search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து - இந்தியா 2018 -2019"

    இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து கிரிக்கெட் வாரியத்துக்கு ரவிசாஸ்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார். #RaviShastri #indvseng

    புதுடெல்லி:

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது. இதனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மீதும் கேள்வி கணைகள் பாய்ந்து வருகின்றன. அவர் பதவி விலக வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    இதனால் ரவிசாஸ்திரி பதில் அளிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

    இந்த நிலையில் ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    டெஸ்ட் தொடருக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்களில் விளையாட நாங்கள் தயங்க வில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு முன்னேற்றம் அடைந்து உள்ளோம். ஆனால் அதுபோன்ற ஆட்டம் முதல் டெஸ்டில் ஏன் இருக்கவில்லை என்பதை நினைக்க வேண்டும்.

    பலம் குறைந்த அணிகளுக்கு எதிராக இரண்டு அல்லது மூன்று பயிற்சி ஆட்டங்கள் இருந்தாலும் அது பற்றி கவலை இல்லை. ஏனென்றால் அதுவும் போட்டிதான். ஆனால் போட்டி அட்டவணை கடினமான சூழ்நிலையில் இருக்கும் போது நாம் புரிந்து கொள்ளதான் வேண்டும். ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின் போது டெஸ்ட் தொடருக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அதற்கு நேரம் இருக்கிறதா என்பது தான் கேள்வி.

    டெஸ்ட் போட்டிக்கு முன்பு இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட விரும்புகிறோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடர் முடித்த பிறகு டெஸ்ட் போட்டிக்கு 10 நாட்கள் இடைவெளி இருக்கிறது. ஆனால் பயிற்சி ஆட்டங்கள் அட்டவணையில் இடம் பெறுவது எங்கள் கையில் இல்லை.

    அணி நிர்வாகம் சார்பில் கிரிக்கெட் வாரியத்திடம் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்கள் வைக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது என்றார். இந்திய அணி வருகிற நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட், 3 ஓரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. #RaviShastri #indvseng 

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் குல்தீப் யாதவுக்கு பதிலாக அஸ்வினை பயன்படுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி தெரிவித்துள்ளார். #ENGvIND #Ashwin #MikeHussey
    சென்னை:

    இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இங்கிலாந்துக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய குல்திப் யாதவுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாகவே இங்கிலாந்து ஆடுகளங்கள் இருக்கும். இதனால் ஆடும் லெவனில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே இடம் பெறுவார் என்று தெரிகிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அஸ்வினை பயன்படுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி தெரிவித்துள்ளார்.


    அணியில் தனது இடத்தை தக்க வைக்க அஸ்வினுக்கு தகுதி இருக்கிறது. அவர் புத்திசாலித்தனமாக டெஸ்ட் பவுலர்.

    ஆஸ்திரேலிய ஆப்-ஸ்பின்னர் நாதன் லயன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடது கை பேட்ஸ்மேனும் சிறப்பாக பந்து வீசினர். இதனால் அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக முக்கிய பங்கு வகிப்பார். அவரை பயன்படுத்த வேண்டும்.

    குல்தீப் யாதவ் இளம் வீரர் அவரது வழியில் அவரை கற்றுக்கொள்ள விட வேண்டும். அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் தனது பணியை சிறப்பாக செய்வார் என்று உறுதியாக கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #ENGvIND #Ashwin #MikeHussey
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. #ENGvIND
    லண்டன் :

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் இடம்பிடித்துள்ளார். அதேபோல் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு சர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். சித்தார்த் கவுல் நீக்கப்பட்டு புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டார். 

    இந்திய அணியின் ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா - தவான் ஜோடி ரன்கள் குவிக்க திணறியது. இதனால், முதல் ஐந்து ஓவர் முடிவில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தது. 18 பந்தில் 2 ரன்கள் மட்டுமே அடித்திருந்த நிலையில் வில்லே பந்துவீச்சில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் இருவரும் நிதானமாக விளையாடி சீரான வேகத்தில் ரன்களை குவித்தனர். 

