search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்புரெயில்"

    • வடமாநில தொழிலாளர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் எர்ணாகுளத்தில் இருந்து ஜார்க்கண்ட் வழியாக தன்பாத் வரை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • ரெயிலில் பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 22 மற்றும் சரக்கு பெட்டிகள் 2 எண்ணிக்கையில் இணைக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகையையொட்டி வடமாநில தொழிலாளர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் எர்ணாகுளத்தில் இருந்து ஜார்க்கண்ட் வழியாக தன்பாத் வரை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. முன்பதிவு வசதியில்லாத இந்த ரெயில் வருகிற 10-ந் தேதி எர்ணாகுளத்தில் இருந்து நள்ளிரவு 11.55 மணிக்கு புறப்பட்டு 12-ந்தேதி இரவு 11 மணிக்கு தன்பாத் சென்றடையும். இந்த ரெயிலில் பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 22 மற்றும் சரக்கு பெட்டிகள் 2 எண்ணிக்கையில் இணைக்கப்படுகிறது.

    கோவைக்கு 11-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கும், திருப்பூருக்கு 5.28 மணிக்கும், ஈரோட்டுக்கு 6.25 மணிக்கும், சேலத்துக்கு 7.22 மணிக்கும் வந்து செல்லும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • செகந்திராபாத் - கொல்லம் சிறப்பு ெரயில் (எண்: 07119) இயக்கப்படுகிறது.
    • தாம்பரம் - மங்களூரு ரெயில் (எண்: 06049) 2-ந் தேதி இயக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    வருகிற 29ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி செகந்திராபாத் - கொல்லம் சிறப்பு ெரயில் (எண்: 07119) இயக்கப்படுகிறது.

    இன்று 27ந்தேதி கொல்லத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ெரயில் (எண்: 07120) மறுநாள் இரவு 11:50 மணிக்கு செகந்திரபாத் சென்றடையும். திருப்பூருக்கு அதிகாலை 3:15 மணிக்கு வரும்.

    தாம்பரம் - மங்களூரு ெரயில் (எண்: 06049) 2-ந் தேதி இயக்கப்படுகிறது. மதியம் 3:30 மணிக்கு புறப்படும் ெரயில் மறுநாள் காலை 9:30 மணிக்கு மங்களூரு சென்று சேரும். திருப்பூரை இரவு 11:28 மணிக்கு கடந்து செல்லும்.மறுமார்க்கமாக மங்களூரு - தாம்பரம் ெரயில் (எண்: 06050) 3-ந் தேதி இயங்கும்.இரவு 11 மணிக்கு புறப்படும் ெரயில் மறுநாள் மதியம் 3:15 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

    திருப்பூரில் இந்த ெரயில் காலை 7:13 மணிக்கு நின்று செல்லும் என அறிவிக்கபட்டுள்ளது. 

    • வருகிற ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி முதல் வருகிற 30-9-2023 வரை உள்ள சனிக்கிழமை தோறும் இயக்கப்படும்
    • அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு அன்று மாலை 4.45 மணிக்கு நாகர்கோவில் செல்கிறது

     தஞ்சாவூர்:

    ரெயில்வே துறை சார்பில் பண்டிகை மற்றும் திருவிழாக்களையொட்டி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவையொட்டி பொதுமக்களின் நலன் கருதி நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் (எண்-06037) இயக்கப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    இந்த ரெயில் வருகிற ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி முதல் வருகிற 30-9-2023 வரை உள்ள சனிக்கிழமை தோறும் இயக்கப்படும்.

    நாகர்கோவிலில் இருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    மறு மார்க்கத்தில் இந்த ரெயில் (எண்-06038) ஆகஸ்ட் மாதம் 6-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 1-ந் தேதி வரை உள்ள ஞாயிற்றுக்கிழமை தோறும் அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு அன்று மாலை 4.45 மணிக்கு நாகர்கோவில் செல்கிறது.

    இந்த ரெயில்கள் இருமார்க்கத்திலும் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் ஏசி, படுக்கை வசதிகள் உள்பட 20 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

    • மானாமதுரையில் சிறப்பு ரெயில் நின்று செல்லும் என்ற அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • தமிழரசி எம்.எல்.ஏ. தென்னக ரெயில்வேக்கு நன்றி தெரிவித்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கடந்த 4-ந்தேதி முதல் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து மானாமதுரை ஜங்ஷன் வழியாக வேளாங்கண்ணி வரை புதிதாக எக்ஸ்பிரஸ் ரெயில் விடப்பட்டது.

    இதில் மானாமதுரை நிறுத்தம் இல்லாமல் இருந்தது. இதனால் மானாமதுரை மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி தென்னகரெயில்வே மேலாளர், மத்திய ரெயில்வே அமைச்சகம், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பினார். அதில், எர்ணாகுளம்- வேளாங்கன்னி சிறப்பு ரெயில் மானாமதுரையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    இதை அடுத்து இந்த வாரம் முதல் புதிய வாரந்திரரெயில் மானா மதுரை ஜங்சனில் நின்று செல்லும் என அறிவிப்பு வெளியானது.

    எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம் ,புனலூர்,செங்கோட்டை, விருதுநகர், காரைக்குடி, திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் செல்லும் இந்த சிறப்பு ெரயிலுக்கு மானாமதுரை ரெயில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மிக முக்கிய சந்திப்பு ரெயில் நிலையமான மானாமதுரை ரெயில் நிலையத்தில் எர்ணாகுளம்- வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் நிற்காமல் சென்றது.

    தற்போது கடந்த 4-ந் தேதி முதல் ஆகஸ்ட் 6-ந் தேதி வரை, 10 சேவைகள் இயங்கும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ரெயில் கொல்லம் ,புனலூர், செங்கோட்டை ,கடையநல்லூர், சங்கரன்கோவில், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக செல்லும்.

    இந்த ெரயிலுக்கு மானாமதுரையில் ரெயில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழரசி எம்.எல்.ஏ. தென்னக ரெயில்வேக்கு நன்றி தெரிவித்தார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மானாமதுரை ரெயில் நிலையத்திற்கு ரெயில் நிறுத்தம் வழங்க வேண்டுமென்று தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

    எனது கோரிக்கையை ஏற்று மானாமதுரையில் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மானாமதுரை சட்ட மன்ற தொகுதி மக்கள் சார்பில் ரெயில்வே அதிகாரிகளுக்கு நன்றி யையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    ×