search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு காட்சி"

    • அரசு அனுமதி இல்லாமல் சிறப்பு காட்சிகள் வெளியிடுவதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது.
    • விசாரணை நடத்த திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரனுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

    திருப்பூர் யூனியன் மில் மெயின் ரோட்டில் பிரபல தியேட்டர் ஒன்று உள்ளது. இங்கு தீபாவளி அன்று அனுமதி இல்லாமல் சிறப்பு காட்சிகள் வெளியிடுவதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரனுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.


    தாசில்தார் மகேஸ்வரன் தலைமையிலான அதிகாரிகள் தியேட்டரில் ஆய்வு செய்த காட்சி

    அந்த உத்தரவின் அடிப்படையில் வடக்கு தாசில்தார் மகேஸ்வரன், வருவாய் அதிகாரி தேவி, கிராம நிர்வாக அதிகாரி விஜயராஜ் ஆகியோர் தியேட்டரில் அதிரடியாக ஆய்வு நடத்தினர். அப்போது அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக காலை 7.10, 7.25, 8.10, 8.25 என 6 காட்சிகள் வெளியிட்டு இருப்பது தெரியவந்தது.

    விசாரணைக்கு பின் இது தொடர்பான அறிக்கையை திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு தாசில்தார் அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு அனுமதித்த நேரத்துக்கு முன்பாக திரையிடப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டு தியேட்டர் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது .அந்த விளக்கத்தின் அடிப்படையில் தியேட்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

    • வாரிசு, துணிவு திரைப்பட சிறப்பு காட்சிக்கு முன்அனுமதி பெற வேண்டும் என்று தியேட்டர் நிர்வாகத்துக்கு, காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
    • மாவட்டம் முழுவதும் 11 தியேட்டர்களில் சிறப்பு காட்சிக்கு அனுமதி பெறாமல் திரையிட்டப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

    வேலூர்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகிய திரைப்படங்கள் நேற்று முன்தினம் தியேட்டர்களில் வெளியானது.

    தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் விஜய், அஜித் ரசிகர்களுக்காக அதிகாலை 1 மற்றும் 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. மார்கழி மாத கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ரசிகர்கள் மேள, தாளத்துடன் படங்களை வரவேற்று கண்டு ரசித்தனர். வேலூர் மாவட்டத்தில் வாரிசு, துணிவு திரைப்படங்கள் 10-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகின.

    பல தியேட்டர்களில் தலா 3 சிறப்பு காட்சிகள் வாரிசுக்கும், துணிவுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன. ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் தியேட்டருக்கு சென்று தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்களை பார்த்தனர்.

    வாரிசு, துணிவு திரைப்பட சிறப்பு காட்சிக்கு முன்அனுமதி பெற வேண்டும் என்று தியேட்டர் நிர்வாகத்துக்கு, காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் மாவட்டம் முழுவதும் 11 தியேட்டர்களில் சிறப்பு காட்சிக்கு அனுமதி பெறாமல் திரையிட்டப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

    இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர்கள், மேலாளர் மீது அந்தந்த எல்லைக்கு உட்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×