    17.4 வது ஓவரில் இந்தியா இரண்டாவது விக்கெட்டை இழந்தது. ஷிகர் தவான் 44 ரன்களில் அவுட் ஆனார். இதன்பின்னர் விராட் கோலியுடன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். தினேஷ் கார்த்திக் 21 ரன்களில் அவுட் ஆனார். டோனியுடன் விளையாடிய விராட் கோலி 71 ரன்களில் அவுட் ஆனார். 

    அடுத்து வந்த ரெய்னா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க ஹர்திக் பாண்டியா 21 ரன்களும், டோனி 66 பந்தில் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். புவனேஸ்வர் குமார் (21), சர்துல் தாகூர் (13 பந்தில் 22 ரன்கள்) ஓரளவிற்கு விளையாட இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது. இதனால், இங்கிலாந்து அணிக்கு 257 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து அணி சார்பில் ரஷித் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். 


    அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வின்ஸ் மற்றும் பெய்ர்ஸ்டோ இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 4.4 ஓவரின் 43 ரன்கள் அடித்திருந்த நிலையில் தாக்கூர் பந்துசீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து பெய்ர்ஸ்டோ ஆட்டமிழ்ந்தார். அவர் 13 பந்துகளில் 7 பவுண்டரிகள் உள்பட 30 ரன்கள் விளாசினார். மற்றொறு தொடக்க ஆட்டக்காரரான வின்ஸ் 27 ரன்களில் ரன் அவுட் ஆன நிலையில் ஜோ ரூட் மற்றும் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஜோடி சேர்ந்தனர். 

    இந்திய பந்துவீச்சை சிதரடித்த இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் தினறினர். ரூட் 60 பந்துகளிலும், மோர்கன் 58 பந்துகளிலும் அரைசதம் அடித்து இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தினர். 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் இருவரும் இணைந்து 186 ரன்களை சேர்த்து அசத்தினர்.

    இறுதியில், பாண்டியா வீசிய 44வது ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஜோ ரூட், 120 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்து ஒருநாள் போட்டிகளில் தனது 13-வது சதத்தை பதிவுசெய்தார். மோர்கன் 108 பந்துகளில் 88 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.



    இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்குர் மட்டுமே 10 ஓவருக்கு 55 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்திருந்தார். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட புவனேஷ்குமார், சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் விக்கெட் ஏதும் கைப்பற்றாமல் ஏமாற்றமளித்தனர். 

    அடுத்த வருடம் இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்த தொடருடன் அந்த அணி தொடர்ச்சியாக 8 தொடர்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.  #ENGvIND
    இங்கிலாந்துக்கு எதிரான லண்டனில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #ENGvIND #ViratKohli
    லண்டன் :

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லாட்சில் இன்று நடக்கிறது. முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி கண்டு தொடரை கைப்பற்றிவிடும் உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் களம் காண்கிறது.

    இந்நிலையில், இன்றைய போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இரண்டு அணிகளின் தரப்பிலும் கடந்த போட்டியில் விளையாடியவர்களே இந்த போட்டியிலும் விளையாட உள்ளனர்.

