search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடித்த"

    • சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி குடிசைமாற்று வாரியம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். சலவை தொழிலாளி. இவரது மனைவி அலமேலு மங்கை பிரியா இவர் தனது மகளுடன் இன்று காலையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாமில் மனு கொடுப்பதற்காக வந்தார்.
    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து திடீரென அலமேலு மங்கை மறைத்து கொண்டு வந்த சாணிபவுடரை குடித்து விட்டார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி குடிசைமாற்று வாரியம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். சலவை தொழிலாளி. இவரது மனைவி அலமேலு மங்கை பிரியா (வயது 36). இவர் தனது மகளுடன் இன்று காலையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாமில் மனு கொடுப்பதற்காக வந்தார்.

    அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து திடீரென அலமேலு மங்கை மறைத்து கொண்டு வந்த சாணிபவுடரை குடித்து விட்டார். இதை பார்த்த போலீசார், உடனடியாக ஓடி வந்து, அவரை மீட்டு விசாரித்தனர். அப்போது தான், கந்தம்பட்டியை சேர்ந்த ஒருவரிடம் தனது வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து கந்துவட்டிக்கு ரூ.3 லட்சம் கடன் வாங்கினேன். 20 மாத தவணையில் கட்டுவதாக வாங்கியிருந்தேன்.

    இதையடுத்து 10-வது தவணையில் முழு பணத்தையும் அவரிடம் கொடுத்தபோது பணத்தை வாங்க மறுத்து 20 தவணையும் முடிந்த பிறகு தான் வீட்டின் பத்திரத்தை தருவேன் என கூறினார். பணத்தை வாங்கி கொண்டு பத்திரத்தை கொடுங்கள் என கேட்டபிறகும் அவர் தர மறுத்து தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி சாணி பவுடரை குடித்து விட்டேன். பத்திரத்தை தர மறுக்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் ெதரிவித்தார்.

    இதையடுத்து போலீசார், அலமேலு மங்கையை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அவசர வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அருகே குடும்பத் தகராறில் விளையாட்டாக விஷம் குடித்த பெண் பாலியானார்.
    • பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அருகே உள்ள கொளக்காட்டுப்புதூரைச் சேர்ந்தவர் பிரனேஷ் (வயது 28) கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜோதி(25). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. 3 மற்றும் 5 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.

    பள்ளிக்கு செல்லும் தங்களது மகன்களுக்கு பள்ளி கட்டணம் செலுத்துவதற்கு ஜோதி தனது கணவர் பிரனேஷிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது கணவன்- மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.‌

    இந்த நிலையில் ஜோதி விளையாட்டாக கடந்த 15-ம் தேதி விஷம் குடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் திடீரென மயக்கமடைந்த அவரை கணவர் பிரனேஷ் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜோதி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதிக்கு திருமணமாகி 6 வருடங்களே ஆனதால் திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி விசாரணை நடத்தி வருகிறார்.

    விளையாட்டாக விஷம் குடித்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×