search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்பாக்கம் அணுமின் நிலையம்"

    • நாளை பிரதமர் மோடி வரவுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • சென்ற முறை மோடி தமிழ்நாட்டிற்கு வந்த போதும் கூட தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு நாளை பிரதமர் மோடி வரவுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி மீண்டும் நாளை தமிழகம் வருகிறார். ஒரே வாரத்தில் 2-வது முறையாக தேர்தல் பிரசாரத்துக்காக வருகை தரும் அவர் இந்த முறை சென்னையில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    இதற்காக மகாராஷ்டிராவில் இருந்து புறப்பட்டு நாளை மதியம் 1.15 மணி அளவில் அவர் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.

    விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்து முதலில் அவர் கல்பாக்கம் சென்றடைகிறார். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பின்னர் இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கல்பாக்கத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.

    இதன் பிறகு விமான நிலையத்திலிருந்து காரில் புறப்படும் பிரதமர் மோடி நாளை மாலை 4.30 மணியிலிருந்து 5 மணிக்குள் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலை சென்றடைகிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி நாளை இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து தெலுங்கானாவுக்கு புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் மோடி கல்பாக்கம் வருவதை ஒட்டி, "மாமல்லபுரம், கொக்கிலிமேடு, மெய்யூர், சட்ராஸ், புதுபட்டினம், உய்யாளி குப்பம் போன்ற பத்து கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று மாலை 3 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை மீன்பிடிக்க கடலுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக" மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்ற முறை மோடி தமிழ்நாட்டிற்கு வந்த போதும் கூட தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஐ.டி.ஐ மாணவர்களுக்கு இலவச தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • இந்தப் பயிற்சிக்கு வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின் நிலையத்தில் ஐ.டி.ஐ., தேர்வு பெற்ற கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், கார்பென்டர், சிவில் டிராப்ட்ஸ்மேன், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக், எலக்ட்ரீசியன், டர்னர், பிளம்பர், வெல்டர் உள்ளிட்ட ஐ.டி.ஐ பிரிவு தொழில்களில் 96 பேருக்கு இலவச தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    கூடுதல் விபரங்களை www.npcil.nic.in என்ற இணையத்தில் பார்த்து பதிவுசெய்ய அணுமின் நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

    • நடுநிலை பள்ளிக்கு ரூ.1.15 கோடி ரூபாய் செலவில் நான்கு வகுப்பறை கட்டிடம் கட்டப்படுகிறது
    • கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி கொக்கிலமேடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு ரூ.1.15 கோடி ரூபாய் செலவில் நான்கு வகுப்பறை கட்டிடம் கட்டப்படுகிறது.

    இதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் அணுமின் நிலைய இயக்குனர் சுதிர் பாபன்ராவ் ஷெல்கே, முதன்மை கண்காணிப்பாளர் செந்தாமரக்சன், சுபா மூர்த்தி, ஜெகன், எடையூர் ஊராட்சி தலைவர் சாமுண்டீஸ்வரி, பள்ளி தலைமை ஆசிரியை கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • முதல் அணு உலை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது.
    • இரண்டாவது அணு உலையில் இன்று அதிகாலை மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை அணுமின் நிலையத்தில் இரண்டு அணுஉலை உள்ளது. இதில் தலா 220 மெகாவாட் வீதம் 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகிவந்தது. அதில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் முதல் அணு உலை பழுதடைந்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இன்று வரை அது இயங்கவில்லை.

    இந்நிலையில் இயங்கி வந்த இரண்டாவது அணு உலையில் நேற்று நள்ளிரவில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது., அதிகாரிகள் சரி செய்ய முயற்சித்து முடியாததால், இன்று அதிகாலை மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி ஆகிவந்த 220 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கபட்டது. ஒரிரு நாட்களில் சரியாகி விடும் என அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் கட்டப்பட்டது.
    • அணுமின் நிலைய இயக்குநர் எஸ்.பீ.ஷெல்கே திறந்து வைத்தார்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில், அப்பகுதி நகரியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு 1.11 கோடி ரூபாய் செலவில் இரண்டு மாடி வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. அதை மாணவர்களின் பயன்பாட்டிற்கு அணுமின் நிலைய இயக்குநர் எஸ்.பீ.ஷெல்கே திறந்து வைத்தார்.

    விழாவில் புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் காயத்ரி தனபால், நிலைய கண்காணிப்பாளர் செந்தாமரக்சன், முன்னாள் எம்.எல்.ஏ தனபால், பள்ளி தலைமை ஆசிரியை லலிதா, அணுமின் நிலைய சமூக பொறுப்பு குழுவினர், ஆசிரியர், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • வகுப்பறை கட்டிடங்களை அணுமின் நிலைய இயக்குநர் சுதிர் பாபன்ராவ் ஷெல்கே திறந்து வைத்தார்.
    • முதன்மை கண்காணிப்பாளர் செந்தாமரக்சன், சி.எஸ்.ஆர் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில், மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 95 லட்சம் ரூபாய் செலவில் நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டது. இதேபோல் கூவத்தூர் அடுத்த கடலூர் மீனவர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு 55 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டது.

    இந்த கட்டிடங்களை அணுமின் நிலைய இயக்குநர் சுதிர் பாபன்ராவ் ஷெல்கே, பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். முதன்மை கண்காணிப்பாளர் செந்தாமரக்சன், சி.எஸ்.ஆர் நிர்வாகிகள் சுபாமூர்த்தி, வாசுதேவன், ஜெகன், சின்ன கோவிந்தன், கருணா மூர்த்தி, ஊராட்சி தலைவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    • கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அணுசக்தி துறை அவசர நிலை ஒத்திகை நடைபெற்றது.
    • மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களை பாதுகாப்பாக பரபரப்புடன் வெளியில் அனுப்பினர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், புதியதாக கட்டி மின் உற்பத்திக்கு தயாராக இருக்கும் பாவினி அதிவேக அணுஉலை, பாபா அணு ஆராய்ச்சி மையம் போன்ற பிரிவுகள் இந்திய ராணுவம் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு கட்டுப்பாட்டில் ஒரே வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் ஏதேனும் அணுக்கசிவு போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அங்கு பணிபுரியும் அனைத்து பிரிவு ஊழியர்களும் எப்படி வெளியேற வேண்டும் என்பது குறித்த ஒத்திகை மற்றும் அதற்கான பயிற்சி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வளாகத்தில் நடைபெறும்.

    இந்த நிலையில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அணுசக்தி துறை அவசர நிலை ஒத்திகை நடைபெற்றது. முதலில் அவசர ஒலி எழுப்பப்பட்டது. பணி நேரம் முடிவதற்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களை பாதுகாப்பாக பரபரப்புடன் வெளியில் அனுப்பினர். இதை பார்த்த சதுரங்கபட்டினம், வெங்கம்பாக்கம் பகுதி மக்கள் பதட்டம் அடைந்தனர். பின்னர் இது ஒத்திகை என்பது தெரிந்ததும் நிம்மதி அடைந்தனர்.

    ×