search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரிகளுக்கு விடுமுறை"

    • கனமழையின் காரணமாக நடவடிக்கை
    • கலெக்டர் அறிவிப்பு

    ேவங்கிக்கால்:

    கனமழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கலெக்டர் பா.முருகேஷ் விடுமுறை அறிவித்துள்ளார்.

    பருவமழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை தாக்கம் அதிகம் உள்ள செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்தார்.

    • 24 ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லை
    • ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விட விவசாயிகள் வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களில் கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்தது.பின்னர் மேக மூட்டத்துடன் மந்தமான தட்பவெப்ப நிலை காணப்பட்டது.

    இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராணிப்பேட்டை வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக சாரல் மழை பெய்தது.

    மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் உத்தரவிட்டார்.

    வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்தது.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் கால்வாய் பணிகளின் காரணமாக சீரமைக்கப்படாத தெருக்களில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.

    அதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது‌ மேகம் மந்தமாக காணப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 101 ஏரிகள் உள்ளன. 12 ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பி உள்ளது. 24 ஏரிகளுக்கு நீர்வரத்து கொஞ்சம் கூட இல்லை. மற்ற ஏரிகளில் 20 முதல் 50 சதவீதம் வரை தண்ணீர் இருப்பு உள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 49 ஏரிகளில் 29 ஏரிகள் நிரம்பிவிட்டன. அங்கு 4 ஏரிகளுக்கு மட்டும் தான் நீர்வரத்து இல்லை.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 369 ஏரிகளில் 125 ஏரிகள் நிரம்பி வழிகிறது. 145 ஏரிகளில் 50 சதவீதம் வரை தண்ணீர் உள்ளது. இந்த ஏரிகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. 30 ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லை.

    பாலாற்றில் ஓராண்டுக்கு மேலாக தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

    பாலாறு கவுண்டன்யா ஆறு உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி தர வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை பரவலாக சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் உள்ள பெரிய அணையான சாத்தனூர் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மழை காரணமாக இன்று காலை பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகள் நனைந்தபடி சென்றனர்.

    • சிதம்பரத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்தது மழை.
    • ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.

    வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய உள்ளதால் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் 14-ந் தேதி வரை பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. சிதம்பரத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் நகர பகுதியில் பெரும்பாலான சாலைகளை மழை நீர் மூழ்கடித்தது.

    இந்நிலையில் இன்று 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர், நீலகிரி, மயிலாடுதுறை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோவை, கரூர், பெரம்பலூர், மாவட்டங்களில் பள்ளிக் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் சேலம், தருமபுரி, தேனி, திண்டுக்கல், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    • புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை
    • சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டி தற்போது நிலை கொண்டுள்ளது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நாளை (சனிக்கிழமை) நகர்ந்து வரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) வரை பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    மேலும், இன்று காஞ்சீபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதி கனமழை வரை பெய்யக்கூடும். இதனால் இந்த மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 15 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மிக கனமழையும்.

    தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து தமிழகத்தில் விழுப்புரம் உள்பட 11 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், பெரம்பலூர்,மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும்  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கனமழை காரணமாக நடவடிக்கை
    • முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

    வேலூர்:

    தமிழக முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை செய்யாறு, வெம்பாக்கம் வந்தவாசி, சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.

    செய்யாறு நகர பகுதிகளில் மழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது.

    மழையின் காரணமாக செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஓரு நாள் மட்டும் விடுமுறை அளித்து திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.

    காலையில் மழையையும் பொருட் படுத்தாமல் பள்ளிகளுக்குச் சென்ற மாணவ மாணவிகள் விடுமுறை அறிவித்த பிறகு வீடு திரும்பினர்.

    நகரப் பகுதிகளில் சில மாணவர்கள் ஆரவாரம் செய்து சென்றதை காண முடிந்தது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மற்ற இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மேகம் மந்தமாக காணப்பட்டது. இரவில் கடும் பனி கொட்டியது. ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை மட்டும் பெய்தது. கடும் பனி காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    ஓச்சேரி முதல் நாட்றம்பள்ளி வரை சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் காலையில் வாகனங்கள் விளக்கு போட்டபடி சென்றன. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    ×