search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காணொலி காட்சி"

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
    • தொலையாவட்டம் பகுதியில் ரூ.3 கோடியே 5 லட்சத்தில் கட்டப்பட்ட கிள்ளியூர் தாலுகா அலுவலக கட்டிடத்தையும் திறந்தார்

    திருவட்டார் :

    குமரி மாவட்டம் கல்குளம் தாலுகா கடந்த 2019-ம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டது. திருவட்டாரை மையமாக வைத்து புதியதாக திருவட்டார் தாலுகா உதயமானது.

    இதனையடுத்து திருவட்டாரில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளா கத்தில் உள்ள பழைய அலுவலக கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு தாலுகா அலுவலகமாக செயல்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் திருவட்டார் தாலுகா அலுவலகத்துக்கு சொந்தமாக அலுவலக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுத்தார். திருவட்டார் தாலுகாவின் மைய பகுதியான குலசேகரம், செருப்பாலூர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ப்பட்டது.

    இங்கு கட்டிடம் கட்ட ரூ.3.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகளை கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார். அதோடு அலுவலக வளாகத்தில் சுற்றுச்சுவர், நுளைவு வாயில், தாலுகா குடியிருப்பு அமைக்க கூடுதலாக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் அலுவலக கட்டிடப்பணி கடந்த ஜனவரி மாதம் நிறை வடைந்தது.

    இதனையடுத்து புதிய அலுவலக கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் குத்துவிளக்கு ஏற்றி அலுவலக செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வுக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலை வகித்தார். தாசில்தார் முருகன் வரவேற்றார். திருவட்டார் தாலுகாவின் முதல் தாசில்தார் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அரசு வழக்கறிஞர் ஜாண்சன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோதங்கராஜ், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் புஷ்பலீலா ஆல்பன், பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள் ஜெயந்தி ஜேம்ஸ், ஜோஸ் எட்வர்ட், பெனிலா ரமேஷ், அகஸ்டின், சுஜிர் ஜெபசிங்குமார், பொன்ரவி, பால்சன், கெப்சிபாய் றூஸ், விமலா சுரேஷ், லில்லிபாய் சாந்தப்பன், ரெஜினி விஜிலா பாய், தங்கவேல், தேவதாஸ், ஸ்டாலின்தாஸ், பேரூராட்சி செயல் அலுவலர்கள் எட்வின் ஜோஸ், ஜெயமாலினி, விஜயகுமார் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    தொலையாவட்டம் பகுதியில் ரூ.3 கோடியே 5 லட்சத்தில் கட்டப்பட்ட கிள்ளியூர் தாலுகா அலுவலக கட்டிடத்தையும் முதல-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தாலுகா அலுவலக கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. பங்கேற்று குத்து விளக்கு ஏற்றினார்.

    பின்னர் அவர் பேசுகையில், பொதுமக்களின் நலன் கருதி கிள்ளியூர் தனி வருவாய் வட்டமாகவும், திருவட்டார் தனி வருவாய் வட்டமாகவும் உருவாக்க வேண்டும் என சட்டசபையில் பேசியதோடு, அப்போதைய முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்ததன் விளைவாக எனது கோரிக்கையை ஏற்று கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி தொலையாவட்டத்தில் கால்நடை துறைக்கு சொந்தமான ஒரு பழைய அரசு கட்டிடத்தில் தற்காலிக அலுவலகமாக கிள்ளியூர் தாலுகா அலுவலகம் திறக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த இந்த அலுவலகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டிடத்தை முதல-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிரிஸ்டல் ரமணிபாய், கொல்லங்கோடு நகராட்சி தலைவி ராணி ஸ்டீபன், கிள்ளியூர் பேரூராட்சி தலைவி ஷீலா சத்யராஜ், கீழ்குளம் பேரூராட்சி தலைவி சரளா கோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கத்தார் நாட்டுடனான வர்த்தகத்திற்கு இந்திய தூதரகம் மூலம் ஏற்பாடு
    • ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் காணொலி வாயிலாக பங்கேற்பு

     தோஹா:

    இந்திய வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கத்தார் நாட்டுடனான வர்த்தகம் குறித்து தோஹாவில் உள்ள இந்திய தூதரகமும் மற்றும் இந்திய வர்த்தக தொழில்துறை குழுமம் இணைந்து இந்திய ஏற்றுமதியாளர்கள் சந்திப்பை நடத்தியது.

    புவிசார் குறியீடு பெற்றுள்ள வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி குறித்து காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை குழுமத்தைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்திய தூதரக மற்றும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு, ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தின் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

    இந்த சந்திப்பின்போது பாசுமதி அரிசி, மாம்பழம், மாதுளம்பழம், வழகிழக்கு பிராந்தியப் பொருட்கள் மற்றும் பல்வேறு பதப்படுத்தப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புக் குறித்து ஏற்றுமதியாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய கத்தார் நாட்டிற்கான இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டல், இந்தியா- கத்தார் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவரித்தார்.

    தொடர்ந்து பேசிய மத்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணைய தலைவர் அங்கமுத்து, புவிசார் குறியீடு உடைய பொருட்கள் மற்றும் இயற்கை தயாரிப்புகளை ஊக்கப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.3.22 கோடியில் குடியிருப்பு வளாகம் கட்டும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
    • பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.3.22 கோடி மதிப்பீட்டில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு குடியிருப்பு வளாகம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    இதில் சாத்தூர் ஒன்றிய சேர்மன் நிர்மலா கடற்கரை ராஜ், சாத்தூர் ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றினர். இருக்கன்குடி பஞ்சாயத்து தலைவர் செந்தாமரை, கோவில் நிர்வாக அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு பூசாரிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கோவில் வளாகத்தில் உபயதாரர் நிதி ரூ.43.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட உள்துறை அலுவலகம், பாதுகாப்பு அறை மற்றும் வாகன மண்டபம் ஆகியவற்றை சேர்மன் மற்றும் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தனர்.

    ×