search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கையாடல்"

    • விருதுநகரில் செல்போன் விற்பனை கடையில் ரூ.6½ லட்சம் கையாடல் நடந்துள்ளது.
    • இந்த புகாரின் அடிப்படையில் பெண் ஊழியரிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அல்லம்பட்டியில் உள்ள மாத்திநாயக்கன்பட்டி ரோட்டை சேர்ந்தவர் கணேசன்(43). இவர் மதுரை ரோட்டில் செல்போன் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை கடை வைத்துள்ளார். இவரது கடையில் பாண்டியன்நகரை சேர்ந்த ஆர்த்திலட்சுமி(22) என்பவர் கடந்த சில ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று கடையில் இருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கணேசன் ஆய்வு செய்தார். அப்போது ஆர்த்தி லட்சுமி கடையில் இருந்து பணம் எடுத்த காட்சிகள் பதிவாகியிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணேசன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடையின் வரவு-செலவு கணக்கை சரிபார்த்தார். விற்பனை பணம் ரூ.6 லட்சத்து 43 ஆயிரம் கையாடல் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து கணேசன் விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார். அதில் கடை பெண் ஊழியர் ஆர்த்திலட்சுமி பணத்தை கையாடல் செய்ததோடு ஒரு பவுன் தங்க மோதிரத்தை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஆர்த்திலட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ராமகிருஷ்ணா நகரில் நிதிநிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது இதில் பணிபுரிந்த 3 பேரும் சேர்ந்து 17 லட்சம் 98 ஆயிரத்து 964 ரூபாயை கடந்த 2022 -ம் ஆண்டு கையாடல் செய்தனர் என கிளை மேலாளர் அய்யனார்(33) சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். .
    • இந்தநிலையில், கையாடல் தொகை ரூ. 10 லட்சத்திற்கு மேல் உள்ளதால் வழக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ராமகிருஷ்ணா நகரில் நிதிநிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தை சேர்ந்த அழகுவேல் மகன் தினேஷ், மூக்கனூர் கிராமம் ஏழுமலை மகன் அய்யப்பன் ஆகியோர் மக்கள் தொடர்பு பணியாளர்களாகவும், மரூர் கிராமத்தை சேர்ந்த கண்ணுசாமி மகன் அய்யப்பன் உதவி மேலாளராகவும் பணிபுரிந்தனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து 17 லட்சம் 98 ஆயிரத்து 964 ரூபாயை கடந்த 2022 -ம் ஆண்டு கையாடல் செய்துவிட்டதாக கூறி, கிளை மேலாளர் அய்யனார்(33) சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதில் நிறுவனத்தின் தணிக்கை குழுவினர் தணிக்கை செய்த போது மேற்கூறிய 3 பேரும் உறுப்பினர்களிடம் இருந்து தனிதனியாக பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. மொத்தம் 67 உறுப்பினரிடமிருந்து 17 லட்சத்து 98 ஆயிரத்து 964 கையாடல் செய்துள்ளனர்.

    பணத்தை திரும்பி கேட்டும் அவர்கள் தரவில்லை என்று தொிவித்து இருந்தார். இது குறித்து சப்-இன்ஸ்நபெக்டர் நரசிம்ம ஜோதி வழக்கு பதிவு செய்தார். இந்தநிலையில், கையாடல் தொகை ரூ. 10 லட்சத்திற்கு மேல் உள்ளதால் வழக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்சபெக்டர் சண்முகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டி யன், செண்பகவல்லி, காவலர் உதயகுமார், வெங்கடேசன் குழுவினர் விசாரணை மேற்கொண்டு 3 பேரையும் தேடிவந்தனர். இதில், அய்யப்பனை சங்காரபுரம் தாலுகா அலுவலகம் எதிரே வைத்தும், தினேஷை சங்கராபுரம் நி பஸ் நிலையம் அருகில் வைத்தும் போலீசார் கைது செய்தனர். மேலும் மூக்கனூரை சேர்ந்த அய்யப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பணத்தில் ரூ.30 லட்சம் அலுவலர்கள் கையாடல் செய்தது தெரிந்தது.
    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.30 லட்சம் கையாடல் செய்யப்பட்ட வழக்கில், நிர்வாக குழு உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த மலையாண்டஹள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு, வங்கி பணத்தில் ரூ.30 லட்சம் அலுவலர்கள் கையாடல் செய்தது தெரிந்தது.

