search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "schools colleges"

    • சிதம்பரத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்தது மழை.
    • ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.

    வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய உள்ளதால் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் 14-ந் தேதி வரை பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. சிதம்பரத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மழையால் நகர பகுதியில் பெரும்பாலான சாலைகளை மழை நீர் மூழ்கடித்தது.

    இந்நிலையில் இன்று 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர், நீலகிரி, மயிலாடுதுறை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோவை, கரூர், பெரம்பலூர், மாவட்டங்களில் பள்ளிக் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் சேலம், தருமபுரி, தேனி, திண்டுக்கல், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    ×