பாகத்தை தின்று கொண்டு இருந்தது.

    அப்பொழுது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளின் ஹாரன் சத்தத்தை கேட்டு சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. பின்னர் இதுகுறித்து கடம்பூர் வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த கிடந்த கடாமானை அப்புறப்படுத்தினர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இரவு நேரங்களில் இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் தங்களது கார் கண்ணாடிகளை முழுவதுமாக மூடிக்கொண்டு, நல்ல பிரகாசமான வெளிச்சம் கொண்ட ஒளி விளக்குகளை பொருத்திக்கொண்டு வாகனத்தை இயக்க வேண்டும். மேலும் வனப்பகுதியில் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்தி வெளியே நிற்க வேண்டாம் என கூறியுள்ளனர்.

    • வன உயிரியல் பூங்காவில் இருந்த 5 சிறுத்தைகளில் சிறுமியை கொன்ற சிறுத்தையை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது.
    • சிறுத்தையை பிடிக்க பல்வேறு இடங்களில் இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டன.

    திருப்பதி:

    திருப்பதி நடைபாதையில் கடந்த மாதம் தனது பெற்றோர்களுடன் நடந்து சென்ற லக்ஷிதா என்ற 6 வயது சிறுமியை சிறுத்தை கடித்துக்கொன்றது.

    சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க நடைபாதை அருகே பல்வேறு இடங்களில் இரும்பு கூண்டு வைக்கப்பட்டது. 2 வாரங்களில் அடுத்தடுத்து 5 சிறுத்தைகள் சிக்கியது.

    கூண்டில் சிக்கிய சிறுத்தைகள் வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்படுகின்றன.

    வன உயிரியல் பூங்காவில் இருந்த 5 சிறுத்தைகளில் சிறுமியை கொன்ற சிறுத்தையை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது.

    சோதனை முடிவில் 2 சிறுத்தைகள் சிறுமியை கொல்லவில்லை என தெரிய வந்தது.

    இதையடுத்து 2 சிறுத்தைகளை வன சரணாலயங்களில் விடப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திருப்பதி மலை பாதையில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிவதை வாகனங்களில் சென்ற பக்தர்கள் பார்த்தனர். இது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சிறுத்தையை பிடிக்க பல்வேறு இடங்களில் இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டன. இன்று அதிகாலை அலிபிரி நடைபாதையில் உள்ள லட்சுமி நரசிம்ம சாமி கோவில் அருகே சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கியது.

    கூண்டில் சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் பக்தர்கள் நடைபாதையில் பாதுகாப்பாக செல்ல தேவஸ்தான அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    கையில் கம்புகளுடன் கோவிந்தா கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் நடந்து சென்றனர். 

    • பசுவின் வாய் பகுதி முழுவதும் சிதைந்தது, கால்நடை மருத்துவர்கள் இதற்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.
    • சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தோட்டத்திற்கு செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள கண்ணு புளி மெட்டு மோட்டை நரி பொத்தை பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. அதில் அவர் தென்னை, மா போன்றவற்றை பயிர் செய்தும், மாடு வளர்த்து, பராமரித்தும் வருகிறார்.

    இந்நிலையில் நேற்று ரமேசிடம் வேலை பார்க்கும் மாரியம்மாள் என்ற பெண் ரமேசுக்கு சொந்தமான கர்ப்பமான பசுவை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் அவர் அதனை தோப்பிற்குள் விட்டுவிட்டு, தென்னங்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது திடீரென பசு அதிக சத்தத்துடன் கத்தியுள்ளது. இதனால் மாரியம்மாள் கூச்சலிட்டவாறு அப்பகுதியை நோக்கி ஓடிச்சென்று பார்த்துள்ளார்.

    அப்போது பசுவின் வாய் பகுதி முழுவதும் கடித்து குதறப்பட்ட நிலையில் ரத்தம் சொட்டியவாறு அந்த பசு நின்றுள்ளது. உடனடியாக கால்நடை மருத்துவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பசுவின் வாய் பகுதி முழுவதும் சிதைந்தது, கால்நடை மருத்துவர்கள் இதற்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து அப்பகுதியினர் கூறுகையில், இந்த பகுதியில் ஒரு சிறுத்தை நடமாடி வருகிறது. அதுதான் இந்த பசுவினை தாக்கி இருக்கும் என்றனர். சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தோட்டத்திற்கு செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    இந்நிலையில் செங்கோட்டை வனத்துறை சார்பில் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு கேமரா அமைத்து சிறுத்தை நடமாட்டம் உள்ள இடத்தில் கூண்டு வைக்க உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். 

    • வனத்துறையின் கடுமையான சட்டங்களால் மலைப்பாதைகளில் உடனடியாக இரும்பு வேலி அமைக்க முடியவில்லை.
    • பஸ், கார் போன்ற வாகனங்களில் அதிக பக்தர்கள் சென்று வருகின்றனர்.

    திருமலை:

    திருப்பதியில் இருந்து திருமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு ஆகிய 2 மலைப்பாதைகள் வழியாக தங்கள் குடும்பத்துடன் நடந்து சென்று ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.

    ஆனால் சமீப காலமாக, அலிபிரி பாதையில் சிறுவர்களை குறி வைத்து சிறுத்தைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    இதனால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த வாரம் நெல்லூரை சேர்ந்த லக்ஷிதா (6) என்ற சிறுமியை சிறுத்தை அடித்துக் கொன்றதால் பக்தர்களின் பீதி மேலும் அதிகரித்துள்ளது.

    வனத்துறையின் கடுமையான சட்டங்களால் மலைப்பாதைகளில் உடனடியாக இரும்பு வேலி அமைக்க முடியவில்லை. இதனால் தற்போதைக்கு நிலைமையை சமாளிக்க நடந்து செல்லும் பக்தர்களுக்கு தடிகளை தேவஸ்தானம் கொடுத்து வருகிறது.

