search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new project"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை ரோட்டில் வீசிச் செல்வதால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிக்கிறது.
    • தமிழகம் முழுவதும் அனைத்து மதுக்கடைகளிலும் ஏப்ரல் முதல் செயல்படுத்தும் பணியில் டாஸ்மாக் ஈடுபட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் 4820 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. மது பிரியர்கள் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை ரோட்டில் வீசிச் செல்வதால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிக்கிறது.

    இதைத்தொடர்ந்து நீதி மன்ற உத்தரவின்படி காலி மது பாட்டில்களை மதுக் கடைகளில் திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் முடிவு செய்தது. இந்த திட்டம் தற்போது பரீட்சார்த்த முறையில் நீலகிரி, பெரம்பலூர், கோவை, தர்மபுரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.

    அந்த மாவட்டங்களில் மதுபானங்கள் விற்கும் போது அதிகபட்ச சில்லறை விலையுடன் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டில்களை மதுக்கடையில் கொடுத்தவுடன் 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும்.

    இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து மதுக்கடைகளிலும் ஏப்ரல் முதல் செயல்படுத்தும் பணியில் டாஸ்மாக் ஈடுபட்டுள்ளது. அந்த அடிப்படையில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு 7 மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த டெண்டர் விடப்பட்டுள்ளது.

    டெண்டர் எடுக்கின்றவர்கள் காலி பாட்டில்களை திரும்ப பெற்று மீண்டும் பயன்படுத்த மொத்தமாக மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும். டாஸ்மாக் மதுக்கடைகளில் திரும்ப கொடுக்கப்படும் ஒவ்வொரு காலி பாட்டில்களுக்கும் ரூ.10 வழங்கப்படும்.

    இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அனைத்து மதுக்கடைகளிலும் ஒப்பந்த நிறுவனங்கள் வழியாக மதுபாட்டில் திரும்ப பெறப்படும். இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. 28-ந்தேதி டெண்டர் இறுதி செய்யப்பட்டு காலி மதுபாட்டில் திரும்ப பெறப்படும் திட்டம் தொடங்கப்படும்" என்றார்.

    தூத்துக்குடியில் புதிய திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கீதாஜீவன் எம்.எல்.ஏ பார்வையிட்டார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து தூத்துக்குடி மாநகராட்சி வார்டு 3 ராஜகோபால்நகர் 5வது மெயின் சாலை ரூ.27.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல அன்னை தெரசாநகர் 3வது தெருவில் ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கப்படுகிறது. மேலும் லூர்தம்மாள்புரம் மற்றும் வெற்றிவேல்புரத்தில் கழிவுநீர் கால்வாய் மற்றும் பம்ப்ரூம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 

    இந்த பணிகளை கீதாஜீவன் எம்.எல்.ஏ பார்வையிட்டார். அப்போது மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் தொம்மை சேசுவடியான், வட்ட செயலாளர் தினகரன், கருப்பசாமி, ரவிசந்திரன், பொன்னுச்சாமி மற்றும் மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் நிர்மல் மற்றும் தொ.மு.ச தலைவர் மரிய பிரான்சிஸ் ராமர், சம்சுதீன், மரிய அந்தோணி, ஜாண், ஜபார், சரவணன், ஜெயபிரகாஷ், சிலுவை சந்தியாகு ஆகியோர் உடனிருந்தனர்.
    ×