    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. விராட் கோலி, 2. ரோகித் சர்மா, 3. தவான், 4. சுரேஷ் ரெய்னா, 5. கேஎல் ராகுல், 6. டோனி, 7. ஹர்திக் பாண்டியா, 8. சித்தார்த் கவுல், 9. உமேஷ் யாதவ், 10. சாஹல், 11. குல்தீப் யாதவ். #ENGvIND #ViratKohli
    முதல் டி20 போட்டியின்போது குல்தீப் யாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் செய்த காரியங்கள் கிரிக்கெட்டிற்கு அழகல்ல என டேவிட் வில்லே தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 3-ந்தேதி மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. லோகேஷ் ராகுல் அதிரடி சதத்தால் இந்தியா 18.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின்போது இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளர்களான புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் பந்து வீசும் கடைசி நேரத்தில், பந்து வீசாமல் திரும்பிச் சென்று மீண்டும் பந்து வீசும் யுக்தியை கடைபிடித்தனர். இது கிரிக்கெட்டிற்கு அழகல்ல என்று இங்கிலாந்து பந்து வீச்சு ஆல்ரவுண்டரான டேவிட் வில்லே தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து டேவிட் வில்லே கூறுகையில் ‘‘நான் பேட்டிங் செய்யும்போது அவரது பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள இருக்கிறேன் என்று புவனேஸ்வர் தெரிந்து கொண்டார். இதனால் அவர் பந்து வீச்சை நிறுத்திக் கொண்டார். இப்படி சிலமுறை நடைபெற்றது. ஸ்பின்னர்களும் இந்த யுக்தியை கையாண்டனர். அதற்கான விதிகள் உள்ளனவா? என்பது குறித்து எனக்கு உறுதியாக தெரியவில்லை. நான் தனிப்பட்ட முறையில் அதை விரும்பவிலலை. கிரிக்கெட்டின் உத்வேகத்திற்கு இது தேவையானது என்று நான் நினைக்கவில்லை.

    அவர்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பது குறித்து கருத்து சொல்லும் வேலை என்னுடையதல்ல. தனிப்பட்ட முறையில் இப்படி செய்ய நான் நினைக்கமாட்டேன். இது சிறந்த வழி என்று நினைக்கமாட்டேன்’’ என்றார்.
    இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் இந்தியா தொடருக்கு தயாராகி விடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். #ENGvIND
    இந்தியா - இங்கிலாந்து இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்பின் வருகிற 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நடைபெறுகிறது.

    பின்னர் முக்கியத்தும் வாய்ந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் இந்த பேட்ஸ்மேனுக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த வாரம் கவுன்ட்டி போட்டியில் விளையாடும்போது பிராட்டிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன் தயாராகி விடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து பிராட் கூறுகையில் ‘‘தலைசிறந்த ஸ்பெஷலிஸ்ட் மற்றும் பல்வேறு ஸ்கேன் பரிசோதனைகளுக்குப் பிறகு முழங்காலில் ஏற்பட்டுள்ள தசைநார் பிரச்சினைக்கு சில ஊசிகள் போட்டுள்ளேன். எனக்கு ஐந்து நாட்கள் ஓய்வு தேவை. அதன்பிறகு ஓட திட்டமிட்டுள்ளேன். 22-வந்தேதி நடைபெறும் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளேன்’’ என்றார்.

    ஒருவேளை கவுன்ட்டி போட்டியில் மீண்டும் காயம் ஏற்பட்டால் இந்திய தொடரில் பிராட் விளையாடுவது சிக்கலை ஏற்படுத்தும்.
    டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற பெருமையை தவான் - ரோகித் சர்மா படைத்துள்ளனர். #ENGvIND
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் நீண்ட காலமாக தொடக்க ஜோடியாக களம் இறங்கி அசத்தி வருகிறார்கள். இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கி ஏராளமான சாதனைகள் படைத்துள்ளனர்.

    நேற்று இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டி20 போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து 159 ரன்கள் சேர்த்தது. பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கிறது. தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க ஜோடியாக களம் இறங்கினார்கள். இந்த ஜோடி 7 ரன்கள் எடுத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது.



    இந்த 7 ரன்கள் மூலம் இருவரும் இணைந்து முதல் ஜோடிக்கு 1110 ரன்கள் குவித்துள்ளனர். இதன்மூலம் முதல் ஜோடிக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையைப் படைத்துள்ளது.

    இதற்கு முன் வார்னர் - வாட்சன் ஜோடி 1108 ரன்கள் சேர்த்திருந்தது. இதை தற்போது தவான் - ரோகித் சர்மா ஜோடி முறியடித்துள்ளது. கப்தில் - வில்லியம்சன் ஜோடி 870 ரன்கள் குவித்து 3-வது இடத்தையும், அயர்லாந்தின் போர்ட்டர்பீல்டு - ஸ்டிர்லிங் ஜோடி 763 ரன்கள் குவித்து 4-வது இடத்தையும் பிடித்துள்ளது.
    ×