    இதனை பலரும் விமர்சித்த போதிலும் இத்திட்டத்தை கைவிட மாட்டோம் என தேவஸ்தான அறங்காவலர் கருணாகர் ரெட்டி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

    கடந்த 50 நாட்களாக திருப்பதி வனப்பகுதிகளில் ஆங்காங்கே கூண்டுகள் அமைத்து இதுவரை 3 சிறுத்தைகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர். ஆனாலும் இன்னும் 20-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ளன. மேலும் கரடிகளும் யானைகளும் சுற்றித் திரிகின்றன.

    கைத்தடிகள் கொடுத்து அனுப்பினாலும், பக்தர்கள் பீதி காரணமாக அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதைகளில் தைரியமாக செல்ல முன்வரவில்லை. இதனால் இவ்விரு மலைப்பாதைகளிலும் நேற்று பக்தர்களின் வருகை கணிசமாக குறைந்து காணப்பட்டது.

    சாதாரணமாக நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை செல்லும் மலைப்பாதைகளில் தற்போது 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை மட்டுமே செல்கின்றனர். மாறாக, பஸ், கார் போன்ற வாகனங்களில் அதிக பக்தர்கள் சென்று வருகின்றனர்.

    • பக்தர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கப்படும்.
    • அலிபிரி வழியாக மலையேறும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது.

    திருமலை:

    திருப்பதி மலைப்பாதையில் பெற்றோருடன் சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை கொன்றது. இதையடுத்து ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கியது.

    ஆனால் சில மணி நேரத்தில் மீண்டும் வேறு ஒரு சிறுத்தை அதே இடத்திற்கு வந்தது. இந்நிலையில் திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் துறை கட்டிடம் எதிரே வனப்பகுதியில் இருந்து திடீரென ஒரு சிறுத்தை வந்தது.

    இதனை கண்டு அங்கிருந்த மாணவ, மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது மாணவர்கள் சிலர் சிறுத்தையை மறைந்திருந்த புகைப்படமும் எடுத்துள்ளனர்.

    மேலும் போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்த போலீசார், வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசு வெடித்து சிறுத்தையை விரட்டியடித்தனர்.

    தொடர்ந்து சிறுத்தை வராமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பதி மலைப்பாதையில் கடந்த 3 நாட்களாக சுற்றிவந்த சிறுத்தை, தற்போது கீழே இறங்கி மலையடிவாரத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்திற்குள் வந்ததால் பொதுமக்கள், பக்தர்கள் பீதியில் உள்ளனர்.

    பக்தர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கப்படும்.

    நடைபாதையில் இரவு நேரங்களில் அதிக அளவில் வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி அலிபிரி வழியாக மலையேறும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது.

    தேவஸ்தான பாதுகாவலர்கள் பக்தர்களுக்கு கைத்தடிகளை வழங்கினர். இந்த கைத்தடிகள் ஏழுமலையான் கோவில் அருகே மீண்டும் சேகரிக்கப்படுகிறது.

    • அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் மாஞ்சோலை வனப்பகுதியில் நாலுமுக்கு எஸ்டேட் உள்ளது.
    • ஜெஸ்சியை சிறுத்தை தாக்கியதில் அவருக்கு லேசான சிராய்ப்பு ஏற்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் மாஞ்சோலை வனப்பகுதியில் நாலுமுக்கு எஸ்டேட் உள்ளது. இங்கு தினந்தோறும் காலையில் தேயிலை பறிப்பதற்காக ஏராளமான தொழிலாளர்கள் பணிக்கு செல்வது வழக்கம்.

    அதன்படி இன்று காலை நாலுமுக்கு தேயிலை தோட்டத்திற்கு ஜெஸ்சி (வயது 55) என்ற பெண் வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார். அப்போது தோட்டத்திற்குள் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று திடீரென அவர் மீது பாய்ந்தது.

    இதனால் ஜெஸ்சி அலறி ஓடினார். அப்போது அவரை சிறுத்தை தாக்கியதில் அவருக்கு லேசான சிராய்ப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு மாஞ்சோலையில் உள்ள எஸ்டேட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • தேயிலை தோட்ட மறைவில் இருந்த சிறுத்தை ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் பன்னீர்செல்வம் மீது பாய்ந்து அவரை தாக்கியது
    • சிறுத்தை அங்கிருந்து ஓடி அருகே இருந்த புதருக்குள் மறைந்து விட்டது.

    கோத்தகிரி:

    கோத்தகிரியை அடுத்த சோலூர்மட்டம் பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள் பெருமளவில் காணப்படுகின்றன.

    இந்த வனப்பகுதிகளில் சிறுத்தை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் அதிகமாக காணப்படுகிறது. வன விலங்குகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருவது வாடிக்கையாகி விட்டது.

    சோலூர்மட்டம் பகுதிக்கு உட்பட்ட பரவக்காடு பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். கூலித்தொழிலாளி.

    இவர் இன்று காலை தனது வீட்டில் இருந்து, பணிக்கு செல்வதற்காக பரவக்காடு பகுதியில் உள்ள தேயிலை தோட்டம் வழியாக நடந்து வந்தார்.

    அப்போது அங்கு தேயிலை தோட்ட மறைவில் இருந்த சிறுத்தை ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் பன்னீர்செல்வம் மீது பாய்ந்து அவரை தாக்கியது.

    இதில் பயத்தில் பன்னீர்செல்வம் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதையடுத்து சிறுத்தை அங்கிருந்து ஓடி அருகே இருந்த புதருக்குள் மறைந்து விட்டது.

    இதில் அவரது கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    குடியிருப்பு பகுதியில் உலாவரும் இந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×