search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மது அருந்திய காலி பாட்டில்களை இனி ரோட்டில் தூக்கி வீசாதீங்க- டாஸ்மாக் புதிய திட்டம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மது அருந்திய காலி பாட்டில்களை இனி ரோட்டில் தூக்கி வீசாதீங்க- டாஸ்மாக் புதிய திட்டம்

    • மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை ரோட்டில் வீசிச் செல்வதால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிக்கிறது.
    • தமிழகம் முழுவதும் அனைத்து மதுக்கடைகளிலும் ஏப்ரல் முதல் செயல்படுத்தும் பணியில் டாஸ்மாக் ஈடுபட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் 4820 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. மது பிரியர்கள் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை ரோட்டில் வீசிச் செல்வதால் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிக்கிறது.

    இதைத்தொடர்ந்து நீதி மன்ற உத்தரவின்படி காலி மது பாட்டில்களை மதுக் கடைகளில் திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் முடிவு செய்தது. இந்த திட்டம் தற்போது பரீட்சார்த்த முறையில் நீலகிரி, பெரம்பலூர், கோவை, தர்மபுரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.

    அந்த மாவட்டங்களில் மதுபானங்கள் விற்கும் போது அதிகபட்ச சில்லறை விலையுடன் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டில்களை மதுக்கடையில் கொடுத்தவுடன் 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும்.

    இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து மதுக்கடைகளிலும் ஏப்ரல் முதல் செயல்படுத்தும் பணியில் டாஸ்மாக் ஈடுபட்டுள்ளது. அந்த அடிப்படையில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு 7 மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த டெண்டர் விடப்பட்டுள்ளது.

    டெண்டர் எடுக்கின்றவர்கள் காலி பாட்டில்களை திரும்ப பெற்று மீண்டும் பயன்படுத்த மொத்தமாக மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும். டாஸ்மாக் மதுக்கடைகளில் திரும்ப கொடுக்கப்படும் ஒவ்வொரு காலி பாட்டில்களுக்கும் ரூ.10 வழங்கப்படும்.

    இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அனைத்து மதுக்கடைகளிலும் ஒப்பந்த நிறுவனங்கள் வழியாக மதுபாட்டில் திரும்ப பெறப்படும். இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. 28-ந்தேதி டெண்டர் இறுதி செய்யப்பட்டு காலி மதுபாட்டில் திரும்ப பெறப்படும் திட்டம் தொடங்கப்படும்" என்றார்.

    Next Story
    ×