    இது குறித்து அப்போதைய கூட்டுறவுத்துறை சரக துணை பதிவாளர் ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் படி மலையாண்டஹள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார்.

    மேலும் இவ்வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிர்வாக குழு உறுப்பினரான கால்வேஹள்ளி கிராமத்தை சேர்ந்த இந்திராணி (45) என்பவரை கைது செய்தனர்.

    • இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக உரம் விற்பனை செய்த ரூ 21.9 லட்சம் தொகையை கம்பெனிக்கு செலுத்தாமல் கிடங்கில் கொள்ளவிற்கு மேல் இருப்பு உள்ளதாக கணக்கு காட்டி உள்ளார் .
    • ஆய்வாளர் தெய்வசிகாமணிஆகியோர் விசாரணை செய்து ரூ 21,91,711 கையாடல் செய்ததாக சீனிவாசுவை கைதுசெய்து திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர்.

    நாமக்கல்:

    மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனம் மூலம் கிராமபுறங்களில் விவசாயிகளுக்கு தேவையான முக்கிய இடுபொருட்களான உரம், பூச்சிமருந்து, களைக்கொல்லி மற்றும் உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

    இவற்றை இப்கோ இ-பசார் என்னும் துணை நிறுவனம் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் ஒரு மையத்தை நிறுவி விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டையில் செயல்பட்டு வரும் இ பசாரில் நாமக்கல் லைன் தெருவைச்சேர்ந்த முதுநிலை வேளாண் பட்டதாரி சீனிவாசு(வயது 30) என்பவர் விற்பனை யாளராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக உரம் விற்பனை செய்த ரூ 21.9 லட்சம் தொகையை கம்பெனிக்கு செலுத்தாமல் கிடங்கில் கொள்ளவிற்கு மேல் இருப்பு உள்ளதாக கணக்கு காட்டி உள்ளார் . இதனால் சந்தேகம் அடைந்த இ பசார் மாநில அலுவலர் ஹைதராபாத்தை சேர்ந்த புன்னம்ராஜு கொகக்கரராயப்பேட்டை கிளை அலுவலகத்தில் தணிக்கை செய்தார்.

    அப்போது உரவிற்பனை செய்து நிறுவனத்திடம் பணம் கட்டாமல் சீனிவாசன் தனது இந்தியன் வங்கி கணக்கில் செலுத்தியது தணிக்கையில் தெரிய வந்தது. இதனையடுத்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புன்னம்ராஜ் புகார் அளித்தார்.

    இது குறித்து மாவட்ட குற்றப்பபிரிவு துணை கண்காணிப்பாளர் லட்சுமணன், ஆய்வாளர் தெய்வசிகாமணிஆகியோர் விசாரணை செய்து ரூ 21,91,711 கையாடல் செய்ததாக சீனிவாசுவை கைதுசெய்து திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர். பருவ மழை காலத்தில் உரம் கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் உர மோசடியால் கொக்கராயன் பேட்டையில் இப்கோ இ பசார் கடை மூடப்பட்டதால் விவசாயிகள் கடையை திறக்க கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • பணம் கையாடல்; அஞ்சலக அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டார்.
    • ரூ. 23 ஆயிரத்தை சுந்தரமூர்த்தி கையாடல் செய்ததாக தெரிகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (39). இவர் இனாம் ரெட்டியப்பட்டி அஞ்சல் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். பணியில் இருந்த போது வாடிக்கையாளரின் ரூ. 23 ஆயிரத்தை சுந்தரமூர்த்தி கையாடல் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்திய பின் சுந்தரமூர்த்தியை உயரதிகாரிகள் பணி நீக்கம் செய்தனர்.

    இந்த நிலையில் விருதுநகர் அஞ்சல் துறை உப கோட்ட ஆய்வாளர் ராமசாமி கையாடல் செய்து தொடர்பாக சுந்தரமூர்த்தி மீது போலீசில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×