search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீதாஜீவன் எம்எல்ஏ"

    விளாத்திகுளம் இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற உழைக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. பேசினார்.
    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குசாலை, எப்போதும்வென்றான் மற்றும் பசுவந்தனை ஆகிய இடங்களில் ஒட்டப்பிடாரம் கிழக்கு தி.மு.க ஒன்றியம் சார்பில் தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ தலைமை தாங் கினார்.

    இதில் விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய ஊராட்சி கழக செயலாளர் கள், நிர்வாகிகள் ஒருங் கிணைந்து செயல்பட வேண் டும். இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வர இருப்பதால் அதற்கான ஆயத்த பணிகளை இப் போதே  செயல்படுத்த வேண் டும்.
     இவ்வாறு எம்.எல்.ஏ பேசினார். 

    தொடர்ந்து தலைமை கழக பூத் கமிட்டி ஆய்வாளர் பூத் கமிட்டிகளை ஆய்வு செய் தனர். அப்போது தலைமை கழக பூத் கமிட்டி ஆய்வாளர் பல்லாவரம் எம்.எல்.ஏ கிரி, ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமூவேல், ஒன்றிய அவைத் தலைவர் முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் சத்தியராஜ், ரவி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடியில் உப்பு இலாகாவுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கவேண்டும் என்று கலெக்டரிடம் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கீதாஜீவன் எம்.எல்.ஏ ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாநகரத்தில் மத்திய அரசின் உப்பு இலாகாவிற்கு உட்பட்ட ஊரணி ஒத்த வீடு, மினி சகாயபுரம் ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் குடியிருந்து வருகிறார்கள். அந்தப் பகுதியில் மாநகராட்சி மூலம் குடிநீர் வசதியோ, தெருவிளக்கோ, சாலை வசதியோ கழிப்பிட வசதியோ செய்ய முடியாத நிலையில் அந்த ஏழை-எளிய மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    இதுபற்றி மத்திய உப்பு இலாகா அதிகாரியை நேரில் சந்தித்து மக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை வைத்த போது, மாநில அரசுக்கு இடத்தை விலைக்கு வழங்க முடியும் என்பதை கூறினார். ஆகவே கலெக்டர் சிறப்புக் கவனம் செலுத்தி அரசின் மூலம் அந்த இடத்தைப் பெற்று, அதில் குடியிருந்து வரும் ஏழை-எளிய மக்களுக்கு குடியிருப்பு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் வீரநாயக்கன்தட்டு மக்கள் அத்தியாவசிய பொருள் வாங்க முத்தையா புரத்துக்கு 5கி.மீ செல்ல வேண்டிய நிலை உள்ளது. அந்தப் பகுதியில் 150 குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். ஆகவே மாவட்ட கலெக்டர் அந்தப் பகுதியில் நகரும் கூட்டுறவு கடை மூலமோ அல்லது வாரம் 2 நாட்கள் அத்தியாவசிய பொருட்கள் அந்தப் பகுதிக்கு சென்று விநியோகம் செய்யவோ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    தூத்துக்குடி மாநகரத்தில் மணிநகர், அண்ணாநகர்-1, டூவிபுரம் பகுதிக்குட்பட்ட ரே‌ஷன் கடை போல்பேட்டை பகுதி மார்க்கெட்டிங் சொசைட்டி பகுதியில் அமைந்துள்ளதால் மக்கள் அதிக தூரம் சென்று அத்தியாவசிய பொருட்கள் வாங்க மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆகவே போல்பேட்டை மார்க்கெட்டிங் சொசைட்டியில் உள்ள கடையை டூவிபுரத்தில் உள்ள மகளிர்க்குழு வணிக வளாகத்தில் காலியாக உள்ள கடைகளில் மாற்றி அமைக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தூத்துக்குடியில் நாளை மறுநாள் அகில இந்திய வாலிபால் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியை கீதாஜீவன் எம்எல்ஏ தொடங்கி வைக்கிறார். #geethaJeevan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் 4-ம் ஆண்டு மணிராஜ் நினைவு கோப்பைக்கான அகில இந்திய அளவிலான பள்ளி மாணவ- மாணவிகள் பங்குபெறும் மின்னொளி கைப்பந்து போட்டி வருகிற 22-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடக்கிறது.

    தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் நடைபெறும் முதல் நாள் போட்டியை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, உஷா அங்கோ, பால கிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    இதையடுத்து 25-ந் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு சமத்துவ மக்கள் கழக மாநிலத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், நாம் இந்தியர் கட்சி நிறுவனத்தலைவர் ராஜா, முத்தையா குருமூர்த்தி, மாஸ்டர் மெர்வின் மணிராஜ் ஆகியோர் பரிசுகள் வழங்குகிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை மணிராஜ் நினைவு வாலிபால் கிளப் தலைவர் ராஜ்குமார், செயலாளர் ராஜசேகர், பொருளாளர் கணேசன் ஆகியோர் செய்து வருகின்றனர். #geethaJeevan
    தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவில் கொடைவிழா நடைபெற்றது. இதில் பேசிய கீதாஜீவன் எம்.எல்.ஏ. இளைஞர்கள் நல்லவழியில் செல்ல வேண்டும் அறிவுரை வழங்கினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மேலசண்முகபுரம் முனியசாமி கோவில் கொடைவிழா நடைபெற்றது. விழாவில் கீதாஜீவன் எம்.எல்.ஏ கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தார். பின்னர் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியை வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன்பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

    அப்போது கீதாஜீவன் எம்.எல்.ஏ பேசுகையில்,'' இளைஞர்கள் நல்லவழியில் செல்ல வேண்டும். அதுவும் ஆன்மீக பணியில் ஈடுபடுவது நல்ல காரியம் கோவில் விழாவில் ஓற்றுமையுடன் அனைவரும் பணியாற்றி எதிர்வரும் காலத்தில் தி.மு.க.விற்கு துணை நிற்க வேண்டும்" என்றார். 

    விழாவில் பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பர்ட், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், வட்டச்செயலாளர் நடராஜன், பிரதிநிதி மதியழகன், கோவில் தலைவர் முருகேசன், செயலாளர் அய்யாச்சாமி, பொருளாளர் சீனிவாசன், துணைத்தலைவர் சண்முகவேல்,கௌரவ ஆலோசகர் சண்முகசுந்தரம், வக்கீல் நாகராஜ், நிர்வாக கமிட்டியினர் வெற்றிவேல், முருகேசன், வேல்ராஜ், பாக்கியசெல்வன், முருகேஸ்வரன், மோகன், அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் சொத்து வரி உயர்வை கண்டித்து நாளை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கீதாஜீவன் எம்.எல்.ஏ.தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி, வீட்டு வரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது.

    இந்த வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும என்று தமிழக அரசை வலியுறுத்தி நாளை(வெள்ளிக்கிழமை) மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    அதன்பேரில் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் எனது(கீதாஜீவன் எம்.எல்.ஏ.) தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதே போன்று கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு நகர செயலாளர் கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 

    இந்த ஆர்ப்பாட்டங்களில் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர ஒன்றிய, பேரூர் பகுதி செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    தூத்துக்குடியில் புதிய திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கீதாஜீவன் எம்.எல்.ஏ பார்வையிட்டார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து தூத்துக்குடி மாநகராட்சி வார்டு 3 ராஜகோபால்நகர் 5வது மெயின் சாலை ரூ.27.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல அன்னை தெரசாநகர் 3வது தெருவில் ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கப்படுகிறது. மேலும் லூர்தம்மாள்புரம் மற்றும் வெற்றிவேல்புரத்தில் கழிவுநீர் கால்வாய் மற்றும் பம்ப்ரூம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 

    இந்த பணிகளை கீதாஜீவன் எம்.எல்.ஏ பார்வையிட்டார். அப்போது மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் தொம்மை சேசுவடியான், வட்ட செயலாளர் தினகரன், கருப்பசாமி, ரவிசந்திரன், பொன்னுச்சாமி மற்றும் மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் நிர்மல் மற்றும் தொ.மு.ச தலைவர் மரிய பிரான்சிஸ் ராமர், சம்சுதீன், மரிய அந்தோணி, ஜாண், ஜபார், சரவணன், ஜெயபிரகாஷ், சிலுவை சந்தியாகு ஆகியோர் உடனிருந்தனர்.
    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட கீதாஜீவன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் பொதுமக்கள் அணி அணியாக திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தூத்துக்குடி எம்.எல்.ஏ. கீதாஜீவனும் போராட்டத்தில் இறங்கினார். இதற்காக தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் இருந்து கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

    தூத்துக்குடி 4-ம் கேட் குறிஞ்சிநகர் பகுதியில் வரும் போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தி.மு.க.வினர் தொடர்ந்து பேரணியாக செல்ல முயன்றனர். இதையடுத்து கீதாஜீவன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    ×